டெல்லி சுல்தான்கள் ஆட்சியின் கீழ் இந்தியா ஒரு முழுமையானத் தொகுப்பு

நிர்வாகம் (ம) சமூக பொருளாதார வாழ்க்கை

டெல்லி சுல்தான்கள் ஆட்சியின் கீழ் இந்தியா

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசாங்கம்

ü  நீதித்துறை தலைவர் - காஸி

ü  உரிமையியல் குறித்த வழக்குகளை விசாரிக்க இஸ்லாமிய தனிநபர் சட்டம் அல்லது ஷாரியா பின்பற்றப்பட்டது.

 

உள்ளாட்சி நிர்வாகம்

ü  மாகாணங்கள் (இக்தாக்கள்) -> மாவட்டங்கள் (ஷிக்தா) -> பர்கானாக்கள் -> கிராமங்கள்

ü  மாகாண ஆளுநர்கள், முக்திகள் (அ) வாலிஸ் என்று அழைக்கப்பட்டனர். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, நில வரி வசூலிப்பது அவர்களின் முக்கிய பணியாகும்.

ü  ஷிக்தாரின் ஆட்சியாளர் - ஷிக் | கிராமத்தின் தலைவர் - அமில் | கிராம கணக்கர் - பட்வாரி

சமூக வாழ்க்கை

ü  இந்தியாவில் இசுலாமியர் ஆட்சியின் முக்கியத்துவம் என்னவென்றால், இசுலாமிய ஆட்சியாளர்களின் சூறையாடல்கள், அபகரிப்புகள் இருந்தாலும், நீண்ட காலம் இந்து மதத்துடன் சக வாழ்வு வாழ்வதற்கான மன ஏற்பு தொடக்க காலம் முதல் காணப்படுவதே.

ü  இந்தியாவை வென்றடக்கிய முகமது கோரி, தமது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லக்ஷ்மியின் உருவத்தைப் பொறித்திருக்கிறார்.

ü  1325இல் முகமது பின் துக்ளக், சமணத் துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று ஒரு ஆணை வெளியிட்டார்.

ü  அவரேகூட ஹோலி பண்டிகையில் பங்கெடுத்ததோடு யோகிகளுடன் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்.

ü  'பல கடவுள் வழிபாட்டாளர்களையும், இந்துக்ளையும், மங்கோலியர்களையும், நாத்திகர்களையும் பஞ்சணையில் அமர வைத்து சகல மரியாதைகளும் செய்கிறார்கள்' என்று இஸ்லாமிய ஆட்சியாளர்கள் குறித்து பரணி வெறுப்புடன் எழுதுகிறார்.

ü  மேலும், "இந்துக்கள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கோயில்கள் கட்டிக்கொள்ளவும், திருவிழாக்கள் நடத்தவும், இசுலாமிய வேலையாட்களை வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ü  இசுலாமியர்களுக்கு நிகராக ராய், ராணா, தாகூர், ஷா, மஹ்தா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப் படுகின்றன" என்றும் பரணி எழுதுகிறார்.

சாதியும், பெண்களும்

ü  இந்தியாவில் ஏற்கனவே அடிமை முறை இருந்தது.

ü  இருப்பினும், 13, 14-ம் நூற்றாண்டுகளில் அடிமைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

ü  ஃபெரோஸ் துக்ளக்கின் முதன்மை அமைச்சரான கான் ஜஹன் மக்பூல் 2,000க்கும் மேற்பட்ட பெண் அடிமைகளை வைத்திருந்தார்.

ü  மேல்தட்டு இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்கள் பர்தா அணிவதை கடைப்பிடிக்க வேண்டியிருந்தது; மேலும் அவர்களின் குடும்ப உறுப்பினர் தவிர வேறெந்த ஆண்களுடனும் எவ்விதத் தொடர்பும் இன்றி ஸெனானாவில் (பெண்கள் வசிப்பிடத்தில்) ஒதுக்கி வைக்கப்பட்டனர்.

ü  இசுலாமிய மரபில், விதவைகள் உடன்கட்டை ஏறும் (சதி) வழக்கம் அறியப்பட்டிருக்கவில்லை.

