சிந்துவெளி நாகரிகம் ஓர் முழுமையானத் தொகுப்பு

சிந்துவெளி நாகரிகம்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

பண்டைய நாகரிகங்களின் வகைகள்

ü  நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய லத்தீன் மொழி வார்த்தையான 'சிவிஸ்' என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் 'நகரம்' ஆகும்.

ü  நான்கு வகையான நாகரிகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.அவை:

v  மொசபடோமியா நாகரிகம் (பொ.ஆ.மு.3500 - 2000 வரை)

v  சிந்துவெளி  நாகரிகம் (பொ..மு.3300 - 1900 வரை)

v   எகிப்து நாகரிகம்  (பொ..மு.3100 - 1100 வரை)

v  சீன நாகரிகம் (பொ..மு.1700 - 1122 வரை)

ü  மிகப் பழமையான நாகரிகம் -  மொசபடோமியா நாகரிகம்.

ü  மிகவும் நீண்ட காலத்துக்கு இருந்த நாகரிகம் - எகிப்து நாகரிகம்.

ü  பழமையான 4 நாகரிகங்களில் பெரிய பரப்பளவு கொண்டது - சிந்துவெளி நாகரிகம்.

கால வரையறை

ü  புவி எல்லை - தெற்காசியா

ü  காலப்பகுதி - வெண்கலக்காலம்.

ü  காலம் - பொ..மு.3300 - 1900 வரை.

ü  பரப்பு - 13 லட்சம் சதுர கி.மீ.

ü  நகரங்கள் - 6 பெரிய நகரங்கள்

ü  கிராமங்கள் - 200 க்கும் மேற்பட்டவை

நாகரிகத்தின் பரப்பளவு:

ü  இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும், பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு.3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும், பண்பாடுகளும் மொத்தமாக, சிந்து நாகரிகம் எனப்படும்.

ü  மேற்கில், பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரை வரையிலும்,

ü  கிழக்கில், காகர்-ஹாக்ரா நதி, பள்ளத்தாக்கு வரையிலும்,

ü  வடகிழக்கில், ஆப்கானிஸ்தான் வரையிலும்,

ü  தெற்கில், மகாராஷ்டிரா வரையிலும் பரவியிருந்தது.

புவியியல் அமைவிடமும், குடியிருப்புகளும்.

ü  இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சுமார் 1.3 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் வரை பரவியிருந்தது.

v  மேற்கே, சட்காஜென்-டோர் (பாகிஸ்தான் - ஈரான் எல்லை).

v  கிழக்கே, ஆலம்கீர்பூர் (உத்திரப் பிரதேசம்).

v  தெற்கே, தைமாபாத் (மகாராஷ்டிரா).

v  வடக்கே, ஷோர்டுகை (ஆப்கானிஸ்தான்) ஆகிய இடங்களை எல்லைகளாகக் கொண்டது.

ü  சிந்துவெளி நாகரிகம் பரவியுள்ள முக்கிய பகுதிகள் - குஜராத், பாகிஸ்தான், ராஜஸ்தான், ஹரியானா.

ü  சிந்துவெளி நாகரிகம் பரவியுள்ள இந்தியப் பகுதிகள் - குஜராத், ராஜஸ்தான், ஹரியானா.

ü  இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம்  சிந்து நாகரிகம் ஆகும்.

ü  சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் ஆகும்.இது வெண்கல காலத்தைச் சேர்ந்தது.

சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடி - மெஹெர்கர்.

ü  இது புதிய கற்காலத்தை சேர்ந்தது.

ü  பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாநிலத்தில் போலன் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

ü  மக்கள் வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

ü  புதிய கற்காலக் கிராமங்களின் தொடக்கம் நடைபெற்றது ஏறத்தாழ பொ.ஆ.மு.7000 எனக் கணிக்கப்படுகிறது.

ஹரப்பா - புதையுண்ட நகரம்:

ü  ஹரப்பாவிற்கு முதன் முதலில் வருகை தந்தவர், இங்கிலாந்து நாட்டவரான,  சர் சார்லஸ் மேசன் 1826.

ü  இவர்தான், ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை, முதன் முதலில் தமது நூலில் விவரித்தார்.

ü  மேலும் இவர், பாகிஸ்தானில் உள்ள இந்தியாவின், வடமேற்குப் பகுதியில் பார்வையிட்டபோது, சில செங்கல் திட்டுகள் இருப்பதை கண்டார்.

ü  "அந்த பாழடைந்த செங்கற்கோட்டை உயரமான சுவர்களுடனும், கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.இதுதான் ஹரப்பா இருந்ததற்கான, முதல் வரலாற்று ஆதாரம்.

ü  சிந்துவெளி நாகரிகத்தில் முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி - ஹரப்பா

ü  ஹரப்பா நாகரிகம், சிந்து வெளி நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது.

ü  மேலும் இந்நாகரிகம், பல்வேறு கட்டங்களாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

v  தொடக்ககால ஹரப்பா (பொ.ஆ.மு‌.3000 - 2600).

v  முதிர்ச்சியடைந்த ஹரப்பா (பொ.ஆ.மு.2600 - 1700).

v  பிற்கால ஹரப்பா (பொ.ஆ.மு.1700 - 1900).

ü  ஒரு நகர பண்பாட்டிற்கான கூறுகள், முதிர்ச்சி பெற்ற ஹரப்பாவின் காலத்தில் இருந்தது.

ü  1831-ல், ஹரப்பா பண்பாடோடுத் தொடர்புடைய, அம்ரி நகரத்திற்கு வருகை தந்தவர் - அலெக்சாண்டர் பர்ன்ஸ்.

ü  1856-ல், பொறியாளர்கள் லாகூரில் இருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைக்கும் பொருட்டு, நிலத்தை தோண்டிய போது, அதிகமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன..

ü  அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் ஹரப்பாவை பார்வையிட்ட ஆண்டுகள் - 1853 / 1856 / 1875

ü  1861-ல், இந்திய தொல்லியல் துறை, அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது.இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.

ü  ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும், அதன் நாகரீகத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்த காரணமாக இருந்தவர் - சர் ஜான் மார்ஷல்

ü  1920-ல், தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்களை, அகழாய்வு செய்ய ஆரம்பித்தனர்.

ü  1924-ல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குநர் சர் ஜான்ன் மார்ஷல் ஹரப்பா (ம) மொகஞ்சதாரோ இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதை கண்டறிந்தார்.

ü  மேலும், ஹரப்பாவிலும், மொகஞ்சதரோவிலும், கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்பாண்டங்களுக்கிடையே, சிறிய அளவு வேறுபாடு இருப்பதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து, ஹரப்பா நாகரிகம், மொகஞ்சதாரோவை விட பழமையானது, என முடிவுக்கு வருகின்றனர்.,

ü  1940களில், ஆர் இ எம் வீலர், ஹரப்பாவில் அகழாய்வுகள் நடத்தினார்.

திட்டமிடப்பட்ட நகரங்கள்

ü  சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியமான நகரங்கள் பின்வருமாறு:

«  ஹரப்பா - பஞ்சாப், பாகிஸ்தான்.

«  மொஹஞ்சதாரோ - சிந்து, பாகிஸ்தான்.

«  டோலவீரா, லோத்தல், சுர்கோட்டா - குஜராத், இந்தியா.

«  காலிபங்கன், பனவாலி - இராஜஸ்தான், இந்தியா.

«  ராக்கிகர்ஹி - ஹரியானா, இந்தியா.

ü  ஹரப்பா நகரங்களில், மதில் சுவர்கள், நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் கால்வாய்கள் ஆகியவை காணப்படுகின்றன.

ü  கழிவுநீர் வடிகால்கள் கல்தட்டைகள் கொண்டு மூடப்பட்டிருந்தன.

ü  ஒவ்வொரு வீட்டிலும் திடக்கழிவுகளைத் தேக்குவதற்கான, குழிகள் இருந்தன.

ü  ஹரப்பர்கள் சுட்ட, சுடாத செங்கற்களை கட்டுமானத்திற்கு பயன்படுத்தினார்கள்.

ü  வீடுகள், சேற்று மண்ணாலான செங்கற்களாலும், கழிவு நீர் வடிகால்கள், சுட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டன.

ü  வீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களைக் கொண்டிருந்தன.

மொகஞ்சதாரோ - இடுக்காட்டு மேடு

ü  மொகஞ்சதாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம், உலக பாரம்பரிய தளமான யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ü  நகரங்கள் 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ü  மேல்பகுதி (அ) சிட்டாடல் (ம) கீழ்பகுதி.

ü  மேல்பகுதியில் – பொதுக் கட்டிடங்கள், தானியக் கிடங்குகள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள் (ம) சமயக் கட்டிடங்கள் உள்ளன.

ü  கீழ்பகுதி – மக்கள் வாழ்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ü  மொகஞ்சதாரோவில் காணப்படுபவைகள் பின்வருமாறு:-

v  பெருங்குளம்

v  தானியக்களஞ்சியம்

v  மிகப்பெரியபொதுக்கூட்ட அரங்கு

v  மதகுரு எனப்படும் பூசாரி அரசன்

v  வெண்கலத்தால் ஆன நடனமாது சிலை.

பெருங்குளம்

ü  உலகின் முதல் பொதுக்குளம் இங்கு காணப்படுகிறது.

ü  இக்குளத்தின் சுவர்கள், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, நீர் கசியாமல் இருப்பதற்காக சுவரிலும், தளத்திலும் பல அடுக்குகள் இயற்கைத் தார் கொண்டு பூசப்பட்டிருந்தது.

ü  வடபுறத்தில் இருந்தும், தென்புறத்தில் இருந்தும் குளத்திற்கு செல்ல, படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ü  குளத்தின் பக்கவாட்டில் மூன்று புறமும் அறைகள் உள்ளன. இவற்றுள் சில கட்டுமான அமைப்புகள், தானியக் கிடங்குகளாக அடையாளம் காணப்படுகின்றன. அதன் சுவர்கள் ஜிப்சம் செறிந்த சுண்ணச்சாந்தால் பூசப்பட்டு, நீர் புகாதபடி இருக்கின்றன.

ü  அக்கட்டுமானத்தில் கழிவுநீர் வடிகால் வசதி இருந்தது. அது சடங்குகளுடன் தொடர்புடைய நீராடல் நிகழ்வுகளுக்கு தேவைப்படிருக்கலாம்.

ü  பெருங்குளத்திற்குத் தேவையான நீர், அருகில் இருந்த கிணற்றில் இருந்து இறைக்கப்பட்டது.

ü  உபயோகப்படுத்தப்பட்ட நீர் வெளியேறவும் வகை செய்யப்பட்டிருந்தது.

தானியக் களஞ்சியம்

ü  மொஹஞ்சதாரோவின் மிகப்பெரிய கட்டட அமைப்பு – தானியக் களஞ்சியம்.இது 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்டது.

ü  தானியக்களஞ்சியம், செங்கற்களால் கட்டப்பட்ட பெரிய உறுதியான கட்டிட அமைப்பைக் கொண்டது.

ü  இவை, தானியங்களை சேகரித்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டன.

ü  செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானியக் களஞ்சியம் ஒன்று, ஹரியானா மாநிலத்தில் உள்ள ராக்கிகர்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.

பொதுக் கூட்ட அரங்கு

ü  மொஹஞ்சதாரோவில் இருந்த, இன்னொரு மிகப்பெரும் பொதுக் கட்டடம், கூட்ட அரங்கம் ஆகும்.

ü  இது 20 தூண்கள், நான்கு வரிசைகளைக் கொண்ட பரந்து விரிந்த கூடமாகும்.

மொகஞ்சதாரோ- தலைவர்

ü  ஹரப்பா மக்களின் கலைத்திறனை உணர்த்தும் வகையில், ஸ்டீட்டைட் கல்லில் அமைந்துள்ள மதகுருவின் சிலை, மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ü  இந்த சிலை, மதகுரு (அ) பூசாரி அரசன் என கருதப்படுகிறது.

வெண்கலத்தாலான நடனமாது சிலை

ü  சிந்துவெளி மக்கள், ‘லாஸ்ட் வேக்ஸ்’ முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச் சிலை, நடனமாடும் பெண் சிலை ஆகும்.

ü  இந்த வெண்கல சிலையானது, மொஹஞ்சதாரோவில் கிடைத்தது.

ü  வடிவம் அமைக்கப்பட்ட மெழுகு அச்சில், உலோகத்தை திரவமாக இருக்குமாறு ஊற்றி வார்த்து, இந்த சிலையை செய்திருக்கின்றனர்.

ü  இதிலிருந்து சிலை செய்யும் தொழில்நுட்பம் மிகவும் அழகாக தெரிகிறது.

ü  சுட்ட மண்ணால் செய்யப்பட்ட சிறிய சிலைகள், வெண்கல சிலைகள், மண்பாண்டங்களில் ஓவியம் போன்றவைகள் காணப்படுகின்றன.

ü  இந்த சிலையைப் பார்த்த சர் ஜான் மார்ஷல், "முதலில் இதை நான் பார்த்தபோது, இது வரலாற்றிற்கு முந்திய காலத்தில் உருவாக்க முறையை சார்ந்தது என்று நம்புவதற்கு கடினமாக இருந்தது; ஏனெனில், இது போன்று ஒரு உருவாக்கம் பற்றி பண்டைய மக்களுக்கு கிரேக்கக்காலம் வரை தெரியவில்லை. இவை ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என நினைத்தேன்; சிலைகள் அக்காலகட்டத்திற்கு உரியதாகவே இருந்தன" என்றார்.

வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் :

ü  ஹரப்பா மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர்.

ü  ஹரப்பா மக்கள் உழவுக்குக் கலப்பை-யை பயன்படுத்தினார்கள்.

ü  நிலத்தை உழுது, விதைக்கும் பழக்கத்தை அவர்கள் கொண்டிருக்கலாம்.

ü  உழுத நிலங்களை, காலிபங்கனில் காணமுடிகிறது.

ü  கோதுமை, பார்லி, அவரை விதைகள், கொண்டைக்கடலை, எள் (ம) பலவிதமான தினை வகைகளைப் பயிரிட்டார்கள்.

ü  இரட்டை சாகுபடி முறையையும் அவர்கள் கடைப்பிடித்தார்கள்.

ü  ஹரப்பாவில் மேய்ச்சலும் ஒரு, முக்கியத் தொழிலாக இருந்தது.

ü  மாடு, செம்மறியாடு, வெள்ளாடு  கோழி உள்ளிட்ட பறவைகளை வளர்த்தார்கள்.

ü  எருமை, பன்றி, யானை போன்ற விலங்குகள் குறித்த அறிவும் அவர்களுக்கு இருந்தது.

ü  ஆனால், ஹரப்பா பண்பாட்டில் குதிரை குறித்து அறிந்திருக்கவில்லை.

ü  ஹரப்பாவில் மாடுகள் செபு எனப்பட்டன. இது ஒரு பெரிய வகை மாட்டின் இனம்.

ü  சிந்துவெளி முத்திரைகளில் இவ்வகையான பெரிய காளை உருவம் பரவலாகக் காணப்படுகிறது.

மட்பாண்டக்கலை :

ü  ஹரப்பர்கள் ஓவியங்கள் தீட்டப்பட்ட மட்பாண்டங்களை பயன்படுத்தினார்கள்.

ü  மட்பாண்டங்கள்  ஆழமான சிவப்பு வண்ணம் பூசப்பட்டு, கருப்பு நிற ஓவியங்கள் தீட்டப்பட்டவை.

ü  மட்பாண்டங்களில் தீட்டப்பட்ட ஓவியங்களில்,  கணித வடிவியல் வடிவங்கள், செடிகொடிகள் ஒன்றை ஒன்று வெட்டும் வட்டங்கள், குறுக்கும் நெடுக்குமாக கோடுகள், கிடைக்கோடு பட்டைகள், அரசமர இலை, மீன் செதில் ஆகியவை காணப்படுகின்றன.

உலோகக் கருவிகளும் ஆயுதங்களும் :

ü  ஹரப்பா பண்பாட்டு மக்கள், செர்ட் என்ற சிலிகா கல் வகையில் செய்த பிளேடுகள், கத்திகள், செம்புப் பொருட்கள், எலும்பாலும், தந்தத்தாலும் செய்யப்பட்ட கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.

ü  ரோஹ்ரி செர்ட் பிளேடுகள் கிடைக்கப்பெற்ற இடம் - ஹரப்பா பகுதி ஷிகர்பூர், குஜராத்.

ü  இரும்பின் பயனை அவர்கள் அறியவில்லை.

ü  மரத்தாலான கலப்பைகள் பயன்படுத்தபட்டன.

ü  ஆயுதங்கள் பெரும்பாலும் தாமிரம் மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்டன.

