முகலாயப் பேரரசு ஒரு முழுமையானத் தொகுப்பு (வினா - விடை வடிவில்)

முகலாயப் பேரரசு

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

முகலாயப் பேரரசு

ü  முகலாய பேரரசுக்கு முன் வட இந்தியாவின் பல பகுதிகள் யாரால் ஆளப்பட்டன?  இந்தோ - கிரேக்கர்கள், சாகர், குஷாணர், ஆப்கானியர்

ü  முகலாயர்கள் என்பவர்கள் யார்? மங்கோலிய செங்கிஸ்கான் துருக்கிய தைமூர் அவர்களின் வழி தோன்றல்கள்

ü  இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்? ஜாகிருதீன் முகமது பாபர்.

ü  பாபர் எப்போது பிறந்தார்? 1483 பிப்ரவரி14

ü  பாபர் என்பவர் தந்தையார் வழியில் தைமூரின் கொள்ளுப்பேரன், தாய்வழியில் அவருடைய தாத்தா தாஷ்கண்டைச் சேர்ந்த யூனுஸ்கான் ஆவார்.

ü  ஜாகிருதீன் என்பதன் பொருள் என்ன? நம்பிக்கையை காப்பவர்.

ü  மத்திய ஆசியாவில் உள்ள துருக்கிய இனக்குழு எவ்வாறு அழைக்கப்பட்டது? உஸ்பெக்குகள்

ü  ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? சபாவி

ü  ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினரான சபாவி எந்த பிரிவை ஆதரித்தார்கள்? ஷியா முஸ்லிம்

ü  உதுமானிய துருக்கியர்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள்? சன்னி முஸ்லிம்.

ü  பாபர் எந்தப்பகுதியின் அரசராக இருந்தார்? சாமர்கண்ட்

ü  இந்தியாவை நோக்கி பாபரின் முதல் படையெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு? 1505

ü  1519க்கும் 1524க்கும் இடையே பாபர் எவற்றின் மீது படையெடுத்து இந்துஸ்தானைக் கைப்பற்றும் உறுதியான எண்ணத்தை வெளிக்காட்டினார்? பேரா, சியால்கோட், லாகூர்.

ü  காபூல், கஜினி ஆகியவற்றை கைப்பற்றிய பாபர் எந்த நதியைக் கடந்து சிறிய அரசை ஏற்படுத்தினார்? சிந்து நதி.

ü  பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு அழைப்பு விடுத்தவர் யார்? தௌலத்கான் லோடி

ü  தௌலத்கான் லோடியின் மகன் யார்? திலாவார் கான்

ü  தௌலத்கான் லோடியின் படைகளை பாபர் ந்த இடத்தில் வெற்றிகொண்டார்? லாகூர்

ü  பாபர் இந்தியாவின் மீது படையெடுத்தப் போது எத்தனை முஸ்லிம் அரசுகள் இருந்தன? 5 (டெல்லி/குஜராத்/மாளவம்/வங்காளம்/தக்காணம்)

ü  பாபர் இந்தியாவின் மீது படையெடுத்தப் போது எத்தனை இந்து அரசுகள் இருந்தன? 2 (மேவார் ராணா சங்கா/ விஜயநகரப் பேரரசு)

ü  முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு? ஏப்ரல் 21, 1526

ü  பானிப்பட் போரில் பாபரின் வெற்றிக்கான காரணங்கள் எவை? போர் வியூகங்களும், பீரங்கிப்படையும்

ü  பீரங்கி பயன்படுத்தும் ராணுவ படைப் பிரிவு எவ்வாறு அழைக்கப்படும்? Artillery

ü  வெடிமருந்து முதன்முதலில் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? சீனர்களால்

ü  வெடிமருந்தின் பயன் ஐரோப்பாவை எந்த நூற்றாண்டில் சென்றடைந்தது? 13 ஆம் நூற்றாண்டில்

ü  எந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து வெடிமருந்து துப்பாக்கி மற்றும் பீரங்கியில் பயன்படுத்தப்பட்டது? 14 ஆம் நூற்றாண்டின்

ü  முகலாய வம்சத்தின் ஆட்சி எதனை தலைநகராகக்கொண்டு  தொடங்கியது? ஆக்ரா

ü  கான்வா போர் எப்போது? யார் யாருக்கிடையே நடைபெற்றது? 1527 பாபர் Vs ராணா சங்கா

ü  கான்வா போரின் வெற்றிக்குப் பிறகு பாபர் எந்த பட்டத்தைச் சூட்டிக் கொண்டார்? காஸி

ü  சந்தேரி போர் எப்போது? யார் யாருக்கிடையே நடைபெற்றது? 1528 பாபர் Vs மேதினிராய்

ü  காக்ரா போர் எப்போது? யார் யாருக்கிடையே நடைபெற்றது? 1529 பாபர் Vs முகம்மது லோடி

ü  ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் எது? காக்ராப்போர் 1529

ü  பாபரின் ஆட்சிக்காலம் எவ்வளவு? 1526 முதல் 1530 வரை

ü  பாபரின் எம்மொழியில் புலமை பெற்றவர்? துருக்கிய, பாரசீக,அரேபிய மொழி

ü  பாபரின் தாய்மொழி எது? துருக்கி

ü  உலகச் செவ்வியல் இலக்கியமாக கருதப்படும் நூல் எது? பாபரின் நினைவுக்குறிப்புகள் ஆன துசுக் இ  பாபரி (பாபர் நாமா)

ü  துசுக் இ  பாபரி  என்னும் சுயசரிதை நூலை பாபர் எம்மொழியில் எழுதினார்? துருக்கிய மொழி

ü  பாபர் துசுக் இ  பாபரி  என்னும் தனது சுயசரிதையில் எதைக் குறித்து பதிவு செய்துள்ளார்? ஹிந்துஸ்தான் பற்றிய தமது கருத்துக்களையும், விலங்குகள், செடிகள், மலர்கள், மரங்கள் குறித்தும் பதிவு செய்துள்ளார்.

ü  இந்தியாவைக் குறித்து பாபர் எவ்வாறு விவரித்துள்ளார்? இது ஒரு மிகப்பெரிய நாடு. பெருமளவிலான தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுள்ளது. அங்குள்ள தொழிலாளர்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு பிரிவிலும் பெரும் எண்ணிக்கையில் முடிவே இல்லாத வகையில் கடுமையாக உழைத்தனர்.

ü  பாபர் எப்போது இயற்கை எய்தினார்? 1530

ü  பாபரின் மகன்கள் யார்? ஹூமாயூன், கம்ரான், ஹின்டால், அஸ்காரி

ü  பாபருக்கு பின் அரியணைக்கு வந்தவர் யார்? ஹூமாயூன்.

ü   ஹீமாயூன் என்பதன் பொருள் என்ன? நல்வாய்ப்பு.

ü  காபூல் மற்றும் காண்டஹாரின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டவர் யார்? கம்ரான்

ü  1532ல் எந்த இடத்தில் ஆப்கானியர் ஆன ஷெர்ஷாவைத் தோற்கடித்து பலம்வாய்ந்த சுனார்க் கோட்டையை முற்றுகையிட்டார்? தௌரா

ü  தில்லியில் எந்நகரை உருவாக்குவதில் ஹீமாயூன் காலத்தைக் கழித்தார்? தீன்பானா

ü  ஹுமாயூன் பகதூர்ஷாவை தோற்கடித்து, குஜராத்தையும் மாளவத்தையும் கைப்பற்றி அவற்றை யாருடையப் பொறுப்பில் விட்டார்? அஸ்காரி

ü  ஆப்கானியரான ஷெர்ஷா சூர் என்பவர் ஹீமாயூனை எந்தெந்த போர்களில் தோற்கடித்தார்? சௌசாப் போர் மற்றும் கன்னோஜ் போர்

ü  சௌசா போர் நடைபெற்ற ஆண்டு? 1539

ü  கன்னோஜ் போர் நடைபெற்ற ஆண்டு? 1540

ü  கன்னோஜ் போரில் தோற்கடிக்கப்பட்ட ஹீமாயன் எங்கு தப்பியோடினார்? ஈரான்

ü  கன்னோஜ் போரின் இன்னொரு பெயர்? பில்கிராம் போர்.

ü  ஷெர்ஷாவின் இயற்பெயர் என்ன? பரீத்

ü  ஆக்ராவில் சூரி வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்? ஷெர்ஷா

ü  ஷெர்ஷா யாருடைய மகன்? ஹசன்கான்.

ü  ஷெர்கான் என்ற பட்டத்தை அளித்தவர் யார்? பீகார் ஆட்சியாளர்.

ü  ஷெர்ஷா எந்த முஸ்லிம் பிரிவைச் சார்ந்தவர்? வைதீக சன்னி

ü  ஷெர்ஷாவின் அமைச்சரவையில் எத்தனை முக்கிய அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்? 4

«  திவானி ரசாலத் - வெளியுறவு (ம) தூதரகப் பொறுப்பாளர்.

«  திவானி  இன்ஷா - கடிதப் போக்குவரத்து.

«  திவானி அரிஸ் - இராணுவத்துறை

«  திவானி விசாரத் - வருவாய் (ம) நிதி நிர்வாகம்.(வாசிர்)

ü  ஷெர்ஷாவின் பேரரசு எத்தனை சர்கார்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன? 47.

«  ஒவ்வொரு சர்காரிலும் முதன்மை ஷிக்தார் (சட்டம் ஒழுங்கு), முதன்மை முன்சீப் (நீதி வழங்குதல்) என்ற 2 முக்கிய அதிகாரிகள் இருந்தனர்.

ü  சர்கார் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது? பர்கானா.

«  ஷிக்தார் - ராணுவ அதிகாரி

«  அமின் - நில வருவாய்

«  பொடேதார் - கருவூல அதிகாரி

«  கர்க்கூன்கள் - கணக்கர்கள்.

ü  ஷெர்ஷா ஆட்சியின் போது நிலங்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டிருந்தது? 3 (நல்லவை/ நடுத்தரமானவை/ மோசமானவை)

ü  ஷெர்ஷா அறிமுகப்படுத்திய நிலவருவாய் முறை எது? இரயத்வாரி முறை

ü  ஷெர்ஷாவின் நிலச்சீர்திருத்தத்தைப் பின்பற்றியவர் யார்? அக்பர்

ü  நிலவரி எவ்வாறு வசூலிக்கப்பட்டது? 1/3பங்கு (பணம் / தானியம்)

ü  நவீன நாணயமுறையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? ஷெர்ஷா

ü  நாணயங்களில் தனதுப் பெயரை எம்மொழியில் பொறிக்கச் செய்தார்? தேவநாகரி

ü  ஷெர்ஷா வெளியிட்ட வெள்ளி நாணயம் எது? தாம்

«  தங்க, வெள்ளி செப்புக்காசுகளில் இடம்பெறும் உலோகங்களின் தர அளவு வரையறை செய்யப்பட்டது.

ü  ஷெர்ஷா வெளியிட்ட வெள்ளி நாணயங்கள் எந்த ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தது? 1835வரை

ü  ஷெர்ஷா அமைத்த நான்கு முக்கிய பெருவழி சாலைகள் எவை?

«  சோனர்கான் - சிந்து

«  ஆக்ரா - புர்ஹாம்பூர்

«  ஜோத்பூர் - சித்தூர்

«  லாகூர் - முல்தான்

ü  அனைத்து சாலைகளிலும், வணிகர்கள் தங்கவும் உணவருந்தவும் ஷெர்ஷாவால் ஏற்படுத்தப்பட்ட சத்திரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? சராய்

ü  வங்காளத்தின் கோட்டையும் பின்னர் ரோக்லா கோட்டையையும் கைப்பற்றியவர் யார்? ஷெர்ஷா

ü  வங்காளத்தின் ஆளுநராக ஷெர்ஷா யாரை நியமித்தார்? கிசிர்கான்

ü  தில்லியில் ஷெர்ஷா கட்டிய கோட்டையின் பெயர் என்ன? புராண கிலா

ü  ஷெர்ஷா தன்னுடைய கல்லறை மாடத்தை எந்த இடத்தில் கட்டினார்? சசாரம்

ü  "விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான்" என்ற நம்பிக்கை கொண்டவர் யார்? ஷெர்ஷா

ü  ஷெர்ஷாவிற்கு நீதி நிர்வாகத்தில் உதவி புரிந்தவர் யார்? தலைமை காசி

ü  ஷெர்ஷா தனது கடைசி படையெடுப்பை எதனை ஆட்சி செய்த அரசருக்கு எதிராக மேற்கொண்டார்? பந்தல்கண்ட்

ü  ஷெர்ஷா எவ்வாறு மரணமடைந்தார்? கலிஞ்சார் கோட்டை முற்றுகையின் போது ஏற்பட்ட வெடிவிபத்தின் காரணமாக,

ü  சூர் வம்சத்தின் ஆட்சி காலம் எவ்வளவு? 1540 - 1555

ü  ஷெர்ஷாவின் ஆட்சிக்காலம் எவ்வளவு? 1540 - 1545.

ü  ஹீமாயூனின் மனைவி பெயர் என்ன? அமீதா பானு பேகம்

ü  ஹீமாயூன் யாருடைய உதவியால் டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்? பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தைச் சேர்ந்த ஷா-தாமஸ்ப்

ü  ஹீமாயூன் எந்த ஆண்டு ஆப்ஷன்களை முறியடித்து மீண்டும் முகலாய அரியணையைக் கைப்பற்றினார்? 1555

ü  1556 ஆம் ஆண்டு ஹுமாயூன் எவ்வாறு உயிரிழந்தார்? நூலகப் படிக்கட்டில் தவறி விழுந்து

ü  "வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹீமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்" என்று கூறியவர் யார்? ஸ்டான்லி லேன் பூல்

ü  அக்பரின் ஆட்சிக் காலம்? 1556 முதல் 1605

ü  எந்த ஆண்டு பிறந்தார்? நவம்பர் 23, 1542

ü  அக்பர் எந்த இடத்தில் பிறந்தார்? அமரக்கோட்டை

ü  அக்பர் எந்த வயதில் அரியணை ஏறினார்? 14வது

ü  அக்பரின் பாதுகாவலர் யார்? பைராம் கான்

ü  அக்பரின் ஆசிரியர் யார்? ஷேக் முபாரக் ஷா

ü  ஷேக் முபாரக் ஷாவின் புதல்வர்கள் யார்? அபுல் பைசி, அபுல் பாசல்.

ü  ஷெர்ஷாவின் வழிவந்த ஆப்கானிய அரசன் அடில் ஷா-வின் இந்து படைத்தளபதி யார்? ஹெமு

ü  ஹெமு முதலில் கைப்பற்றிய பகுதி எது? குவாலியர்

ü  இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது? 1556, ஹெமு - அக்பர்

«  அக்பரின் முதல் நான்காண்டு ஆட்சி காலத்தில் பகர ஆளுநர் பைரம் கானின்கீழ் நாடு குவாலியர், அஜ்மீர் உட்பட காபூலில் இருந்து ஜான்பூர் வரை விரிவடைந்தது.

ü  அக்பர் பைராம் கானின் எங்கு செல்லுமாறு பணித்தார்? மெக்காவுக்கு

ü  பைராம் கான் எந்த இடத்தில் கொல்லப்பட்டார்? குஜராத்

ü  பைராம் கானின் மகன் யார்? அப்துல் ரஹீம்

ü  அறிவுக்கூர்மை மிக்க மேதையான அப்துல் ரஹீம் அக்பரின் அவையில்  எந்த பட்டத்துடன் ஒளிர்ந்தார்? கான் இ கானான்.

ü  அக்பர் தடைசெய்த வரிகள் எவை? ஜிசியா வரி, புனித பயண வரி

ü  அக்பர் ஜிசியா வரியை ரத்து செய்த ஆண்டு எது? 1562

ü  1562ல் மாளவம் யாரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது? பாஜ்பகதூர்.(இவர் அக்பரின்  அரசவையில் ஒரு மன்சப்தாராக ஆக்கப்பட்டார்)

ü  1564ல் அக்பரால் கைப்பற்றப்பட்ட பகுதி எது? கோண்ட்வானா

ü  இந்தியாவின் மையப்பகுதியில் இருந்த கோண்டுவானா பகுதியின் ராணி யார்? ராணி துர்காவதி

ü  ராணி துர்கா தேவியின் மகன் யார்? வீர் நாராயணன்

ü  ஆறுமாத கால முற்றுகைக்குப்பின் கைப்பற்றப்பட்ட பகுதி எது? சித்தூர்.

ü  அக்பரின் படையெடுப்பின் போது சித்தூரின் அரசராக இருந்தவர் யார்? ராணா உதய்சிங்.

ü  மேவர் அரசரான ராணா உதய்சிங்கின் தளபதிகள் யார்? ஜெய்மால், பட்டா

ü  அக்பர் ஜெய்மால், பட்டா அவர்களின் நினைவாகவும் அவர்களை சிறப்பிக்கும் வகையிலும் எந்தக் கோட்டையின் பிரதான வாயிலில் அவர்களின் சிலைகளை நிறுவினார்? ஆக்ரா

ü  மேவார் அரசரான ராணா உதய்சிங்கைத் தோற்கடித்து சித்தூர் எப்போது கைப்பற்றப்பட்டது? 1568

ü  ராந்தம்பூர் கைப்பற்றப்பட்ட ஆண்டு? 1569

ü  சித்தூர் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து சரணடைந்த ராஜபுத்திர அரசுகள் எவை? ராந்தம்பூர், பிக்கானீர், கலிஞ்சர், ஜோத்பூர், ஜெய்சால்மர்.

ü  செல்வ செழிப்புமிக்க கடல்சார் வணிகத்திற்கு புகழ் பெற்ற நகரமாகவும், தக்காணத்தை கைப்பற்றுவதற்கான ஏவுதளமாகவும் இருந்த பகுதி எது? குஜராத்

ü  1573ல் குஜராத்தை அக்பர் யாரிடமிருந்து கைப்பற்றினார்? முசாபர்ஷா

ü  குஜராத் வெற்றியின் நினைவாக கட்டப்பட்டது எது? பதேப்பூர் சிக்ரி

ü  அக்பர் உருவாக்கிய புதிய தலைநகர் எது? பதேப்பூர்சிக்ரி.

ü  பதேப்பூர்சிக்ரியில் இபாதத்கானா என்ற வழிப்பாட்டுக் கூடத்தை அக்பர் எந்த ஆண்டு அமைத்தார்? 1575.

ü  அக்பர் தவறுபடா ஆணையை எந்த ஆண்டு வெளியிட்டார்? 1579

ü  உதய் சிங்கின் மகனான ராணா பிரதாப் சிங்கிற்கும், அக்பருக்கும் இடையே நடைபெற்ற போர் எது? ஹால்டிகாட் போர்.

ü  ஹால்டிகாட் போர் நடைப்பெற்ற ஆண்டு எது? 1576.

ü  ராணா பிரதாப் சிங் வைத்திருந்த குதிரையின் பெயர் என்ன? சேத்தக்.

ü  அக்பர் காலத்தில், பீகார், வங்காளம் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்த மன்னன் யார்? தாவுத்கான்.

ü  தாவுத்கானின் பகுதிகள் எப்போது முகலாய பேரரசோடு எப்போது இணைக்கப்பட்டது? 1576

ü  ராஜா மான்சிங், ராஜா பகவன் தாஸ் ஆகியோரின் உதவியுடன் அக்பர் யாரை தோற்கடித்து காபூலைக் கைப்பற்றினார்? மிர்சா ஹக்கீம்

ü  காபூலின் ஆளுநராக ஒருமுறை அக்பரால் அனுப்பி வைக்கப்பட்டவர் யார்? ராஜா மான்சிங்.

«  காஷ்மீர் - 1586

«  காண்டேஷ் - 1591

«  சிந்து - 1592

ü  அஹமதுநகர் அரசின் பகர ஆளுநராக (சாகி வம்சத்தைச் சேர்ந்த முசாபர் ஷா) இருந்தவர் யார்? ராணி சாந்த்பீவி.

ü  ராணி சாந்த்பீவியிடமிருந்து பெரார் எப்போது கைப்பற்றப்பட்டது? 1596.

ü  அக்பர் பரப்புரை செய்த தத்துவம் என்ன? சுல்க் இ குல் - அனைவருக்கும் அமைதி.

ü  அக்பரின் அளவில்லா மதிப்பையும் மரியாதையும் பெற்றிருந்த சமயத் துறவிகள் யார்? சூபி துறவி - சலீம் சிஸ்டி; சீக்கியக்குரு - ராம்தாஸ்.

ü  ஹர்மிந்தர் சாகிப் கருவறை எங்கு கட்டப்பட்டது? அமிர்தசரஸ்

ü  அக்பர் இஸ்லாமை புறக்கணித்தார் எனக் குற்றம் சாட்டிய வரலாற்று அறிஞர் யார்? பதானி

ü  இபாதத் கானாவில் நடைபெற்ற விவாதங்கள் மதங்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியதால் அக்பர் அதனை எந்த ஆண்டு நிறுத்தினார்? 1582

«  புருசோத்தம், தேவி - இந்து மதம்

«  மெகர்ஜிராணா - ஜொராஸ்திரிய மதம்

«  அக்வாவிவா, மான்சரட் போர்ச்சுகீசியர் - கிறிஸ்தவ மதம்

«  ஹிர விஜய சூரி - சமண மதம்.

ü  அக்பருடைய தத்துவத்தை விளக்குவதற்கு அக்பரும் பதானியும் பயன்படுத்திய சரியான சொல் எது? தௌகித் இ இலாகி 

ü  தௌகித் இ இலாகி என்ற சொல்லின் நேரடிப் பொருள் எது? தெய்வீக ஒரு கடவுள் கோட்பாடு.

ü  அக்பர் தீன் இலாஹி (அ) தௌகித் இ இலாகி  (அ) இறை நம்பிக்கை என்ற தமது புதிய சமயத்தை எந்த ஆண்டு அறிவித்தார்? 1582 (15பேர்)

ü  அக்பர் இப்பிரிவின் மதகுரு என்ற முறையில் அவர் சீடர்களை சேர்த்திருந்தார் பீர் - மதகுருமுரிக்கள் - சூபி சீடர்கள்.

ü  ராமாயணம், மகாபாரதம், அதர்வவேதம், விவிலியம், குர்ஆன் ஆகியவை எம்மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன? பாரசீக மொழி

ü  பாகவத புராணத்தை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்? இராஜா தோடர்மால்.

ü  இதிகாச நூல்களாகிய ராமாயணம் (ம) மகாபாரதத்தை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்? அபுல் பைசி

ü  அயினி அக்பரி (ம) அக்பர் நாமா என்ற வரலாற்று புகழ்மிக்க நூல்களை எழுதியவர் யார்? அபுல் பாசல்.

ü  அக்பரின் அவையை அலங்கரித்த இசைஞானி யார்? தான்சேன்.

ü  அக்பரின் அவையை அலங்கரித்த ஓவியர் யார்? தஷ்வந்

ü  அக்பரது நிலவருவாய் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது? ஜப்தி (அ) பந்தோபஸ்து முறை.

ü  அக்பரது ஆட்சிக் காலத்தில் நில வருவாய் நிர்வாகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டவர் யார்? ராஜா தோடர்மால் (திவான்)

ü  ராஜா தோடர்மால் சீரமைக்கப்பட்ட நிலவருவாய் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது? தாஹாசாலா முறை.

ü  தாஹாசாலா முறை எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது? 1580.

ü  அக்பர் காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டன? 4

«  போலஜ் - ஆண்டுதோறும் பயிரிடப்படும் நிலம்.

«  பரௌதி - 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை

«  சச்சார் - 3 (அ) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

«  பஞ்சார் - 5 (அ) அதற்கு அதிகமான ஆண்டுகளுக்கு.

ü  நிலவரி தொடர்பாக விவசாயிகளும், அரசாங்கமும் செய்து கொண்ட ஒப்பந்தம் பெயர் என்ன? குபிலியாத்.

ü  அக்பர் யாரை மணந்து கொண்டார்? ஹர்க்காபாய்.

ü  ஹர்க்காபாய் யாருடைய மகள்? ஆம்பர் நாட்டு அரசர் ராஜா பார்மல் (பீகாரிமால்)

ü  ஹர்க்காபாய் பெற்றெடுத்த இளவரசர் யார்? சலீம்.

ü  ராஜா மான்சிங் என்பவர் யார்? ராஜா பகவான்தாஸின் மகன்; அக்பரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதி.

ü  அக்பரால் பெரிதும் விரும்பப்பட்ட நண்பர் யார்? ராஜா பீர்பால்.

ü  முகலாயப் பேரரசை எதிர்த்து நின்ற ரஜபுத்திர அரசுகள் எவை? மேவார், மார்வார்.

ü  மேவாரில், அக்பரின் அதிகாரத்தை ஏற்காமல் தனது மரணம் வரை தொடர்ந்து போராடியவர் யார்? ராணா பிரதாப் சிங் (1597வரை)

ü  மார்வாரில் (ஜோத்பூர்) 1581இல் தான் இறக்கும் வரை முகலாயர் எதிர்த்தவர் யார்? மால்தியோ ரத்தோரின் மகனான அரசர் சந்திரா சென்.

ü  அக்பர் அறிமுகம் செய்த ஒரு முறைப்படுத்தப்பட்ட, மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறை எது? மன்சப்தாரி முறை.

ü  மன்சப்தாரி தகுதி எத்தனை வகைப்படும்? 2 (ஜாட், சவார்)

ü  ஜாட் என்பது என்ன? ராணுவ வீரர்களின் எண்ணிக்கை-யை நிர்ணயம் செய்வது ஆகும். (10 - 10,000 வீரர்கள்)

ü  சவார் என்பது என்ன? மன்சப்தாரின் கீழ் இருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும். (குறைந்தபட்சம் 2)

ü  மன்சப்தாரி முறையை அறிமுகம் ஆன பின்னர் ரஜபுத்திர ஷேக்சதா என்றழைக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களும் பிரபுக்கள் வரிசையில் இடம் பெற்றனர்.

ü  மன்சப்தாரிகளின் ஊதியம் எவ்வாறு வழங்கப்பட்டது? ஜாகிர் மூலம் பணம் வசூலிப்பது.

ü  மன்சப்தாரி முறையில் குறைந்தபட்ச தகுதி நிலை எது? அதிகப்பட்ச தகுதி நிலை எது? குறைந்தபட்சம் - மன்சப்தார் 10 | அதிகப்படசம் - மன்சப்தார் 5000

ü  அக்பரால் கட்டப்பட்ட  சிறந்த நுழைவுவாயில் எது?  புலந்தர்வாசா

ü  அக்பரால் கட்டப்பட்ட கட்டிடங்கள் எவை? அக்பரி மஹால், ஜஹாங்கிரி மஹால், பஞ்ச் மஹால், ஜோத்பாய் அரண்மனை.

ü  அக்பரால் கட்டப்பட்ட கட்டிடங்கள் எந்த வகை கற்களால் கட்டப்பட்டது? சிகப்பு வகை பளிங்கு கற்களால்.

ü  அக்பர் எப்போது உயிரிழந்தார்? 1605 அக்டோபர் 27 (63வது வயதில்)

ü  முகலாயப் பேரரசில் உண்மையாக நிலைநாட்டியவர் ஆக கருதப்படுபவர் யார்? அக்பர்

ü  அக்பரின் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது? ஆக்ரா அருகே சிக்கந்தராவில்.

ü  அக்பரின் வளர்ப்பு தாய்? மாகம்அனாகா

ü  அக்பரின் மறைவைத் தொடர்ந்து அரியணைக்கு வந்தவர் யார்? ஜஹாங்கிர்

ü  ஜஹாங்கீரின் ஆட்சிக்காலம் எவ்வளவு? 1605 - 1627

ü  ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன? சலீம்

ü  ஜஹாங்கீர் என்பதன் பொருள் என்ன? உலகினை வென்றவர்.

ü  ஜகாங்கீர்க்கு எதிராக கிளர்ச்சி செய்த மகன் யார்? குஸ்ரூ

ü  குஸ்ரூவுக்கு ஆதரவு வழங்கியவர் யார்? ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன் தேவ்

ü  ஜஹாங்கீருக்கு எதிராக வங்கத்தில் கலகம் செய்த ஆப்கானியர் யார்? உஸ்மான் கான்

ü  ராணா அமர்சிங்கிற்கு எதிராக படையெடுப்பு  யார் தலைமையில் நடத்தப்பட்டது? குர்ரம்

ü  சூரத் நகரில் வணிகம் செய்ய ஜகாங்கீரிடம் அனுமதி பெற்றவர் யார்? சர் தாமஸ் ரோ - 1615

ü  1608-ல் தன்னைச் சுதந்திர அரசாக அறிவித்தது எது? அஹமது நகர்

ü  அகமது நகர் யாருடைய தலைமையின் கீழ் தன்னை சுதந்திர அரசாக அறிவித்தது? மாலிக் ஆம்பர்

«  எத்தியோப்பியாவிலிருந்து இந்தியாவுக்கு ஒரு அடிமையாக கொண்டு வரப்பட்டவர்.

ü  மாலிக் ஆம்பர் எப்போது மரணமடைந்தார்? 1626 மே 14 (78ஆம் வயதில்)

ü  மாலிக் ஆம்பரால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் யார்? மராத்தியர்கள்.

ü  ஜஹாங்கீரின் விசுவாசமிக்க தளபதி யார்? மகபத்கான்

ü  ஜஹாங்கீர் எழுதிய சுயசரிதை எது? துசுக் இ ஜஹாங்கிரி.

ü  ஜஹாங்கீர் அறிமுகப்படுத்திய புதிய நீதி வழங்கும் முறை எவ்வாறு இருந்தது? நீதிச்சங்கிலி மணி (ஷாபர்ஜ் அரண்மனை - யமுனை)

ü  பண்டையத் தமிழகத்தில் நீதி சங்கிலி முறையை கொண்டு வந்த மன்னர் - மனுநீதிச்சோழன்

ü  ஜஹாங்கீரின் மனைவி யார்? மெகருன்னிசா

ü  மெகருன்னிஷா யாருடைய மகள்? இதிமத் தௌலா

ü  நூர்ஜஹானின் மகன் யார்? ஷாரியர்.

ü  நூர்ஜஹானின் மூத்த சகோதரரான ஆசப்கானுக்கு வழங்கப்பட்ட பதவி என்ன? காண் இ சாமான்.

ü  ஆசப்கானின் மகள் யார்? அர்ஜீமந்த் பானு பேகம் (பிற்காலத்தில் மும்தாஜ்)

ü  மெகருன்னிசாவின் சிறப்பு பெயர்கள் நூர்மஹால் (அரண்மனையின் ஒளி) நூர்ஜஹான் (உலகின் ஒளி)

ü  ஜஹாங்கீர் உருவாக்கிய பூந்தோட்டங்கள் எவை? ஸ்ரீநகரில் ஷாலிமர் மற்றும் நிஷாத்.

ü  ஷாஜகான் இயற்பெயர் என்ன? குர்ரம்

ü  ஷாஜகான் ஜஹாங்கீரின் எத்தனையாவது மகன்? 3வது

ü  ஷாஜகானின் ஆட்சிக்காலம் எது? 1627 - 1658

ü  காந்தகார் பாரசீகர்களிடமிருந்து அக்பரால் எப்போது கைப்பற்றப்பட்டது? 1595

ü  1622இல் காந்தகாரை மீட்ட பாரசீக அரசர் யார்? ஷா அப்பாஸ்.

ü  காந்தகார் மீண்டும் ஷாஜகானால் எப்போது கைப்பற்றப்பட்டது? 1638

ü  பிரான்ஸ் அரசன் பதினான்காம் லூயின் சமகாலத்து அரசன் யார்? ஷாஜகான்

ü  ஷாஜகான் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்? 30 ஆண்டுகள்

ü  ஷாஜகானின் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்கள் யார்?

«  பெர்னியர் - பிரெஞ்சு பயணி

«  தாவர்னியர் - பிரெஞ்சு வைர வியாபாரி

«  மான்டெல்சோ - ஜெர்மன் பயணி (ம) துணிச்சல் வீரர்.

«  பீட்டர் முன்டி - இங்கிலாந்து வணிகர்

«  மனுச்சி - இத்தாலிய பயணி (ம) எழுத்தாளர்.

ü  ஷாஜகானின் மகன்கள் எத்தனை? 4

«  தாராஷிகோ - பட்டத்து இளவரசர்

«  ஷீஜா - வங்காள ஆளுநர்

«  அவுரங்கசீப் - தக்காண ஆளுநர்

«  மூரத் பஷ் - மாளவம் (ம) குஜராத் ஆளுநர்

ü  ஷாஜகான் யாரை அரசராக விரும்பினார்? தாராஷீகோ

ü  தத்துவஞான இளவரசர் என்று அறியப்பட்டவர் யார்? தாராஷிகோ

«  தாராஷிகோ சன்னி பிரிவைச் சேர்ந்தவராயினும் சூபி தத்துவங்களின் மேல் ஆர்வம் கொண்டிருந்தார்.

«  இந்து மதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதை கண்டறிந்தார்.

«  சமஸ்கிருத மொழியில் அமைந்த உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார்.

ü  தாஜ்மகால் யார்க் காலத்தில் கட்டப்பட்டது? ஷாஜகான்

«  ஷாஜகான் கட்டடக்கலையின் இளவரசர் என்றும் பொறியாளர் பேரரசர் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறார்.

தாஜ்மகால்

ü  இது இந்தியப் பாரசீக இஸ்லாமியக் கட்டடக் கலைகளின் கூட்டுக் கலவையாகும்

ü  பாரசீக வம்சாவளியை சேர்ந்த இந்தியராகிய ஸ்தாத் அகமது லஹாவ்ரி என்பவர் தலைமை கட்டடக் கலை நிபுணர.

ü  1623இல் கட்டிட வேலைகள் தொடங்கின.

ü  இந்தியா, பாரசீகம், உதுமானியப் பேரரசு, ஐரோப்பா (20,000க்கும் மேற்பட்ட)

ü  1638-39 முடிப்பதற்கு பணியமர்த்தப்பட்டனர்.

ü  ஏனைய கட்டிடங்கள் 1643இல் முடிவடைந்தன.

ü  அலங்கார வேலைகள் 1647 வரைத் தொடர்ந்தது.

ü  ஷாஜகான் தான் கட்டிய மாளிகைகளுக்கு பயன்படுத்திய பளிங்கு கற்களின் நிறம் என்ன? வெள்ளை.

ü  ஷாஜகானால் உருவாக்கப்பட்ட புதிய தலைநகர் எது? ஷாஜகானாபாத்

«  டில்லியில் கண்ணைக் கவரக்கூடிய செங்கோட்டையை உருவாக்கினார்.

«  புகழ் மிக்க பெருமை வாய்ந்த ஜூம்மா மசூதியை வெள்ளை பளிங்கு கற்களால் கட்டினார்.

«  முத்து மசூதி என்றழைக்கப்படுகின்ற மோதி பள்ளிவாசலை ஆக்ராவில் கட்டி முடித்தார்.

«  மயிலாசனத்தை உருவாக்கி கோகினூர் வைரத்தை அதில் பதித்தார்.

ü  ஷாஜகானின் மகள் யார்? ஜகனாரா.

ü  யாருடைய ஆட்சிக்காலம் முகலாயர்களின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது? ஷாஜகான்

ü  ஷாஜகான் தன் வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகளை எங்கு கழித்தார்? ஆக்ரா கோட்டையில் உள்ள ஷாபர்ஜ் அரண்மனையில்

ü  ஷாஜகான் எப்போது இயற்கை எய்தினார்? 1666

ü  ஷாஜகானைத் தொடர்ந்து வாரிசுரிமைப் போரில் அரியணைக்காக தன்னோடு போட்டியிட்ட தாராஷுகோ, ஷுஜா, முராத் ஆகியோரை வெற்றிகொண்டு அரியணை ஏறியவர் யார்? ஔரங்கசீப் (1658)

ü  அரியணை போட்டியில் தனக்கு எதிரியான முக்கிய போட்டியாளரான தனது சகோதரர் தாராஷுகோவிற்கு உதவிய சீக்கியர் யார்? ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேஜ்பகதூர்.

ü  தாராஷிகோவால் மொழிபெயர்க்கப்பட்ட சமஸ்கிருத உபநிடதங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? சர் இ அக்பர்

ü  கால்சா என்ற ராணுவ அமைப்பை உருவாக்கி அவுரங்கசீப்பை இறுதிவரை எதிர்த்தவர் யார்? பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த சிங்

ü  அவுரங்கசீப் எந்தப் பட்டத்துடன் அரியணை ஏறினார்? ஆலம்கீர்

ü  ஆலம்கீர் என்பதன் பொருள் என்ன? உலகை வெல்பவர் (அ) உலகைக் கைப்பற்றியவர்

ü  மார்வாரில் ஜஸ்வந்த் சிங்கின் மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட வாரிசுரிமை சிக்கலில் அவுரங்கசீப் தலையிட்டு யாரை அரச பதவியில் அமர்த்தினார்? இந்திரசிங்

ü  மார்வார் அரசியலில் அவுரங்கசீப் சிப் தலையிட்டதால் மேவாரின் எந்த அரசர் கலகத்தில் ஈடுபட்டார்? ராணா ராஜ்சிங்

ü  ராணா ராஜ்சிங்கின் கலகத்தை ஆதரித்தவர் யார்? இளவரசர் அக்பர்.

ü  1681ல் அவுரங்கசீப் உடன் ஒரு அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மீவார் அரசர் யார்? ராணா ஜெய்சிங்

ü  வடஇந்தியாவில் அவுரங்கசீப்பிற்கு எதிராக எத்தனை முக்கிய கிளர்ச்சிகள் அரங்கேறின? 3

«  ஜாட் - மதுரா மாவட்டம்

«  சாத்னாமியர் - ஹரியானா

«  சீக்கியர்கள்.

ü  அவுரங்கசீப்பால் தோற்கடிக்கப்பட்ட பிஜப்பூர் சுல்தான் யார்? சிக்கந்தர் அடில் ஷா

ü  ஜெசியா மற்றும் புனித பயண வரியை அவுரங்கசீப் மீண்டும் எந்த ஆண்டு விதித்தார்? 1679

ü  கோல்கொண்டாவின் சுல்தான் யாரை சிறையில் அடைத்தார்? மீர்ஜீம்லா

ü  சுல்தான் அப்துல் ஹாசனை தோற்கடித்து கோல்கொண்டா கோட்டை எப்போது கைப்பற்றப்பட்டது? 1687

ü  அவுரங்கசீப்பிற்கு எதிராக சதை மேல் குத்திய முள்ளாக இருந்தவர் யார்? சிவாஜி

ü  சிவாஜிக்கு எதிராக ஔரங்கசீப் யாரை அனுப்பினார்? செயிஸ்டகான் / ஜெயில் சிங்

ü  சிவாஜி மகனான சாம்பாஜி அவுரங்கசீப்பால் எந்த ஆண்டு கொல்லப்பட்டார்? 1689

ü  நிலவரிக்கு மேலாக வசூலிக்கப்பட்ட எந்த வரி வசூலை அது ஷரியத் சட்டத்தை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற காரணத்திற்காக அவுரங்கசீப் நிறுத்தினார்? அப்வாப்

ü  யாருடைய கூற்றுப்படி தக்காணக் குடற்புண் அவுரங்கசீப்பை அழித்தது? ஜே.எண்.சர்க்கார்

ü  ஔரங்கசீப் எப்போது காலமானார்? 1707

Print Friendly and PDF

Post a Comment

0 Comments