ü  பெண்கள் படிக்கவும், எழுதவும் கற்பதை இசுலாம் தடைசெய்யவில்லை.

ü  அதே நேரத்தில் அது பலதார மணத்திற்கு ஏற்பளித்தது

பொருளாதாரம்

ü  டெல்லி சுல்தான்கள் டெல்லி வருவாய் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்தனர்.

ü  நிலங்கள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டன. அவை:

1.   இக்தா - அதிகாரிகளுக்கு ஊதியத்திற்கு பதிலாக அளிக்கப்பட்ட மானியங்கள்

2.   காலிசா - அரச நிலங்கள் (சுல்தானின் நேரடி நிர்வாகத்தில் இருந்த நிலங்கள்)

3.   மரபு வழி ஜமீன்தார் நிலங்கள் - சுல்தானுக்குக் கட்டுப்பட்ட நிலங்கள்

4.   இனாம் - சமயத் தலைவர்களுக்கும், சமய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட நிலங்கள்.

ü  மேலும், டெல்லி சுல்தானியத்தின் மிக முக்கிய பொருளாதார மாற்றமாக கருதப்படுவது நிலவரியை பணமாக வசூலித்தது.

ü  இதன் காரணமாக உணவு தானியங்களும், உற்பத்தி நகரங்களை நோக்கி நகர்ந்தன.

ü  பதினான்காம் நூற்றாண்டில் டெல்லியும் தௌலதாபாத்தும் உலகின் மாபெரும் நகரங்களாக விளங்கின.

ü  முல்தான், காரா, அவத், கௌர், கேம்பே (கம்பயத்), குல்பர்கா போன்ற பெரிய நகரங்களும் இருந்தன.

ü  டெல்லி சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் நாணய முறை நன்கு வளர்ச்சி பெற்றது.

ü  இல்டுமிஷ் பலவகையான ெள்ளி ாங்காக்களை வெளியிட்டார்.

ü  கில்ஜிகள் காலத்தில் ஒரு வெள்ளி தாங்கா என்பது 48 ஜிடால்களைக் கொண்டதாகும்.

ü  துக்ளக் ஆட்சி காலத்தில் அது 50 ஜிடால்களாக இருந்தது.

ü  அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்தியப் படையெடுப்புக்குப் பிறகு, தினார் எனப்படும் தங்க நாணயங்கள் புகழ்பெற்று விளங்கின.

ü  செப்பு நாணயங்கள் மிகக் குறைவாகவும் தேதிகள் இன்றியும் காணப்படுகின்றன.

ü  முகமது பின் துக்ளக் அடையாள நாணய முறையை பரிசோதித்ததோடு தங்கம், வெள்ளி நாணயங்களையும் வெளியிட்டார்.

ü  அவை எட்டு வெவ்வேறு தங்க சாலைகளில் வார்க்கப்பட்டன.

ü  குறைந்தது 25 வகைப்பட்ட தங்க நாணயங்கள் அவரால் வெளியிடப்பட்டன.

வணிகம்

ü  சுல்தான்கள் காலத்தில் வணிக குழுக்கள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

ü  சுல்தான் ஆட்சியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் : இந்து முல்தானியர், சமண மார்வாரிகள், முஸ்லிம் போராக்கள், குரசானியர், ஆப்கானியர் மற்றும் ஈரானியர்.

ü  ஏற்றுமதி, இறக்குமதி வணிகமானது தரைவழி, கடல் வழி என இரண்டிலும் செழித்திருந்தது.

ü  மேற்கு எல்லைப் பகுதிகளில் மங்கோலியப் படையெடுப்புகள் வெற்றிபெற்ற போதிலும், இந்தியாவில் அயல் வணிகம், இக்காலத்தில் கணிசமாக வளர்ச்சி பெற்றது என்கிறார் இர்பான் ஹபீப்.