ü  வெண்கலத்தை உருவாக்க, ராஜஸ்தானில் கேத்ரி மற்றும் பலுசிஸ்தான் ஆகியவற்றில் தாமிரமும், ஆப்கானிஸ்தானிலிருந்து தகரம் பெறப்பட்டன.

ü  கூர்மையான கருவிகள், உளிகள், ஊசிகள், மீன் தூண்டில் முட்கள், கத்திகள், நிறுவைத் தட்டுகள், முகம் பார்க்கும் கண்ணாடி, அஞ்சனம் தீட்டும் குச்சி ஆகியவை செம்பால் செய்யப்பட்டன.

ü  செம்பில் செய்த அம்புகள், ஈட்டிகள், உளி, கோடாரி ஆகிய கருவிகளை பயன்படுத்தினார்கள்.

வணிகமும், பரிமாற்றமும் :

ü  ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தார்கள்.

ü  அவர்கள் ஆரக்கால் இல்லாத திடமான சக்கரங்களை கொண்ட, சக்கரவண்டி-களைப் பயன்படுத்தினார்கள்.

ü  சிந்துவெளி முத்திரைகள் தற்கால ஈராக், குவைத் (ம) சிரியா ஆகிய பகுதிகளைக் குறிக்கும் பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதிகளில் கிடைத்துள்ளது

ü  சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன், பக்ரைன், ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் ஹரப்பாவை சேர்ந்த முத்திரைகளும், பொருள்களும் கிடைத்துள்ளன.

ü  சுமேரியா-வின் அக்காடிய பேரரசுக்கு உட்பட்ட அரசன் நாரம் -  சின் என்பவர் சிந்துவெளிப் பகுதியில் உள்ள மெலுஹா எனும் இடத்திலிருந்து அணிகலன் வாங்கியதாகக் குறிப்பு எழுதியுள்ளார்.

ü  க்யூனிஃபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவிற்கும், ஹரப்பாவிற்கும் இடையேயான வணிகத்தொடர்பு-களைக் குறிப்பிடுகின்றன.

ü  க்யூனிஃபார்ம் எழுத்துக்களில் காணப்படும் மெலுஹா குறிப்பு சிந்துப்பகுதியை குறிப்பதாகும்.

ü  மெசபடோமியாப் புராணத்தில் மெலுகா குறித்து கீழ்க்கண்ட வரிகள் இடம்பெற்றுள்ளன :-

v  "உங்களது பறவை ஹஜா பறவை ஆகுக; அதன் ஒலி, அரண்மனையில் கேட்கட்டும்."

v  ஹஜா பறவை - மயில், என்று சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.

ü  பாரசீக வளைகுடா (ம) மெசபடோமியா-வில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்று உருளை வடிவ முத்திரைகள் சிந்துவெளி பகுதியிலும் காணப்படுகின்றன.இது இந்த இரு பகுதிகளிலும் வாணிகம் நடந்ததைக் காட்டுகிறது

எடைக்கற்களும், அளவீடுகளும்:

ü  ஹரப்பாவிலிருந்து படிகக்கல்லாலான கனசதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ü  எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன.

ü  அதாவது, எடையின் வீதம் இருமடங்காகும் படி (1:2:4:8:16:32) பின்பற்றப்பட்டுள்ளது.

ü  16ன் விகிதம் கொண்ட சிறிய டைஅளவீடு இன்றைய அளவீட்டில் 13.63 கிராம்.

ü  ஹரப்பா மக்கள் இன்றைய அளவீட்டில், ஒரு இன்ச் = 1.75 செ.மீ ஆக கொள்ளும் விதத்தில், அளவுகோலையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ü  குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, தந்தத்திலான அளவுகோல் 1704 மி.மீ வரை, சிறிய அளவீடுகளை கொண்டுள்ளது. (அதன் சமகாலத்திய நாகரிகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அளவுகோல்களில் இதுதான் மிக சிறிய பிரிவு ஆகும்)

வாழ்க்கை முறை (,உடை, ஆபரணங்கள்)

ü  ஆண் பெண் இருபாலரும் ஆபரணங்களை விரும்பி அணிந்திருக்கின்றனர்.

ü  சிந்துவெளி மக்கள் ஆபரணங்கள் செய்ய சிவப்புநிற மணிக்கற்களை பயன்படுத்தினர்.இது கார்லினியன் எனப்படும்.

ü  பொதுவாக பருத்தி ஆடைகளே, பயன்பாட்டில் இருந்தன, கம்பளி ஆடைகளும் உபயோகப்படுத்தப்பட்டன.

ü  ஹரப்பா பண்பாட்டு மக்கள், பட்டு பற்றியும் அறிந்திருந்தார்கள்.

ü  சிந்துவெளி மக்கள் அமைதியான வாழ்க்கை முறையை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

ü  படை இருந்ததற்கான எந்த ஆதாரமும்  இல்லை.

சிந்துவெளி எழுத்துக்கள் ஒர் ஆய்வு :

ü  முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.

ü  ஹரப்பா மக்கள் எழுதும் கலையை அறிந்திருந்தனர்.

ü  இந்த எழுத்துகள் இலச்சினைகள், சுடுமண் முத்திரைகள், மட்பாண்டங்கள் ஆகியவற்றில் காணப்படுகின்றன

ü  இந்த எழுத்து முறையின் பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ü  ஏனென்றால், எழுத்துப்பொறிப்புகள் மிகவும் குறுகியவை. தொடர்கள் சராசரியாக, ஐந்துக்கும் குறைவான குறியீடுகளையே கொண்டுள்ளன.

ü  5000க்கும் மேற்பட்ட எழுத்து தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ü  ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்து தொடர், 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.

ü  ரோசட்டா கல்லில் காணப்பட்டது போல, மும்மொழிகள் பயன்படுத்தப்படவில்லை

ü  எழுத்துகள் வலப் பக்கத்திலிருந்து இடப் பக்கமாக எழுதப்பட்டுள்ளன.

ü  கணினி மூலம் பகுப்பாய்வு செய்த, இரஷ்ய அறிஞர் யூரி நோரோசோவ், சிந்துவெளி எழுத்துகள் திராவிட மொழிக் குடும்பம் போன்ற வார்த்தை வரிசையைப் பெற்றுள்ளன, ன்கிறார்

ü  சிந்துவெளி நாகரிகம் குறித்து, விரிவான ஆய்வு செய்துள்ள அறிஞரான, ஐராவதம் மகாதேவன், "ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை நாம் காணலாம்" என்கிறார்.

ü  மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடரியில் உள்ள குறியீடுகள், சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்டவையிலுள்ள குறியீடுகளை ஒத்திருக்கின்றன; என்று கூறுகிறார் ஐராவதம் மகாதேவன்.

ü  மே 2007ஆம் ஆண்டு, தமிழ்நாடு தொல்லியல் துறையால், பூம்புகாருக்கு அருகில், மேலபெரும்பள்ளம் என்னும் இடத்தில்ண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள, அம்பு போன்ற குறியீடுகள், மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினைகளைப் போன்று உள்ளன.

சமய நம்பிக்கை

ü  சிந்துவெளி மக்களின் வழிபாடு, மற்றும் அவர்களின் மத நடைமுறைகள் பற்றி அறிய, எந்த ஓர் ஆதாரமும் கிடைக்கவில்லை .

ü  சிந்துவெளி மக்கள் இயற்கையை வழிப்பட்டார்கள். அரசமரம் அவர்களது வழிப்பாட்டிற்குரியதாக இருந்தது.

ü  அங்கு கிடைக்கப்பெற்ற பெண் சிலைகள் மூலம், சிந்து வெளி மக்களிடையே, தாய் தெய்வ வழிபாடு இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது .

ü  சில சுடுமண் உருவங்கள், தாய்த்தெய்வத்தைப் போல் உள்ளன.

ü  காலிபங்கனில் வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ü  ஹரப்பா மக்கள் இறந்தோரைப் புதைத்தனர்.

ü  புதைப்பதற்கான நடைமுறைகள் விரிவாக இருந்தன.

ü  இறந்த உடல்களை எரித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.

ü  ஹரப்பா புதைகுழிகளில் மட்பாண்டங்கள், அணிகலன்கள், அணிகலன்கள், தாமிரக்கண்ணாடி, மணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. இறப்பிற்கு பின்னரான வாழ்க்கை பற்றிய அவர்களின் நம்பிக்கையை இவை குறிக்கலாம்.

சிந்துவெளி நாகரிகமும், சமகாலப் பண்பாடும் :

ü  இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் சிந்து நாகரிகம் செழிப்புற்றிருந்தபோது, பிற பகுதிகளில் பல்வேறு பண்பாடுகள் வளர்ந்துகொண்டிருந்தன.

ü  இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும் (கேரளா), இலங்கையிலும், வேட்டையாடியும், சேகரித்தும் வாழ்ந்த சமூகங்கள் செயல்பட்டன.

ü  படகுப்போக்குவரத்து குறித்த அறிவுடன் இருந்த ஹரப்பா மக்கள், தென்னிந்தியாவுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம். ஆனால், அதற்குத் தெளிவான தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை.

ü  தென்னிந்தியாவின் வடபகுதி, குறிப்பாகக் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவை, புதிய கற்காலப் பண்பாடுகளுடன், மேய்ச்சல் (ம) கலப்பை சார்ந்த வேளாண்மையிலும் ஈடுபட்டுவந்தன.

ü  புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீர், கங்கைச் சமவெளி ஆகிய வட இந்தியப் பகுதிகளிலும், மத்திய இந்தியாவிலும், கிழக்கு இந்தியாவிலும் பரவியிருந்தபோது, தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் செம்புக்காலப் பண்பாடு நிலவியது.

ü  இவ்வாறு, இந்தியா ஹரப்பா நாகரிகக் காலத்தில், பல்வேறு பண்பாடுகளின் கலவை என்று சொல்லத்தகுந்த நிலப்பகுதியாக விளங்கியது.

ஒரு சில தகவல்களின் தொகுப்பு :

ü  பண்டைய நாகரிகங்கள் அனைத்தும், நதிக்கரையில் தோன்றின.அவை குறித்து பார்க்கலாம்.

«  எகிப்து நாகரிகம் - நைல் நதிக்கரையில்.

«  சீன நாகரிகம் - ஹீவாங்கோ, யாங்சி நதிக்கரையில். (இது சீனாவின் துயரம் எனவும், மஞ்சள் ஆறு எனவும் அழைக்கப்படுகிறது)

«  மொசபடோமியா நாகரிகம் - யூப்ரடீஸ், டைகிரீஸ் பாயும் இடத்தில் தோன்றியது.

«  சிந்துவெளி நாகரிகம் - இதில் ஹரப்பா ராவி நதிக்கரையில் தோன்றியது.

காலிபங்கன்:

ü  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.

ü  காலிபங்கன் சரஸ்வதி நதிக்கரையில் உள்ள காக்கரா மீது அமைந்துள்ளது.

ü  காலிபங்கனில் வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ü  உழுத நிலங்களை காலிபங்கனில் காணமுடிகிறது.

லோத்தல்

ü  குஜராத் மாநிலத்தின் சபர்மதி ஆற்றின் துணையாற்றில் அமைந்துள்ளது.

ü  இங்கு, கப்பல் கட்டும் தளம் இருந்தது.

கைவினை தயாரிப்புக்கு தேவையான பொருள்கள் கிடைத்த இடங்கள் :

ü  சங்கு - நாகேஸ்வர், பாலகோட்

ü  வைடூரியம் - ஷார்டுகை

ü  கார்லினியன் (சிவப்பு மணிக்கற்கள்) - லோத்தல்

ü  ஸ்டீட்டைட் (நுரைக்கல்) - தெற்கு இராஜஸ்தான்.

ü  செம்பு - இராஜஸ்தான், ஓமன்.

சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி :

ü  சுமார் பொ.ஆ.மு.1900லிருந்து சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி பெறத் துவங்கியது.

ü  பருவநிலைமாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தில் வீழ்ச்சி, நதியின் வறட்சி அல்லது வெள்ளப்பெருக்கு, அந்நியர் படையெடுப்பு ஆகியவை இந்த நாகரிகம் வீழ்ச்சி பெறவும்,

ü  மக்கள் தெற்கு, மற்றும் கிழக்கு திசை நோக்கி இடம் பெயரவும், சில முக்கியமான காரணங்களாக அமைந்தன எனக் கருதப்படுகிறது.

ü  சிந்துவெளி நாகரிகம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. அது கிராமப் பண்பாடாக இந்தியாவில் தொடர்ந்தது.

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments