குப்தப் பேரரசு - பாகம் 2

குப்தர்கள் தொடர்ச்சி

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

 

சமூகம் (ம) பொருளாதார நிலை

ü  காமாந்தகாரால் எழுதப்பட்ட நிதிசாரம் என்னும் நூல் அரசுக் கருவூலத்தில் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிமுறைகளையும் குறிப்பிடுகிறது.

ü  மேலும் இந்நூல் மௌரியர் கால நூலான அர்த்தசாஸ்திரத்துடன் ஒப்பிடத்தக்கது.

ü  வேளாண்மையே முக்கியத் தொழிலாக விளங்கியது.

ü  நெல் கோதுமை பார்லி போன்ற தானியங்கள் பயரிடப்பட்டன.

ü  காளிதாசர் மூலம் தென்பகுதியானது மிளகு, ஏலம் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றிருந்தது என்பது தெரியவருகின்றது.

ü  பழ மரங்கள் வளர்ப்பது குறித்து வராகமிகிரர் விரிவான அறிவுரைகளை தந்துள்ளார்.

ü  விளைச்சல் மற்றும் நிலத்தின் தன்மை அடிப்படையில் நிலம் 5 வகையாகப் பிரிக்கப்பட்டது.

பாசனம்

ü  குப்தர் காலத்தில் புகழ்பெற்ற ஏரி குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த சுதர்சனா ஏரி

ü  நாரத ஸ்மிருதி என்ற நூலில் வயல்களை வெள்ளங்களிலிருந்து பாதுகாத்த ந்தியா, பாசனத்திற்கு உதவிய கரா என்று இருவகை அணைக்கரைகள் குறிப்பிடப்படுகின்றன.

ü  தண்ணீர் தேங்குவதைத் தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்ததாக அமரசிம்மர் குறிப்பிடுகிறார்.

குப்தர்கள் கால பொருளாதார நிலை

ü  குப்தர்கள் காலத்தில் சிறந்து விளங்கிய தொழில்கள் -  உலோகத் தொழில், சுரங்க தொழில்.

ü  இவற்றைப் பற்றிய செய்திகளை வராகமிகிரர், காளிதாசர் குறிப்பிட்டுள்ளனர்

ü  பீகார் - இரும்பு படிவுகள்; இராஜஸ்தான் - செம்பு படிவுகள்

ü  வணிகர்கள் வணிக், சிரேஷ்டி சார்த்தவாகா

ü  வணிக், சிரேஷ்டி - ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்

ü  சார்த்தவாகா - எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்

ü  நாரத ஸ்மிருதி, பிரகஸ்பதி ஸ்மிருதி ஆகியவை வணிக குழுக்களில் அமைப்பு செயல்பாடு குறித்து விவரிக்கின்றன

ü  மண்டசோர் கல்வெட்டுச் சான்றின்படி, வணிகக் குழுக்கள் வங்கிகளின் பங்கினை ஆற்றியதாகவும் அறிய முடிகிறது.

ü  குப்தர் கால முக்கிய வணிக நகரங்கள் - வாரணாசி, பாடலிப்புத்திரம், மதுரா, உஜ்ஜைனி

ü  இந்தியாவில் உள்ள மேற்கு பகுதி கடற்கரை துறைமுகங்கள் -  கல்யாண், மங்களூர், மலபார்

ü  கிழக்கு கடற்கரையில் முக்கியமான வணிக மையம் தாமிரலிப்தி என்று பாஹியான் குறிப்பிடுகிறார்

ü  நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது

ü  குப்தர்காலத்தில் அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் முறை நடைமுறையில் இருந்தது.

நிலத்தின் பிரிவுகள்

v  ஷேத்ரா - வேளாண்மைக்கு உகந்த நிலங்கள்

v  கிலா - தரிசு நிலங்கள்

v  வஸ்தி - குடியிருப்பு நிலம்

v  அப்ரகதா - வனம் (அ) காட்டு நிலம்

v  கபதசரஹா - மேய்ச்சல் நிலங்கள்

வரிகள்:-

ü  விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு மக்களிடம் வரியாக பெறப்பட்டது.அவ்வரி பாகா எனப்பட்டது.

ü  தங்க நாணயங்கள் வைத்திருப்பவர் செலுத்தும் வரி - ஹிரண்யா.

ü  கலப்பை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் கட்ட வேண்டிய வரி - ஹலிவகரா

ü  கிராமங்களில் வாழ்வோர் மீதான விதிக்கப்படும் வரி - கரா

ü  காற்றுக்கும் ஆவிகளுக்கும் செய்ய வேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள் - வாத-பூதா

ü  வர்த்தகர்கள் நகரத்திற்கும் துறைமுகத்திற்கு கொண்டு வரும் ணிக சரக்குகளில் அரசர்கான பங்கு - சுல்தா

ü  நிலப்பதிவின்போது விதிக்கப்படும் விற்பனை வரி - கிளிப்தா ; உபகிளிப்தா

ü  ஆரம்பத்தில் விருப்பப்பட்டு வழங்கப்பட்ட வரியாக இருந்து பின்னர் கட்டாய வரியாக மாற்றப்பட்ட ஒரு ஒடுக்குமுறை வரி - பலி.

ü  உதியங்கா - காவல் வரியாகவோ () நீர் வரியாக இருக்கலாம்.

ü  உபரிகரா - இது ஒரு கூடுதல் வரி

கலையும் கட்டடக் கலையும்

ü  கட்டுமானக் கோயில்களை முதன்முதலில் கட்டியவர்கள் குப்தர்களே

ü  கட்டுமானக் கோயில்களில் பின்வரும் ஐந்து அம்சங்கள் காணப்படுகின்றன.அவை:

Ø  தட்டையான கூரை கொண்ட சதுரக்கோவில்கள்

Ø  விமானத்துடன் (இரண்டாவது மாடி) கூடிய தட்டையான கூரை கொண்ட சதுரக்கோயில்கள்

Ø  வளைக்கோட்டு கோபுரம் (சிகரம்) கொண்ட கோயில்கள்

Ø  செவ்வகக்கோவில்கள்

Ø  வட்டவடிவக் கோவில்கள்

ü  இக்கோவில்கள், வட இந்தியாவில் நாகர கட்டடக் கலைப் பாணியிலும்,தென்னிந்தியாவில் திராவிடக் கலை கட்டடக்கலைப் பாணியிலும் பின்னர் கட்டப்பட்டன.

ü  தியோகர் என்ற இடத்தில் பஞ்சாயதன முறைப்படி தசாவதாரக் கோயில் கட்டப்பட்டது.

ü  கான்பூர் அருகில் பிதார்கன் என்ற இடத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட கோவில் குப்தர்களின் கட்டடக் கலைக்கு சான்றாகத் திகழ்கிறது.

ü  குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் நான்கு வகை மண்டபங்கள் இடம்பெற்றிருந்தன.

ü  மிகவும் குறிப்பிடத் தகுந்த முக்கியத்துவம் வாய்ந்த குடைவரை கோவில்கள் காணப்படும் இடங்கள் பின்வருமாறு :

Ø  அஜந்தா, எல்லோரா - மகாராஷ்டிரா

Ø  பாக் - மத்திய பிரதேசம்

Ø  உதயகிரி குகைகள் - ஒடிசா

சிற்பக்கலை

ü  குப்தர்களின் உலோகச் சிற்பத்திற்கு இரு சிறந்த எடுத்துக்காட்டுகள்

1.   நாளந்தாவில் உள்ள 18 அடி உயரமுள்ள புத்தரின் செப்புச் சிலை.

2.   சுல்தான் கன்ச் என்னும் இடத்திலுள்ள ஏழரை அடி உயரம் உள்ள புத்தரின் உலோகச் சிற்பம்

ü  கல் சிற்பக்கலைக்கு சிறந்த சான்று சாரநாத்தில் காணப்படும் நிற்கும் நிலையில் உள்ள புத்தர் சிலை

ü  புராண சிற்பங்களில் மிக அழகானது உதயகிரி குகைகளின் நுழைவாயிலில் இருக்கும் வராக அவதாரச் சிலை

ü  மிகச்சிறந்த ஸ்தூபிகள் காணப்படும் இடங்கள் :

v  சமத் - உத்திரப் பிரதேசம்

v  ரத்னகிரி - ஒடிசா

v  மிர்பூர்கான் - சிந்து

ஓவியங்கள்:

ü  குப்தரின் சுவரோவியங்கள் காணப்படும் இடங்கள் - அஜந்தா, பாக், பதாமி

ü  அஜந்தாவின் சுவர் ஓவியங்கள் ஃபிரெஸ்கோ எனப்படும் வகையைச் சார்ந்தது அல்ல.

ü  ஃபிரெஸ்கோ ஓவியங்கள் சுவரின் பூச்சு ஈரமாக இருக்கும்போதே வரையப்படுபவை.

இலக்கண, இலக்கியம் :-

ü  குப்தர் காலத்தில் மக்களின் பேசும் மொழி -பிராகிருதம்

ü  குப்தர் காலத்தில் பிராகிருத மொழியின் பல்வேறு வடிவங்கள் உருவாகின.

«  மதுரா - சூரசேனி

«  அவல், பந்தல் கண்ட் - அர்த் மாகதி

«  நவீன பீகார் - மாதி

ü  அலுவலக மொழி - சமஸ்கிருதம்

ü  குப்தர்கள் காலத்தில் சமஸ்கிருத இலக்கணத்தின்  வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்த நூல்கள் :

«  பாணினி எழுதிய 'அஷ்டதியாதி'

«  பதஞ்சலி எழுதிய 'மகாபாஷ்யம்'

«  அமரசிம்மரால் தொகுக்கப்பட்ட சமஸ்கிருத சொல் அகராதி - 'அமரகோசம்'

ü  வங்கத்தை சேர்ந்த பௌத்த அறிஞர்கள் சந்திரகோமியரால் படைக்கப்பட்ட சந்திரவியாகரணம் என்னும் இலக்கண நூல்

ü  காளிதாசர் - சாகுந்தலம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்னிமித்திரம், ரகுவம்சம், குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம்.

ü  விசாகதத்தர் - முத்ரா ராக்ஷஸம், தேவி சந்திரகுப்தம்

ü  வாத்ஸ்யாயனர் - காமசூத்திரம்‌.

ü  வராகமிகிரர் - பிருகத் சம்கிதை.

ü  அமரசிம்மர் - அமரகோசம்.

ü  வாக்பட்டர் - அஷ்டாங்க சங்கிரக, அஷ்டாங்க கிருதய சம்ஹிதை (மருத்துவம்)

ü  ஆரியபட்டர் - கணித நூல்கள், வானவியல்

ü  சாமண்டகர் - நீதிசாஸ்திரம்

ü  வீரசேனர் - வியாகரணம்

ü  நகைச்சுவைக்கும்,  சோகத்திற்கும் பெயர்பெற்ற நூலான மிருச்சகடிகம் எனும் நூலை எழுதியவர் - சூத்ரகர்

ü  அர்ச்சுனனுக்கும்,  சிவபெருமானுக்குமிடையே நடைபெற்ற மோதலை கூறும் கதையான கிருதார்ஜீன்யம் என்ற நூலைப் படைத்தவர் -  பாரவி.

ü  காவியதரிசனம்,  தசகுமாரசரிதம் ஆகிய நூல்களை எழுதியவர் - தண்டின்

ü  வாசவதத்தை என்ற நூலை எழுதியவர் - வசுபந்து

ü  குப்தர் காலத்தில் தான், பஞ்சதந்திரக் கதைகள் விஷ்ணுசர்மா என்பவரால் தொகுக்கப்பட்டன.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி (கணிதம்/ வானவியல்/ மருத்துவம்)

ஆரியபட்டர் :-

ü  கணிதம் வானவியல் துறைகளில் சிறந்து விளங்கியவர்.

ü  எழுதிய நூல் - ஆரியபட்டீயம் (பொ.ஆ 499)

ü  ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்ணிற்கு முன்னும் பின்னும் சுழியத்தை பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர்.

ü  கணிதத்தில் இயற்கணிதம், கோணவியல் (ம) வர்க்க மூலத்தை கண்டறிந்தவர்.

ü  சூரிய சித்தாந்தா என்ற நூலில் சூரிய, சந்திர கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார்.

ü  இவர்தான் பூமி உருண்டை வடிவிலானது என்றும், பூமி ஒரு அச்சில் தன்னைத்தானே சுற்றுகிறது என்பதையும் கண்டுபிடித்த முதல் வானவியலாளர்.

வராஹமிகிரர்:

ü  இவரின் பிரஹத் சம்ஹிதா என்ற நூல் வானவியல்,  புவியியல்,  தாவரவியல்,  இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியம் ஆகும்.

ü  ஐந்து வானவியல் அமைப்புகளை கூறும் நூலான பஞ்ச சித்தாந்திகா இவரது  படைப்புகளாகும்.

ü  இவர் எழுதிய பிருஹத் ஜாதகா, ஜோதிடக் கலைக்கு அடிப்படையாக கருதப்படுகிறது.

மருத்துவத்துறை :-

ü  மருத்துவத் துறையில் புகழ்பெற்ற அறிஞர் - தன்வந்திரி. இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவ நிபுணர்.

ü  சாரக்கர் ஒரு மருத்துவ அறிவியல் அறிஞர்

ü  அறுவைச் சிகிச்சை செய்யும் முறையை பற்றி விளக்கிய முதல் இந்தியர் - சுஸ்ருதர்

ü  மருந்துகள் தயாரிப்பதற்கான உலோகங்கள் பாதரசம் (ம) இரும்பு இவற்றின் பயன்பாடு குறித்து வராகமிகிரர் எழுதியுள்ளார்.

ü  இதன் மூலம் குப்தர் ஆட்சிக் காலகட்டத்தில் வேதியியலில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது.

ü  மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றைக் கூறும் மருத்துவ நூல் - நவனிதகம்

ü  விலங்குகளுக்கான ஹஸ்த்யாயுர்வேதா என்ற விலங்குகளுக்கான மருத்துவ நூலை எழுதியவர் - பாலகாப்யா.

ü  மருத்துவத் துறையில் சிறந்த மேதையான வாக்பதர் குப்தர் காலத்தில் வாழ்ந்தவர்.

ü  'அஷ்டாங்க சம்கிரஹம்' (அ) மருத்துவத்தின் 8 பிரிவுகள் என்ற நூலை வாக்பதர் எழுதியுள்ளார்.

நாளந்தா பல்கலைக்கழகம்

ü  மஹாவிஹாரா என்று பெயர் பெற்ற நாளந்தா (இன்றைய பீகார்) இந்தியாவின் பண்டைய மகதப் பேரரசின் இருந்த மிகப்பெரிய பௌத்த மடாலயமாகும்.

ü  இது பொ.ஆ ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து 1,200 வரை புகழ்பெற்ற கல்வி சாலையாக இருந்தது.

ü  நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் 8 மகா பாடசாலைகளும், 3 மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன.

ü  பொ.ஆ 1200இல் டெல்லி சுல்தானியம் அமுலுக்கு அம்சத்தின் பக்தியார் கில்ஜியின் படைகளால் நாளந்தா சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது.

ü  இங்கு யுவான் சுவாங் பௌத்த தத்துவத்தைப் பற்றி பயின்றார்.

ü  1915 இல் நடைபெற்ற அகழ்வாய்வின் போது, 12 ஹெக்டேர் பரப்பில் அமைந்திருந்த, 11 மடாலயங்களும், 6 செங்கல் கோவில்களும், கண்டுபிடிக்கப்பட்டன.

ü  யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

Print Friendly and PDF

Post a Comment

1 Comments