ü  இக்காலத்தில் கடல் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் : குஜராத்திகளும், தமிழர்களும்

தொழில்துறை

ü  சீனர் கண்டுபிடித்து அரபியர் கற்றுக் கொண்ட காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் டெல்லி சுல்தானியர் காலத்தில் இந்தியாவில் அறிமுகமானது.

ü  அதேபோன்று சீனர் கண்டுபிடித்த நூற்பு சக்கரம் பதினான்காம் நூற்றாண்டில் ஈரான் வழியே இந்தியாவிற்கு வந்தது; இது நூற்பவர்களின் உற்பத்தித் திறனை 6 மடங்கு அதிகரிக்க உதவியது.

ü  அதனைத் தொடர்ந்து, றிகளில் ிதிப்பொறிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

ü  பதினைந்தாம் நூற்றாண்டில் வங்கத்தில் பட்டுப்புழு வளர்ப்பு நிறுவப்பட்டது.

ü  அதிகமாக செங்கல், கலவையை பயன்படுத்தி நிலவறைத் தொழில்நுட்பத்தோடு கூடிய கட்டட நடவடிக்கைகள் ஓர் புதிய உச்சத்தை எட்டின.

கல்வி

ü  இஸ்லாமிய உலக கல்வி மரபுகள் அறிமுகமாயின. அடிப்படையாக இருந்தது மக்தப் (தொடக்கப்பள்ளி)

ü  இங்கு மாணவர்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை இஸ்லாமிய வழிபாட்டு முறைகளை கற்றனர்.

ü  மேம்பட்ட மொழித் திறன்களை கற்பிக்க இடைநிலைப் பள்ளிகள் அதாவது மதராசா நிறுவப்பட்டன.

ü  மதரஸா என்பதன் நேர்பொருள் : கற்றுக்கொள்கிற இடம்

ü  டெல்லியில் ஒரு மதராசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் இல்டுமிஷ் ஆவார்.

ü  16ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவிலும் ஈரானிலும் இது பரவலாக நிறுவப்பட்டது.

ü  ஃபெரோஸ் துக்ளக் தில்லியில் ஒரு மதரஸாவை கட்டினார்.

ü  அங்கே, "குர்ஆன் உரை, இறைதூதரின் வாக்குகள், இஸ்லாமியச் சட்டங்கள் (ஃபிக்)" கற்பிக்கப்பட்டன என்று பரணியின் விவரணையிலிருந்து தெரிகிறது.

ü  சிக்கந்தர் லோடி (1489-1517), தமது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்தப்களிலும், மதரஸாக்களிலும் ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கு நிலமும், மானியமும் ஒதுக்கினார்.

கட்டடக்கலை

ü  வளைவு, கவிதை, நிலவறைகள், சுண்ணாம்புக் கலவை பயன்பாடு, சாராசெனிய அம்சங்கள் ஆகியவை இந்தியாவில் அறிமுகமாயின.

ü  மேலும், பளிங்குக்கல், சிகப்பு, சாம்பல், மஞ்சள் நிற மணற்கல் பயன்பாடு பேரழகைக் கூட்டின.

ü  சுல்தான்கள், ஏற்கெனவே இருந்த கட்டடங்களைத் தம் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டனர்.

ü  இதற்கு, தில்லியில் குதுப் மினாருக்குப் பக்கத்தில் அமைந்துள்ள குத்புதீன் ஐபக்கின் குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியும், அஜ்மீரிலுள்ள அத்ஹை-தீன்-க ஜோப்ராவும் சிறப்பான எடுத்துக்காட்டுகள்.

ü  ஒரு சமண மடாலயத்தின் மீது கட்டப்பட்ட ஒரு இந்துக் கோயில், குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியாக மாற்றி அமைக்கப்பட்டது:

ü  ஒரு மசூதியாக மாற்றப்படுவதற்கு முன்பு அத்ஹை -தீன்-இ-ஜோன்ப்ரா, ஒரு சமண மடாலயம் இருந்திருக்கிறது.

