குப்தர்கள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
v குப்தர்களின் காலம் பொற்காலம் என்று சொல்லப்பட்டாலும் அன்றைய காலகட்டத்தில் உயர் வர்க்கத்தினரின் வாழ்க்கை முறை மட்டுமே உச்சத்தில் இருந்தது.
v இக்காலகட்டம் பண்பாட்டு வளர்ச்சியின் காலம் எனவும் செவ்வியல் கலைகளின் காலம் எனவும் அழைக்கப்படுகிறது.
v குப்தர்களின் காலம் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு நீடித்தது.
வரலாற்றுச் சான்றுகள்
குப்தர் காலத்து வரலாற்றை மீள்ருவாக்கம் செய்ய மூன்று வகையான சான்றுகள் உள்ளன.
1. இலக்கியச் சான்றுகள்
2. கல்வெட்டுச் சான்றுகள்
3. நாணயச் சான்றுகள்
1) இலக்கியச் சான்றுகள்
ü விஷ்ணு, மத்சய, பிரகஸ்பதி, காத்யாயனர், வாயு, பாகவத புராணங்கள், ஸ்மிருதிகள் நாரதரின் நீதி சாஸ்திரம்
ü அரசருக்கு கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதிசாரம் என தர்ம சாஸ்திரம்
ü குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கும் விசாகதத்தரின் முத்ரா ராட்சஸம் தேவி சந்திரகுப்தம்
ü புத்த சமண இலக்கியங்கள் | காளிதாசரின் படைப்புகள் | பாஹியான் குறிப்புகள்.
2) கல்வெட்டுச் சான்றுகள் :
ü முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிப்பது - மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு.
ü சமுத்திர குப்தரின் சாதனைகளை விளக்குவது - அலகாபாத் தூண் கல்வெட்டு. இவரின் அவைக்களப் புலவர் - ஹரிசேனர் / 33 வரிகள் / நாகரி வரிவடிவம் சமஸ்கிருத மொழி. பிரயாகை மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி - புகழ்வது)
ü இரண்டாம் சந்திரகுப்தரின் உதயகிரி குகை கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறை கல்வெட்டு
ü ஸ்கந்த குப்தரின் பிதாரி தூண் கல்வெட்டு.
ü புத்த குப்தரின் ஈரான் தூண் கல்வெட்டு, தாமோதர்பூர் செப்பேடு.
ü கத்துவா பாறைக் கல்வெட்டு | மதுபான் செப்புப்பட்டயம் | சோனாபட் செப்புப் பட்டயம் | நாளந்தா களிமண் முத்திரை
3) நாணயச் சான்றுகள் :
ü குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த தங்க நாணயங்கள் அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய வேதச் சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.
ü நாணயங்களில் முதன்முதலாக இடம்பெற்ற குப்த அரசர் ஸ்ரீகுப்தர்.
ü நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் - சமுத்திரகுப்தர்.
ü 8 வகையான நாணயங்களை வெளியிட்டவர் சமுத்திரகுப்தர்.
ü இவரது நாணயங்களில் வீணையுடன் அமர்ந்திருக்கும் காட்சிப் பொறிக்கப்பட்டுள்ளது.
ü நாணயங்களில் இடம்பெற்ற முதல் இளவரசி - லிச்சாவி இளவரசி குமார தேவி
ü வெள்ளி நாணயங்களை முதன்முதலில் வெளியிட்டவர் - இரண்டாம் சந்திரகுப்தர்
குப்த வம்சத்தின் தோற்றம் :
ü குப்த வம்சத்தை தோற்றுவித்தவர் - ஸ்ரீ குப்தர்(பொ.ஆ 240-280).
ü இவரைத் தொடர்ந்து கடோத்கஜர் (பொ.ஆ 280 -319).
ü இவர்கள் இருவரும் மஹாராஜா என்று குறிக்கப்படுகிறார்கள்.
முதலாம் சந்திரக் குப்தர் (பொ.ஆ 319-335)
ü குப்த வம்சத்தின் முதல் பேரரசராக கருதப்படுகிறார்.இவரது பட்டங்கள் : மகாராஜா அதிராஜா.
ü இவர் லிச்சாவி இளவரசி குமார தேவியை மணந்தார்.
ü லிச்சாவி பழைமையான கன சங்கங்களில் ஒன்றாகும். இது கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்ட பகுதி.
ü இவரது ஆட்சிக் காலத்தின் வெளியிடப்பட்ட நாணயத்தில் இடம்பெற்ற வாசகம் - லிச்சாவையா
சமுத்திரகுப்தர் (பொ.ஆ 335 -380)
ü மௌரியப் பரம்பரையில் வந்ததாக அசோகர் தூணில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ü தெய்வபுத்திர சகானுசாகி (குஷாணப் பட்டம்)
ü சாகர், இலங்கை அரசு போன்ற வெளி நாட்டு அரசுகளும் கப்பம் கட்டினார்கள் என இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
ü இவர் வடமகத்தான போர்த் தளபதி. தென்னிந்தியாவில் பல்லவ நாட்டு அரசன் விஷ்ணுகோபனை தோற்கடித்தார்.
ü வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் 9 அரசுகளை கைப்பற்றினார்.
ü தென்னிந்தியாவை சேர்ந்த 12 அரசர்களை தனது சிற்றரசர்களாக்கி கப்பம் கட்டச் செய்தார்.
ü தனது இராணுவ வெற்றிகளைப் பிரகடனம் செய்ய அசுவமேத யாகம் நடத்தினார்.
ü இலங்கை அரசர் மேகவர்மன் இவரின் சமகாலத்தவர்.இவர் பரிசுகளை அனுப்பி கயாவில் ஒரு பௌத்த மடம் கட்ட அனுமதி கோரியுள்ளார்.
ü விஷ்ணு பக்தரான இவர் வசுபந்து என்ற மாபெரும் பௌத்த அறிஞரையும் ஆதரித்தார். முதலாவது முழுமையான பௌத்த நூல் இவரால் எழுதப்பட்டது.
ü வசுபந்துவின் சீடர் - திக்நாகர்
இரண்டாம் சந்திரகுப்தர் (பொ.ஆ 380 - 415)
ü தனது சகோதரரான ராமகுப்தருடன் (370 -75) வாரிசுரிமைக்கு போராடி ஆட்சிக்கு வந்தார்.
ü பாடலிப்புத்திரத்தை தலைநகரமாகக் கொண்ட இவர் தனது அரசின் எல்லைகளை போர் (ம) திருமண உறவுகள் மூலம் விரிவுபடுத்தினார்.
ü மத்திய இந்தியாவின் நாக இளவரசி குபேரநாகா என்பவரை மணந்து கொண்டார்.
ü குபேரநாகா, துருவபசுவாமினி ஆகிய இருவரும் இரண்டாம் சந்திர குப்தரின் அரசியர் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன
ü தனது மகள் பிரபாவதியை வாகாடக மரபு அரசன் 2-ம் ருத்ரசேனருக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
ü சாக சத்திரப்பு மரபின் கடைசி அரசன் 3-ம் ருத்ரசிம்மன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனால் சாகர்களை அழித்தவர் என்ற பொருள் கொண்ட சாகரி என்ற விருதுப் பெயரைச் சூட்டிக்கொண்டார்.
ü விக்ரமாதித்தன் என்றும் அறியப்படுகிறார்.
ü வங்கத்தில் எதிரிகளின் கூட்டிணைவை முறியடித்தார்.
ü சிந்து நதியைக் கடந்து பாக்டிரியாவைக் கைப்பற்றி குஷாணர்களை அடிபணியச் செய்தார்.
ü தென்னிந்திய அரசுகளோடு நட்புறவைப் பேணினார்.
ü நவரத்தினங்கள் இவருடைய அவையில் இருந்தன
ü இந்தியாவிற்கு வருகை தந்த முதல் சீனப்பயணி பாஹியான் இவர் காலத்தில் வருகை தந்தார்.
பாகியான் வருகை
ü இவர் இந்தியாவில் தங்கியிருந்த 9 ஆண்டுகளில் 6 ஆண்டுகள் மட்டுமே குப்த பேரரசில் இருந்தார்.
ü பாடலிபுத்திரத்தில் மூன்று ஆண்டுகள் தங்கி வடமொழியை கற்றதோடு புத்த இலக்கியங்களையும் படி எடுத்தார்.
ü இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்து இருந்தாலும் அவரது பெயரை தனது குறிப்புக்களில் குறிப்பிடவில்லை.
ü பாஹியானின் குறிப்புகள் - போகோகி
ü கங்கைச் சமவெளியை பிராமணர்களின் பூமி என்று குறிப்பிட்டுள்ளார்
ü இவரது கூற்றுப்படி, மகதத்து மக்கள் மகிழ்ச்சியுடன் செல்வத்தோடும் வாழ்ந்தனர் கடுமையான தண்டனையின்றி நீதி வழங்கப்பட்டது. மரண தண்டனை வழங்கப்படவில்லை.
ü கயா பாழடைந்திருந்தது; கபிலவஸ்து காடாக இருந்தது; பாடலிபுத்திரம் மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.
ü மதுராவில் மக்கள் தொகை அதிகம்.மீண்டும் மீண்டும் கலகம் செய்தால் குற்றம் இழைத்தால் வலது கை துண்டிக்கப்படும்.
ü வடமேற்கு இந்தியாவில் புத்த சமயம் நன்கு புகழ் பெற்று விளங்கியதாகவும்; கபிலவஸ்து, குசி நகரம் போன்ற சில புத்த சமய புனித இடங்கள் அழிந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ü இரண்டாம் சந்திரகுப்தரைத் தொடர்ந்து முதலாம் குமார குப்தர் அரியணை ஏறினார். இவர் நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்.
ü குமார குப்தரைத் தொடர்ந்து பதவி ஏற்றவர் ஸ்கந்த குப்தர்.இவர் ஹீணர்களின் படையெடுப்பை எதிர்த்து அவர்களை தோற்கடித்து விரட்டியடித்தார்.
ü குப்த பேரரசின் கடைசி பேரரசரான பாலாதித்யர் முதலாம் நரசிம்ம குப்தர் என்ற பெயரில் அரியணை ஏறினார்.
ü குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் விஷ்ணு குப்தர்.
குப்தர்களின் ஆட்சி அமைப்பு
ü தெய்வீக உரிமைக் கோட்பாடு
ü பேரரசு தேசம் அல்லது புக்தி எனும் பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டன. (உபாரிகா - ஆளுநர்)
ü பிராந்தியங்கள் விஷ்யா எனும் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன.(விஷ்யாபதிகள்)
ü மாவட்ட மட்டத்துக்குக் கீழ் விதி, பூமி பதகா, பீடா என பல்வேறு நிர்வாக அலகுகள் இருந்தன.(ஆயுக்தகா, விதி - மஹாதரா)
ü நிர்வாகத்தின் இறுதி அலகாக கிராமம் இருந்தது. (கிராமிகா, கிராம் அத்யஷா)
இராணுவம் :
ü காலாட் படையின் தளபதி - பாலாதிகிரதா
ü குதிரைப் படையின் தளபதி மஹாபாலாதிகிரதா / மஹாஅஸ்வபதி
ü ராணுவ கிடங்குகளில் தலைமை அலுவலகம் - ரணபந்தகர்.
ü தண்டபாஷிகா மாவட்ட அளவிலான காவல் துறை அலுவலகமாக இருக்கலாம்.
ü ஒற்றர்களை கொண்ட உளவு அமைப்பு - துடாகா
ü அரண்மனைக் காவலர்கள் மகாபிரதிஹாரா.
ü அரச சமையல் அறை கண்காணிப்பாளர் - கத்யதபகிதா
ü நிர்வாகத்துறையின் மேல்மட்டத்தில் அமாத்யா, சச்சிவா ஆகியோர் இருந்தார்கள்.
ü நீதித்துறை இராணுவம் ஆகியவற்றின் பொறுப்பு வகித்தவர் - தண்டநாயகா (அ) மஹாதண்டநாயகா.
ü குமாரமாத்யா என்ற சொல் ஆறு வைசாலி முத்திரைகளில் காணப்படுகின்றது.
ü ஹரிசேனர் ஒரு குமாரமாத்யா, சந்திவிக்ரஹிகா, மஹாதண்டநாயகா ஆகிய பட்டங்களை கொண்டவராக இருந்துள்ளார். இவர் மகாதண்டநாயகா துருவ பூதியின் புதல்வராவார்.
சில கல்வெட்டுக் குறிப்புகள்
v சபா என்ற குழு குறித்து அலகாபாத் கல்வெட்டு கூறுகிறது. இது அமைச்சர் குழுவாக இருக்கலாம்.
v அமைதி மற்றும் போருக்கான அமைச்சர் - மஹாசந்திவிக்ரஹா.
v குப்தர் கல்வெட்டுகள் வருவாய் துறை குறித்த சில விவரங்களை தருகின்றன. அரசு ஆவணங்களை அக்ஷபதலதிக்கிருதா என்ற அதிகாரி பராமரித்தார்.
v குப்த ஆண்டு 165 என்று தேதி இடப்பட்டுள்ள புத்த குப்தரின் ஈரான் தூண் கல்வெட்டு காளிந்தி மற்றும் நர்மதை நதிக்கு இடையிலான நிலங்களை ஆட்சி செய்த மகாராஜா சுரஷ்மிசந்திரா என்பவரை லோகபாலா என்று குறிப்பிடுகிறது.
v புத்த குப்தர் காலத்து தாமோதர்பூர் செப்பேடு மகாதாரா என்பவர் தலைமையில் அஷ்டகுல - அதிகாரனா (8 உறுப்பினர்கள் கொண்ட குழு) குறித்து குறிப்பிடுகிறது. [மஹாதாரா - கிராம பெரியவர் கிராமத் தலைவர் குடும்பத்தலைவர்]
v இரண்டாம் சந்திரகுப்தர் காலத்து சாஞ்சி கல்வெட்டு பஞ்ச மண்டலி என்பதை குறிப்பிடுகிறது. இது குழும நிறுவனமாக இருக்கலாம்.
v நிலத்தின் ஒரே உரிமையாளர் அரசர் என்று பஹார்பூர் செப்பேடு குறிப்பிடுகிறது.
v பஹார்பூர் செப்பேடுகளின் படி உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின் நிலப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை பாதுகாத்தார்.
v குப்தர் கால கல்வெட்டுக்கள் கிலிப்தா, பலி, உத்ரங்கா, உபரிகரா, இரண்யவெஷ்தி போன்ற சொற்களைக் குறிப்பிடுகின்றன.
v இரண்யவெஷ்தி என்றால் கட்டாய உழைப்பு என்று பொருள்.
v குப்தர்கால கல்வெட்டுகளில் சேனாதிபதி என்ற சொல் காணப்படவில்லை.

1 Comments
Really good 👍👍👍
ReplyDelete