ü  முதல் உண்மையான வளைவால் அலங்கரிக்கப்பட்டது - பால்பனின் கல்லறை

ü  முதல் உண்மையான கவிகை என்பது அலாவுதீன் கில்ஜியால் குவ்வாத் உல் இஸ்லாம் மசூதிக்கு நுழைவு வாயிலாகக் கட்டப்பட்ட அலைதர்வாசா

ü  யமுனை நதியைத் தடுத்து செயற்கை ஏரி ஒன்றை உருவாக்கி அதன் நடுவில் கோட்டையை அமைத்தவர்கள் - கியாசுதீன் துக்ளக், முகம்மது பின் துக்ளக்

ü  ஓர் உயர்ந்த மேடையின் மீது கவிகைகளைக் கொண்ட சாய்வு சுவர் அமைப்பு அறிமுகப்படுத்தியது - கியாசுதீன் துக்ளக்கின் கல்லறை

ü  இந்திய, சாராசெனிய அம்சங்களை ஒன்று விட்டு ஒன்று அடுக்குகளில் இணைத்து, ஓர் ஒருங்கிணைப்பு உணர்வை காட்டும் விதத்தில், உல்லாச விடுதியான ஹவுஸ் காஸ கட்டியவர் - ஃபெரோஸ் துக்ளக்

ü  1200 மலர்வனங்களை டில்லியை சுற்றி அமைத்த பூங்கா பிரியரும், நீர்பாசனத்தின் தந்தை எனறழைக்கப்படுபவருமான ஃபெரோஷா துக்ளக் பெரோஷாபாத் எனும் நகரை அமைத்து, அந்நகருக்குள் பிரோஸ் ஷா கோட்லா என்னும் அரண்மனையைக் கட்டினார்.

ü  மேலும், ஃபெரோஸ் துக்ளக் ஆட்சியின் போதுதான் வேலைவாய்ப்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது.

 

சிற்பமும் ஓவியமும்

ü  கட்டிடங்களை விலங்கு மற்றும் மனித சித்திரங்கள் கொண்டு அலங்கரிப்பது இஸ்லாமிய விரோதம் என்று மரபான இஸ்லாமிய இறையியல் கருதியது.

ü  எனவே, இசுலாத்துக்கு முந்தைய கட்டிடங்களில் காணப்பட்ட நன்கு செதுக்கப்பட்ட உயிரோட்டம் கொண்ட உருவங்களுக்குப் பதிலாக பூ மற்றும் இதர வடிவ வேலைப்பாடுகள் செய்யப்பட்டது.

ü  தனிச்சிறப்பான கையெழுத்துப் பாணியில் கட்டிடங்களை அழகுபடுத்தும் கலையான பொறிக்கப்பட்ட குர்ஆன் வாசகங்களைக் கொண்டு அரேபிய சித்திர எழுத்து வேலை கட்டிடங்களுக்கு எழிலூட்டியது.

இசையும் நடனமும்

ü  சாரங்கி, ரபாப் போன்ற புதிய இசைக் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ü  இந்திய இசை, உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று அமிர் குஸ்ரு வெளிப்படையாக அறிவித்தார்.

ü  கோரா, சானம் போன்ற பல புதிய ரகங்களை அமீர் குஸ்ரு அறிமுகம் செய்தார்;

ü  இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து குவாலிஸ் என்ற புதிய வகை மெல்லிசைளையும் உருவாக்கினார்;

ü  இவர் கவாலி என்ற இசை பாணியில் சித்தார், காயல் போன்ற இசைக் கருவியை கண்டுபிடித்தார்.

ü  இந்தோ அரேபிய சங்கீதக் கலைகள் ஒன்றுபட்டு இந்துஸ்தானி என்ற சங்கீதமாகப் புது வடிவம் பெற்றது

ü  பெரோஷ் துக்ளக் ஆட்சி காலத்தில் "ராக்தர்பன்" என்ற சமஸ்கிருத இசை நூல் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது

ü  சூபி துறவியான பீர் போதன் புகழ்மிக்க இசை மேதையாவார்.

ü  குவாலியரை சேர்ந்த இசை பிரியரான ராஜா மான் சிங் மன்கவுத்துகல் என்ற இசை நூல் தொகுக்கப்படுவதற்கு  ஊக்கமளித்தார்.

ü  இசைஞர் நுஸ்ரத் காட்டன்; நடனக்காரர் மிர் அஃப்ரோஸ், ஜலாலுதீன் கில்ஜி அரசவையில் இருந்ததை ஜியாவுதீன் பரணி பட்டியலிடுகிறார்.

இலக்கியங்கள்

வடமொழியும், பாரசீக மொழியும் டெல்லி சுல்தானியத்தின் இணைப்பு மொழிகளாகத் திகழ்ந்தன.

ü  தில்லியிலுள்ள 1276 ஆம் ஆண்டுக்குரிய செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டு (பால பவோலி), சுல்தான் பால்பனின் நல்லாட்சியின் விளைவாக விஷ்ணு பகவான், எந்தக் கவலைகளுமின்றிப் பாற்கடலில் துயில்கிறார் என்கிறது.

ü  ஸ்ரீவரா, கதாகௌடுக என்ற தமது நூலில், யூசுஃப் ஜுலைகாவின் கதையை ஒரு சமஸ்கிருதக் காதல் பாடலாகச் சேர்த்திருக்கிறார்.

ü  காஷ்மீர அரசர்களின் வரலாறான ஜைனவிலாஸ் நூலை இயற்றுவதற்கு பட்டவதார,. ஷா நாமா எனும் ஃபிர்தௌசியின் நூலை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளார்.

ü  வடமொழிக் கதைகள் பலவற்றை பாரசீக மொழியில் முதன்முதலில் மொழி பெயர்த்தவர் நக் ஷபி.

ü  சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்த்ததன் மூலம் பாரசீக இலக்கியம் வளமடைந்தது.

ü  பாரசீகச் சொற்களுக்கு நிகரான ஹிந்தாவி சொற்களைக் கொண்ட அகராதிகள் தொகுக்கப்பட்டன. இவற்றுள் மிகவும் முக்கியமானது :

Ø  ஃபக்ருத்தின் கவ்வாஸ் இயற்றிய ஃபரங்-இ-கவாஸ்,

Ø  முகம்மத் ஷதியாபடி இயற்றிய மிப்தாஹ் 1 ஃபுவாஜலா ஆகியனவாகும்.

ü  துது நாமா அல்லது கிளிமொழின்பது ஜியா நக்ஷபி பாரசீக மொழியில் மொழிபெயர்த்த சமஸ்கிருதக் கதைகளின் தொகுப்பாகும்.

ü  பின்னர், புகழ்பெற்ற நூல் துருக்கி மொழியிலும், பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது.

ü  காஷ்மீர் அரசர் ஜெயினுலாபுதீன் ஆட்சிக் காலத்தில் கல்ஹணர் ராஜதரங்கிணியைப் படைத்தார்.

ü  அல்-பெருனி: தாரிக்-அல்-ஹிந்த்  (அரபு மொழியில் எழுதப்பட்ட தத்துவஞானமும் மதமும்)

ü  மின்ஹஜ் உஸ் சிராஜ்: தபகத்-இ-நசிரி (அரபு மொழியில் எழுதப்பட்ட உலக இசுலாமிய வரலாறு)

ü  ஜியாவுத்தின் பாரனி: பாரசீக உரைநடையின் ஆசானாக தோன்றினார்.

Ø  ஃபுதூ உஸ் சலாதின் என்ற தனது கவிதைத் தொகுப்பில் அப்துல் மாலிக் இஸ்லாமி, காலம் தொடங்கி முகமது-பின்-துக்ளக் ஆட்சி வரையிலுமான இசுலாமியர் ஆட்சியின் வரலாற்றைப் பதிவு செய்தவர்.

ü  தாரிக்-இ-பெரோஸ் ஷாஹி (1357) பெரோஸ் துக்ளக் வரையிலான தில்லி சுல்தான்கள் வரலாறு.

ü  அமிர் குஸ்ரு: அபுல் ஹாசன் யாமினித் குஸ்ரு என்ற  இயற்பெயர் கொண்ட இவர் மிகச்சிறந்த கவிஞராகவும் இசை வல்லுநராகவும் திகழ்ந்தார்.

Ø  சபாக் - - ஹிந்த் என்ற இந்திய பாணியிலான பாரசீக கவிதை வடிவத்தை உருவாக்கினார்

Ø  இவர் பாரசீக மொழிக் கவிஞராகத் திகழ்ந்தார். அலாவுதீன் கில்ஜி பற்றி எழுதிய தாரிக்-இ-அலாய் என்னும் நூல் மிகச் சிறந்த நூலாகும்.

Ø  இந்நூல் அலாவுதீனைப் பற்றிய செய்திகள், அங்காடி சீர்திருத்தங்கள், நிர்வாகத் திறன், மக்களின் வாழ்க்கை நிலை பற்றிக் குறிப்பிடுகின்றது.

Ø  இவர் எழுதிய பாரசீக மொழி கவிதை கஜல் என்ற புதிய இசை தொடங்குவதற்கு வழிகோலியது

Ø  மிஃப்தா உல் ஃபுதூ (ஜலாலுதீன் கில்ஜியின் வெற்றிகள்); கஜைன்; உல் ஃபுதூ (அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள் - பாரசீக மொழியில்)

Ø  துக்ளக் நாமா கியாசுதீன் துக்ளக்கின் எழுச்சியை பற்றி விவரிக்கும் நூல்  (பாரசீக மொழியில் துக்ளக் வம்ச வரலாறு)

Ø  அமீர் குஸ்ரு தனது ஒன்பது வானங்கள் என்ற நூலில், தம்மை ர் இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்.

ü  இபின் பதூதா : அபு அப்துல்லா முகமது இபின் பதூதா என்ற இயற்பெயர் கொண்ட இவர், முகமது பின் துக்ளக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.

Ø  இவருடைய பயணக் குறிப்புகள் 'ரெகிலா என்று அழைக்கப்படுகின்றன.

Ø  இக்குறிப்புகள் முகமது பின் துக்ளக் கால அரசியல் சமூக, பொருளாதார மற்றும் சமய நிலை பற்றிக் குறிப்பிடுகின்றன.

Ø  தினமும் சிலர் கை கால்களில் விலங்கிடப்பட்டு அவைக்குக் கொண்டு வரப்படுதல் துன்புறுத்தப்படுதல் போன்றவை நடைபெற்றதாக அவர் குறிப்பிடுகிறார்.

Ø  இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு பழக்கங்கள்,புது வழக்காறுகள் பற்றியும் குறிப்பிடுகிறார்.

Ø  சதி என்னும் உடன் கட்டை ஏறும் பழக்கம் இந்துக்களிடையே காணப்பட்டது விளக்குகிறார்.

Ø  கடிதங்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு சென்ற ஓட்டக்காரர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார்

ü  சம்ஸ்-இ-சிராஜ் அஃபிஃப்: தாரிக் இ ஃபெரோஜ் ஷாஹி (தில்லி சுல்தானியம் பற்றிப் பாரசீக மொழியிலுள்ள பாரனியின் விவைரணைகளை ஒட்டியது)

ü  குலாம் யாஹ்யா பின் அஹ்மத்: தாரிக்-இ- முபாரக் ஷாஹி (சையது ஆட்சியாளர் முபாரக் ஷாவின் ஆட்சியைக் குறித்து பாரசீக மொழியில் எழுதப்பட்டது)

ü  ஃபெரிஷ்டா இந்தியாவில் இசுலாமிய ஆட்சியின் வரலாறு (பாரசீக மொழி)

ü  சூஃபி துறவி நிசாமுதீன் அவுலியாவின் உரையாடல்களைக் கொண்ட ஃபவாய்' துல் ஃபவாத் என்ற ஒரு நூலை அமிர் ஹாஸ்ஸன் தொகுத்தார்

ü  சந்த் பராடி அக்காலத்திய சிறந்த இந்திக் கவிஞர்

ü  நுஸ்ரத் ஷா மகாபாரத்தை வங்காளத்தில் மொழிபெயர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தார்.

 

 

 

 

 

 

 

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments