விஜயநகரப் பேரரசு
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
ü 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தில்லி சுல்தானியம் தெற்கே விரிவாக்கத்திற்குத் தயாரான போது தக்காண தென்னிந்தியாவும் நான்கு அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
v தேவகிரியின் யாதவர் (மேற்குத் தக்காணம்/ தற்போதைய மகாராஷ்டிரா)
v ஹொய்சாலரின் துவாரசமுத்திரம் (கர்நாடகா),
v வாரங்கல் பகுதியை சார்ந்த காகதியர்
v மதுரையைச் சார்ந்த பாண்டியர்
ü 1304, 1310 ஆகிய ஆண்டுகளில் மாலிக்காபூரின் இரு படையெடுப்புகளில் இந்தப் பழைய அரசுகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோற்கடிக்கப்பட்டன
ü 1333இல் மதுரையில் சுதந்திரமான மதுரை சுல்தானியம் உருவானது.
ü 1336ஆம் ஆண்டு விஜயநகர அரசு சங்கம வம்ச சகோதரர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோரால் துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரைத் தலைநகராகக் கொண்டு (தற்போதைய ஹம்பி) தோற்றுவிக்கப்பட்டது.
ü 1345இல் வடக்குக் கர்நாடகாவில் ஜாபர்கான் தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டு தன் தலைநகரை தேவகிரியிலிருந்து குல்பர்காவிற்கு மாற்றினார்.
ü பாமன் ஷா என்ற பட்டத்தைச் சூடி பாமினி அரச வம்சத்தைத் (1347-1527) தோற்றுவித்தார்.
ü பாமினி, விஜயநகர அரசுகளுக்கிடையிலான மோதல்கள் பற்றிப் பாரசீக மொழியில் எழுதிய பல குறிப்புகள் உள்ளன.
ü விஜயநகர அரசவையின் ஆதரவில் எழுதப்பட்ட மனுசரிதம், சாளுவவையுதயம் போன்ற இலக்கியங்கள் விஜயநகர அரசின் வம்சாவளி, அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தகவல்களைத் தருகின்றன.
ü தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இலக்கியமான ராயவாசகமு கிருஷ்ணதேவராயரின் கீழிருந்த நாயக்கமுறை பற்றிய ஆர்வமூட்டக்கூடிய தகவல்களைத் தருகின்றது.
ü 14-16 நூற்றாண்டு வரை தென்னிந்தியாவிற்கு வந்த பல அயல்நாட்டுப் பயணிகள் தங்கள் பயணங்களைப் பற்றி எழுதியுள்ளனர்.
v மொராக்கோ பயணி இபன் பதூதா(1333-45),
v பாரசீகப் பயணி அப்துர் ரசாக்(1443-45),
v ரஷியப் பயணி நிகிடின் (1470-74),
v போர்த்துகல் நாட்டு வணிகர் டோமிங்கோபயஸ்,
v இத்தாலி பயணி நூனிஸ் (1520-35)
தோற்றம்
ü விஜயநகரப் பேரரசை உருவாக்கியவர்கள் – சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிகரர், புக்கர்
ü ஹரிகரர், புக்கர் யாரிடம் பணியாற்றினார்கள் – ஹெய்சாள அரசரிடம்
ü விஜயநகர பேரரசின் காலம் – 1336 to 1650
ü ஹொய்சாள அரசர் மூன்றாம் பல்லாலர் மதுரை சுல்தானால் கொல்லப்பட்ட பின்னர் நடைபெற்றிருக்க வேண்டும்
ü தொடக்கத்தில் துங்கபத்திரை நதியின் வடக்குக் கரையில் அனகொண்டி அருகே தலைநகர் அமைந்திருந்தது.
ü விரைவில் ஆற்றின் தென்கரையில் அமைந்திருந்த ஹொய்சாள நகரமான ஹொசபட்னா (ஹம்பிக்கு அருகே) என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
ü ஆன்மீக குருவான வித்யாரண்யருக்கு மதிப்பளிக்கும் விதத்தில் வித்யா நகர் என குறிப்பிட்ட ஒரு காலம் வரை அழைக்கப்பட்டது.
ü பின்னர் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் எனப் புதிய பெயர் சூட்டப்பட்டது.
ü பெரிஷ்டாவின் கூற்றுப்படி,மூன்றாம் வல்லாலத்தேவன் தன் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளில் இருந்து காப்பதற்கு தன் மகன் வீரவிஜயவல்லாலனின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார் எனவும்,இந்நகரமே பிற்காலத்தில் விருபாட்சபுரம், ஹோசப்பட்டிணம், வித்யாநகரம், விஜயநகரம் என அழைக்கப்படுகிறது.
ü விஜயநகர அரசர்கள், சாளுக்கியரின் முத்திரையான பன்றி (வராகம்) உருவத்தைத் தங்களது அரச முத்திரையாகக் கொண்டனர்.
ü இவ்வரசானது நான்கு அரச மரபுகளால் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆளப்பட்டது.
1. சங்கம (1336-1485),
2. சாளுவ (1485-1505),
3. துளுவ (1505-1570),
4. ஆரவீடு (1570 -1646)
ü முதலாம் புக்கருடைய மகனான குமார கம்பணா மதுரை சுல்தானியத்திற்கு 1370-இல் முற்றுப்புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவுவதிலும் வெற்றி பெற்றார்.
ü குமார கம்பணாவின் மனைவி கங்காதேவியால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்ற மதுரா விஜயம் என்னும் நூல் விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டதைத் தெளிவாக விளக்குகிறது.
ü குமார கம்பண்ணாவின் நம்பிக்கைக்குரிய தளபதி மாரையா நாயக்கர்.
ü தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதியை சம்புவராயர் ஆண்டு வந்தனர்.
ü 1500 வாக்கில் பாண்டிய நாடு விஜயநகர அரசின் ஒரு பகுதியானது.
ü புக்கர் இயற்கை எய்திய போது பரந்த ஒரு நிலப்பரப்பைத் தம் மகன் இரண்டாம் ஹரிஹரர் ஆள்வதற்காக விட்டுச்சென்றார்.
ü பாமினி அரசிடமிருந்து பெல்காம், கோவா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியதே இவருடைய போற்றத்தகுந்த சாதனையாகும்.
ü இவருடைய மகன் முதலாம் தேவராயர் ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர்களைத் தோற்கடித்தார்.
ü நீர் பற்றாக்குறை போக்குவதற்கு துங்கபத்திரா ஆற்றின் குறுக்கே அணைக் கட்டியவர் - முதலாம் தேவராயர்
ü முதலாம் தேவராயர் ஆட்சியின் போது வந்த வெளிநாட்டு பயணி - நிக்கலோ கோண்டி
ü இவருக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டாம் தேவராயர் சங்கம வம்சத்தின் தலை சிறந்த அரசராவார்.
ü கஜபெட்டகாரா (யானைகள் வேட்டையாடுபவர்) எனும் பெயர் கொண்டவர் - இரண்டாம் தேவராயர்
ü இரண்டாம் தேவராயரின் காலத்தில் இங்கு வந்த பாரசீக நாட்டின் தூதுவர் அப்துர் ரஸாக் கொச்சி சாமுத்திரி அரசவைக்கும் விஜயநகரத்திற்கும் வருகை தந்தார்.
ü இரண்டாம் தேவராயர் மிகப்பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தினார் என்று குறிப்பிடுகின்றார்.
ü இரண்டாம் தேவராயர் இலங்கை அரசனிடமிருந்தும் கப்பம் பெற்றார்.
ü தம்மிடம் பணி செய்வதற்காகவும் தம்முடைய படைகளுக்கு நவீனப்போர் முறைகளில் பயிற்சியளிப்பதற்காகவும் இஸ்லாமிய வீரர்களை தமது படையில் பணியமர்த்தும் முறையை இவர் தொடங்கி வைத்தார்.
ü விஜயநகரப் பேரரசின் திறமை மிக்க படைத்தளபதியான சாளுவ நரசிம்மர், சங்கம வம்சத்தின் கடைசி அரசரான இரண்டாம் விருபாக்சிராயரைக் கொலை செய்துவிட்டு, 1485 இல் தம்மையே பேரரசராக அறிவித்துக் கொண்டார்.
ü ஆனால், அவருடைய மரணத்துடன் அவரால் உருவாக்கப்பட்ட சாளுவ வம்சமும் முடிவுக்கு வந்தது.
ü அவருக்குப் பிறகு திறமை மிகுந்த படைத்தளபதியான நரச நாயக்கர் அரியணையைக் கைப்பற்றித் தனது மரணம் வரையிலும் நாட்டைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
ü 1505இல் அவருடைய மூத்த மகன் வீரநரசிம்மர் துளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார்.
ü அவரைத் தொடர்ந்து அவருடைய தம்பி கிருஷ்ணதேவராயர் அரியணை ஏறினார்
கிருஷ்ணதேவராயர்
ü துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக்கு உரியவர் கிருஷ்ணதேவராயர் ஆவார்.இவர் 20 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்.
ü கிருஷ்ணதேவராயர் முழு நிறைவான அரசர் என வரலாற்று அறிஞர் டோமிங்கோ பயஸ் குறிப்பிட்டுள்ளார்.
ü தனது ஆட்சியின் தொடக்கத்தில் மைசூருக்கு அருகேயிருந்த கலக மனப்பான்மை கொண்ட உம்மத்தூர் குறுநில மன்னனைத் தோற்கடித்துப் பணியச் செய்தார்.
v துங்கபத்ரா நதிப் பள்ளத்தாக்குப் பகுதியில் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவது முதல் பணி
v குல்பர்காவைக் கைப்பற்றுவது அவரின் இரண்டாவது இலக்கானது
ü பாமினி சுல்தான் முகமதுஷா, அவருடைய அமைச்சரால் பதவி பறிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தார்.கிருஷ்ணதேவராயர் அவரை விடுவித்து மீண்டும் அரியணையில் அமர வைத்தார்.
ü ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிரதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார்.
ü போர்த்துகீசியப் பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை கிருஷ்ணதேவராயர் எளிதாகத் தோற்கடித்தார். தொடர்ந்து பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்.
ü போர்த்துகீசியர் விஜயநகருக்கு இராணுவ உதவிகளைச் செய்து பத்கல் என்னும் இடத்தில் கோட்டைகட்டிக்கொள்ளும் உரிமையைப் பெற்றனர்.
ü தனது வெற்றித் தூணை சிம்மாச்சலத்தில் நிறுவினார்.
ü மழை நீரைச் சேமிப்பதற்காகப் பெரிய நீர்ப்பாசனக் குளங்களையும், நீர்த்தேக்கங்களையும் உருவாக்கினார்
ü இவர் தமது தலைநகரான ஹம்பியில் கட்டிய புகழ்பெற்ற கோவில்கள்
v கிருஷ்ணசாமி கோவில்,
v ஹசாரா ராமசாமி கோவில்,
v விட்டலாசுவாமி கோவில்
ü போர்களின் மூலம் தாம் பெற்ற செல்வங்களை மிகப்பெரும் தென்னிந்தியக் கோவில்களுக்கு வழங்கி, அதன் மூலம் கோவில்களின் நுழைவாயில்களில் கோபுரங்களை நிறுவினார்.
ü அவரது பெயருக்குப் புகழை சேர்க்கும் வண்ணம் அவை ராயகோபுரம் என அழைக்கப்பட்டன ..
ü ஸ்ரீசைலம், திருப்பதி, காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலுள்ள சைவ, வைணவக் கோவில்களுக்குப் பெருமளவில் கொடையளித்தார்.
ü விஜயநகருக்கு வருகை தந்த சமகாலத்து வெளிநாட்டுப் பயணிகளான நூனிஸ், பயஸ் போன்றோர் அவருடைய ஆளுமை குறித்தும் விஜயநகரத்தின் உயர்நிலை, செல்வச் செழிப்பு ஆகியன பற்றியும் பாராட்டுகளை விட்டுச் சென்றுள்ளனர்.
ü கிருஷ்ணதேவராயர் அவைக்கு தனது தூதுவர்களை அனுப்பி வைத்த போர்ச்சுகீசியர் - அல்புகர்க்
ü அரேபியாவிலிருந்தும், ஈரானிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் குதிரைகளை அவர் இறக்குமதி செய்தார்.
ü அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் அவரின் அவையை அலங்கரித்தனர்.
ü அவர்களுள் மகத்தானவர் அல்லசானி பெத்தண்ணா ஆவார்.
ü மற்றொரு குறிப்பிடத்தகுந்த ஆளுமை தெனாலி ராமகிருஷ்ணன் (தெனாலிராமன்) ஆவார்..
ü கிருஷ்ணதேவராயரே பெரும் அறிஞராக கருதப்படுகிறார்
ü ஆமுக்தமால்யதா(ஆண்டாளின் கதை) எனும் நூலைஇயற்றியுள்ளார்.
ü ஆனாலும் அவருடைய தலைசிறந்தசாதனை, ஒரு மதிநுட்பம் மிக்க நிர்வாகியாக அவர் நாயக் அல்லது நாயங்காரா முறையை மறுசீரமைப்பு செய்து அதற்கு சட்ட அங்கீகாரத்தையும் கொடுத்ததாகும்.
ü கிருஷ்ணதேவராயர் இறந்த பிறகு அவருடைய சகோதரர் அச்சுததேவராயர் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
ü கிருஷ்ணதேவராயரின் மருமகன் ராமராஜா
ü அச்சுதராயருக்கு செல்லப்பா (சாளுவநாயக் என்றும் அறியப்படுபவர்) என்பாரின் ஆதரவு இருந்தது
ü அச்சுதராயருக்குப் பின்னர் அரியணை ஏறியவர் - முதலாம் வேங்கடர்
ü இவர்களுக்குப் பின்னர் குறைந்த வயதைக் கொண்ட சதாசிவராயர் முடிசூட்டப்பட்டார்.
ü பகர ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த ராமராயர் பேரரசின் திறமை மிக்கத் தளபதியாவார்.
ü சிறந்த வீரரும் ராணுவ வல்லுநருமான ராமராஜர் பாமினி சுல்தான்களை ஒருவரோடு ஒருவரை மோதச் செய்யும் திறமை பெற்றிருந்தார்.
ü போர்த்துகீசியரோடு ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் பீஜப்பூர் அரசருக்குக் குதிரைகள் அனுப்பப்படுவதை நிறுத்தினார்.
ü சில காலம் கழித்து கோல்கொண்டா, அகமதுநகர் சுல்தான்களுக்கு எதிராக பீஜப்பூரோடு கைகோத்தார்.
ü எதிரிகளின் கூட்டுப்படைகள் 1565 இல் தலைக்கோட்டை என்னுமிடத்தில் விஜயநகரப் படைகளை எதிர்கொண்டன . ராக்சசதங்கடி(தலைக்கோட்டைப் போர்) என்றறியப்பட்ட இப்போரில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டது.
ü ராமராஜாவே படைப்பிரிவுகளுக்குத் தலைமை ஏற்று தனது சகோதரர்கள், ஏனைய உறவினர்களோடு போர்க்களம் புகுந்தார்.
ü ராமராயர் போர்க்களத்தில் கொல்லப்பட்டார்.
ü அவருடைய சகோதரர் திருமலைதேவராயர்,விலை மதிக்கமுடியா செல்வங்களோடு சந்திரகிரியைச் சென்றடைந்தார்.
ü அரசர் சதாசிவராயர் மற்றும் அவருடைய வீரர்களும் பெனுகொண்டாவுக்குத் தப்பிச் சென்றனர்.
ü ராமராயரின் சகோதரர் திருமலைதேவராயர் 1570இல் தன்னை அரசராக அறிவித்து நான்காவது அரசமரபான ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தார்.
ü ஆரவீடு வம்சத்தார் பெனுகொண்டாவில் புதியதலைநகரை உருவாக்கிப் பேரரசை சில காலம் நல்ல நிலையில் வைத்திருந்தனர்.
ü விஜயநகர அரசு 1646இல் இறுதியாக வீழ்ச்சியுற்றது.
ü 1601இல் அரசு விசுவாசிகள் பெரும்பேடு என்னும் ஊரைச் சேர்ந்த யச்சமநாயக்கர் தலைமையிலும் எதிர் தரப்பினர் வேலூர் நாயக் (வேலூர்) தலைமையிலும் உத்திரமேரூரில் கடுமையான போரில் ஈடுபட்டனர்.
ü இப்போரில் சுதந்திர அரசுகளாக மாறிவிட்ட தஞ்சாவூர், மதுரை, செஞ்சி நாயக்க அரசுகள் வேலூர் நாயக்கை ஆதரித்தனர்.
ü சந்திரக்கிரியைத் தலைநகராகக் கொண்ட கடைசி விஜயநகரப் பேரரசர் - முதலாம் ஸ்ரீரங்கர்
ü விஜயநகரப் பேரரசின் கடைசி அரசர் - மூன்றாம் ஸ்ரீரங்கர்
நிர்வாகம்
ü அரசபதவி பரம்பரையானதாக இருந்தது அரசர் ஒருவர் இயற்கை எய்திய பின்னர் அவருடைய மூத்தமகன் அரசபதவியேற்பது என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது.
ü அரசபதவியேற்றவர் வயதில் சிறியவராக இருந்தால், நிர்வாகப்பணிகளைக் கவனிப்பதற்காகப் பகர ஆளுநரை நியமனம் செய்யும் முறையும் நடைமுறையில் இருந்தது.
அரசமைப்பு
ü ராஜ்யா என்னும் மண்டலங்களாக நாடு பிரிக்கப்பட்டது.
ü ஹொய்சாள, ராஜ்யா, அரகா, பரகூர், மங்களூர், முளுவாய்ஆகியன முக்கியமான ராஜ்யாக்களாகும்.
ü 1400-இல் தமிழகப் பகுதிகளில் சந்திரகிரி, படைவீடு, வலுதலம்பட்டு, திருச்சிராப்பள்ளி, திருவாரூர் என ஐந்து ராஜ்யாக்கள் இருந்தன.
ü ஒவ்வொரு ராஜ்யாவும் சீமை, ஸ்தலம், கம்பனா எனும் சிறிய நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
ü கிருஷ்ணதேவராயரால் நாயக் முறை அறிமுகமானப்போது ராஜ்யாக்கள் தங்களது நிர்வாக, வருவாய் முக்கியத்துவத்தை இழந்ததன.
ü பேரரசு பல்வேறு மண்டலங்கள் (மாநிலம்), நாடுகள் (மாவட்டங்கள்), ஸ்தலங்கள் (வட்டங்கள்), கிராமங்கள் என பிரிக்கப்பட்டிருந்தது.
ü ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது.
ü கிராமமே நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாக இருந்தது.
ü ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபை என்ற அமைப்பிருந்தது.
ü கிராமம் தொடர்பான விடயங்களைக் கௌடா என்றழைக்கப்பட்ட கிராமத்தலைவர் நிர்வகித்தார்.
அமைச்சர்கள்/அரசு அதிகாரிகள்
ü அரசரே அனைத்து அதிகாரங்களையும் பெற்றவராவார்.
ü முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் பின்வருமாறு:
v முதலமைச்சர் – மகாபிரதானி
v தண்டநாயகா - கணக்கர்
v முத்திரைகர்த்தா - நாணய அதிகாரி
v மகாநாயக்கசரியர் - அரசர் இவரின் மேற்பார்வையில் கிராமங்களை கண்காணித்து வருகிறார்.
v செணாதியோவா - கிராம கணக்கர்
v கண்டச்சரியர் - இராணுவத்துறை
v அத்தவாகனம் - நிலவருவாய் துறை
v சிஸ்தி - நிலவரி
v கடமை,இறை - மற்ற வரி வகைகள்.
v தளவாய் – தளபதி
v வாசல் - அரண்மனைப் பாதுகாவலர்
v ராயசம் - செயலர்/கணக்கர்
v அடைப்பம் - தனி உதவியாளர்
v காரிய கர்த்தா - செயல் முகவர்
நாயக்க முறை
ü நாயக் என்னும் சொல் தெலுங்கு, கன்னடப் பகுதிகளில் பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இராணுவத்தலைவர், (அ) இராணுவவீரர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ü பதிமூன்றாம் நூற்றாண்டில் காகத்திய அரசில் ஒரு நாயக்கின் இராணுவ சேவைக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்டபகுதியின் வருவாயை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது.
ü விஜயநகர அரசில் இராணுவ சேவைக்குப் பதிலாக வருவாய் ஈட்டித்தரும் நிலப்பகுதிகளை வழங்கும் முறை 1500 அல்லது அதற்குச் சற்று முன்னதாகவே தொடங்கிற்று.
ü ராணுவத்தின் உயர் அதிகாரிகள் ஆற்றும் பணிக்கு ஈடாக நிலங்கள் வழங்கப்பட்டன.
ü இந்நிலங்கள் அமரம் என்றழைக்கப்பட்டது.
ü படை வீரர்களுக்கு ஊதியம் பொதுவாக பணமாக வழங்கப்பட்டது.
ü கல்வெட்டுகள் இம்முறையை
v நாயக்கட்டணம் என தமிழிலும்,
v நாயக்தானம் என கன்னடத்திலும்,
v நாயன்கரமு எனத் தெலுங்கிலும் குறிப்பிடுகின்றன.
ü விஜயநகர அரசு இருநூறுக்கும் மேற்பட்ட நாயக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகவும் அந்நாயக்குகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குதிரை, காலாட்படை வீரர்களைப் பராமரித்து தேவைப்படும் நேரத்தில் அரசருக்கு இராணுவச் சேவை செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் எனவும் நூனிஸ் குறிப்பிடுகின்றார்.
ü இராணுவத்தில் இருந்த நான்கு படைப்பிரிவுகள் : குதிரைப்படை, காலாட்படை, பீரங்கி படை, யானைப்படை
ü நாயக்குகள் பிராமண, பிராமணர் அல்லாத பல சாதிகளைச் சேர்ந்தவர்களாயிருந்தனர்.
ü கிருஷ்ணதேவராயரிடம் பணிபுரிந்த செல்லப்பா போன்ற மிகச்சிறந்த நாயக்குகள் பிராமணர்கள் ஆவர்.
ü பலர் உயர்மட்டப் பணிகளில் (ஆளுநர், படைத்தளபதி, கணக்கர்) அமர்த்தப்பட்டு அரசரின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டனர்.
ü மதுரை, தஞ்சாவூர், இக்கேரி போன்ற நாயக்குகள் வலுவான அரசுகளை உருவாக்கிக் குறுநிலத் தலைவர்களைக் கட்டுப்படுத்தினர்.
ஆயக்காரர் முறை
ü கி.பி.15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென்னிந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட முறை ஆயக்காரர் முறை (அ) கிராம அதிகாரிகள் முறையாகும். இவை விஜய நகர அரசர்களால் அமைக்கப்பட்டது.
ü சபைகள், ஊர், நாடு என்னும் முறை மாற்றப்பட்டு ஆயக்காரர் என்ற அதிகாரிகளும், கிராமத் தொழிலாளர்களும் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டது.
ü விஜயநகர ஆட்சிக்காலத்தில் ஏரி வாரியம், தோட்டவாரியம், பஞ்சவார வாரியம் போன்றவற்றை கர்ணம் என்பவர் செய்ய வேண்டியிருந்தது.
ü இவரி்டம் கிராமத்தில் உள்ள நன்செய், புன்செய், தோப்புகள், சுடுகாடு, மேய்ச்சல் நிலங்கள், நிலவரி போன்றத் தகவல்கள அ்டங்கிய அட்டவணை (அ) அடங்கல் என்ற புத்தகமும் சிட்டா என்ற குறிப்பேடும் இருந்தது.
கல்விக் கூடங்கள்
ü கிராமத்தில் திண்ணை பள்ளிகள் மூலம் அடிப்படைக் கல்வி கற்பிக்கப்பட்டது.
ü ஹோனவர் என்னுமிடத்தில் ஆண் பிள்ளைகளுக்கு என்றும் பெண் பிள்ளைகளுக்கு என்றும் பள்ளிகள் செயல்பட்டதாக இபின் பதுதா குறிப்பிட்டுள்ளார்.
ü வேதங்கள் சாத்திரங்கள் புராணங்கள் ஆறு வகையான தர்சனங்கள் முதலியவற்றில் புலமைப் பெற்ற ஆதித்யராயன் என்ற அந்தணருக்கு தேவராயபுரம் (விரிஞ்சிபுரம்) என்ற கிராமத்தை மல்லிகர்ஜுனராயர் பட்ட விருத்தியாக அளித்துள்ளார்.
சமயம்
ü சங்கம மரபினர் சைவர்களாகத் திகழ்ந்தனர். குலத்தெய்வம் : விருபாக்ஷர்
ü மற்ற மரபினர் வைணவர்கள்.
ü மக்கள் அனைவரும் சமய சுதந்திரம் பெற்று திகழ்ந்தனர் என்று போர்துகீசியப் பயணி பார்போசா குறிப்பிடுகிறார்.
சமூக வாழ்க்கை
ü சமூகத்தில் பிராமணர், சத்திரியர்,வைசியர், சூத்திரர் என்ற நான்குப் பிரிவுகள் இருந்ததாக அல்லசாணிப் பெத்தண்ணா தனது மனுசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ü அடிமைகளை பற்றி நிக்கோலோ டி கோண்டி தனது குறிப்புகளில் கூறியுள்ளார்.
ü உடை : பட்டு, பருத்தி
ü பொழுதுப் போக்குகள் : நடனம், இசை, மல்யுத்தம், சூதாட்டம், சேவல் சண்டை
மகளிர் நிலை
ü பெண்கள் பழமையில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர்.அரசக்குலப் பெண்கள் கல்வியிற் சிறந்து விளங்கினர்.
ü புகழ்வாய்ந்த பெண்பாற்ப் புலவர்கள் : ஹன்னம்மா,திருமாலம்மா மற்றும் குமரக் கம்பண்ணாவின் மனைவி கங்காதேவி
ü தேவதாசிமுறை, அரசகுடும்பங்களின் பலதாரமணம் வழக்கத்தில் இருந்ததாகவும், சதிவழக்கம் பெருமையாகக் கருதப்பட்டதாகவும் போர்ச்சுகீசியப் பயணி நூனிஸ் விளக்கமாகக் கூறியுள்ளார்.
பொருளாதார நிலை
ü விஜயநகர அரசர்கள் ‘வராகன்’ என்று குறிப்பிடப்பட்ட தங்க நாணயங்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டனர்.
v இது தமிழில் பொன் என்றும்,
v கன்னடத்தில் ஹொன்னு என்றும் குறிப்பிடப்பட்டது.
v இந்தத் தங்க நாணயங்கள் வெவ்வேறு இந்து தெய்வங்களின் உருவங்களையும் காளை, யானை, கன்டபெருண்டா (இரட்டைக்கழுகு வடிவத்தில் உள்ள இந்த உருவம் தனது அலகிலும் நகத்திலும் யானையைக் கொத்திக் கொண்டிருப்பதாகக் காணப்படுகிறது) என்ற கற்பனைப் பறவை ஆகிய விலங்கு உருவங்களையும் தாங்கியுள்ளன.
v நாணயத்தில் அரசனுடைய பெயர் நகரி அல்லது கன்னட எழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
v மேலும் பக்கோடா என்ற நாணயமும் புழக்கத்திலிருந்தது.
ü வேளாண்மை நாட்டின் முக்கியத் தொழிலாக இருந்தது.
ü நிலவருவாய்த்துறை அதவானே என்று அழைக்கப்பட்டது.
ü விளைச்சலில் 1/6-பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது.
வாணிகம்
ü மலபார் கடற்கரையில் பல துறைமுகங்கள் இருந்தன.
ü அவற்றுள் மிக முக்கியமானது கண்ணனூர் துறைமுகம்.
ü இரண்டாம் தேவராயர் ஆட்சியில் 300 துறைமுகங்கள் இருந்ததாக அப்துல் ரசாக் கூறுகிறார்.
ü கண்ணனூர் துறைமுகத்துடன் வாணிகத் தொடர்புக் கொண்டிருந்த நாடுகள் : அரேபியா, பாரசீகம், தென் ஆப்ரிக்கா மற்றும் போர்ச்சுகல்.
ü ஏற்றுமதி பொருள்கள் : பட்டு, பருத்தி, நறுமணப் பொருள்கள், அரிசி, வெடியுப்பு, சர்க்கரை
ü இறக்குமதி பொருள்கள் : குதிரைகள், முத்து, பவளம், செம்பு, சீனப்பட்டு, வெல்வெட், பாதரசம்.
v சீனா – பட்டு; மலபார் – நறுமணப்பொருட்கள்; பர்மா – விலையுயர்ந்த கற்கள்
ü கப்பல் கட்டும்த்தொழிலும் வளர்ச்சியடைந்தது.
குடிசைத் தொழில்கள்
ü இவற்றுள் மிகவும் முக்கியமானவை நெசவுத்தொழில்,சுரங்கத்தொழில், உலோகத்தொழில் ஆகியனவாகும்.
ü கில்டுகள் என்றழைக்கப்படும் தொழில்சார் அமைப்புகள் கைவினை, குடிசைத்தொழில்களை முறைப்படுத்தின.
ü கை வினைஞர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாக அப்துர் ரஸாக் குறிப்பிட்டுள்ளார்.
நீதி முறை
ü தண்டனைகள் தருமசாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்தது.
ü கிராமத்தில் கிராமத்து மகாஜனங்கள் தலைமை வகித்த நீதிமன்றங்களும்,
ü கோவில்களில் ஸ்தானிகர்கள் வழங்கிய கோயில் நீதிமன்றங்களும்,
ü வியாபார நீதிமன்றங்களும்வழக்கத்திலிருந்தன.
கட்டிடக்கலை
ü தூண்களின் உச்சியில் அலங்காரத்துடன் கூடிய தாமரை மொட்டுக் காணப்படுகிறது.
ü தூண்களில் காணப்படும் நாகப்பந்தம் என்னும் அமைப்பு விஜயநகர ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்டது.
ü தூண்களில் அதிகம் குதிரைகள் இடம் பெற்றிருந்தன.
ü கிருஷ்ணதேவராயர் தனது தலைநகரான ஹம்பியில் கட்டிய புகழ்பெற்ற கோவில்கள்
v கிருஷ்ணசாமி கோவில்,
v ஹசாரா ராமசாமி கோவில்,
v விட்டலாசுவாமி கோவில்
ü போர்களின் மூலம் தாம் பெற்ற செல்வங்களை மிகப்பெரும் தென்னிந்தியக் கோவில்களுக்கு வழங்கி, அதன் மூலம் கோவில்களின் நுழைவாயில்களில் கோபுரங்களை நிறுவினார்.
ü அவரது பெயருக்குப் புகழை சேர்க்கும் வண்ணம் அவை ராயகோபுரம் என அழைக்கப்பட்டன ..
ü ஸ்ரீசைலம், திருப்பதி, காளஹஸ்தி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலுள்ள சைவ, வைணவக் கோவில்களுக்குப் பெருமளவில் கொடையளித்தார்.
ஹம்பி
ü விஜயநகர பேரரசின் தலைநகராகவும், பன்னாட்டு வாணிகத்தலமாகவும் விளங்கியது.
ü இந்நகரம் UNESCO-வால் அங்கீகரிக்கப்பட்டது.
ஹசாரா ராமசாமி கோவில்
ü பாரசீக மொழியில் ஹசாரா என்றால் ஓராயிரம் எனப் பொருள்படும்.
ü ராமாயணம், பாகவத்தில் வரும் கதைகள் சிற்ப வடிவில் காணப்படுகின்றன.
விட்டலாசுவாமி கோவில்
ü இக்கோயிலில் உள்ள தூண்கள் இசைத் தூண்கள் (அ) சரிகம தூண்கள் என்றழைக்கப்படுகின்றன.
ü இக்கோவில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டது.
விருபாக்ஷர் கோவில்
ü ஹெய்சாளர்க் காலத்தில் கட்டப்பட்டது;கிருஷ்ணதேவராயர்க் காலத்தில் மெருகூட்டப்பட்டது.
ü கிழக்கில் உள்ள கோபுரம் புறம்குவிந்த(Convex) முறையில் கட்டப்பட்டது.
இலக்கியப் பங்களிப்பு
ü விஜயநகர கால இலக்கியச் சான்றுகள் வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன.
v கிருஷ்ணதேவராயரின் ஆமுக்தமால்யாதம்,(தெலுங்கு) உஷா பரிணயம், ஜாம்பவதி கல்யாணம் (சமஸ்கிருதம்)
v தெனாலி ராமகிருஷ்ணரின் பாண்டுரங்கமகாத்தியம்
v கங்காதேவியின் மதுரா விஜயம்
v ராம பத்திராம்பாள் ஆப்யுதயமும்,
v திருமாலாம்பாள் வரதம்பிகா பரிணயம்
v அல்லசாணி பெத்தண்ணாவின் மனு சரிதம், ஹரிகதாசாரம்
v ஸ்ரீநாதர், பெத்தண்ணா , ஜக்கம்மா ,துக்கண்ணா போன்ற புலவர்கள் சமஸ்கிருத,பிராகிருதமொழிகளில் எழுதப்பட்ட நூல்களைத் தெலுங்கு மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
நினைவிற்கு
ü பாமினி, விஜயநகர அரசுகளுக்கிடையிலான மோதல்கள் பற்றி எம்மொழியில் எழுதிய பல குறிப்புகள் உள்ளன? பாரசீக மொழியில்
ü விஜயநகர, பாமினிப் பேரரசிற்கிடையே எல்லைக்கோடாக இருந்த நதி - கிருஷ்ணா
ü விஜயநகர அரசவையின் ஆதரவில் எழுதப்பட்ட எந்தெந்த இலக்கியங்கள் விஜயநகர அரசின் வம்சாவளி, அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தகவல்களைத் தருகின்றன? மனுசரிதம், சாளுவவையுதயம்
ü கிருஷ்ணதேவராயரின் கீழிருந்த நாயக்கமுறை பற்றிய ஆர்வமூட்டக்கூடிய தகவல்களைத் தரும் நூல் எது? ராயவாசகமு (தெலுங்கு)
ü விஜயநகர பேரரரசானது எத்தனை அரச மரபுகளால் எத்தனை ஆண்டுகளுக்கு மேலாக ஆளப்பட்டது? நான்கு/ முந்நூறு
v சங்கம (1336-1485),
v சாளுவ (1485-1505),
v துளுவ (1505-1570),
v ஆரவீடு (1570 -1646)
ü விஜயநகர பேரரசின் காலம்? 1336 to 1646
ü விஜயநகரப் பேரரசு எங்கு நிறுவப்பட்டது? கர்நாடகத்தின் தென்பகுதியில், துங்கப்பத்திரா நதிக்கரையில்
v தொடக்கத்தில் துங்கபத்திரை நதியின் வடக்குக் கரையில் அனகொண்டி அருகே தலைநகர் அமைந்திருந்தது.
v விரைவில் ஆற்றின் தென்கரையில் அமைந்திருந்த ஹொய்சாள நகரமான ஹொசபட்னா (ஹம்பிக்கு அருகே) என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
v ஆன்மீக குருவான வித்யாரண்யருக்கு மதிப்பளிக்கும் விதத்தில் வித்யா நகர் என குறிப்பிட்ட ஒரு காலம் வரை அழைக்கப்பட்டது.
v பின்னர் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் எனப் புதிய பெயர் சூட்டப்பட்டது.
v பெரிஷ்டாவின் கூற்றுப்படி,மூன்றாம் வல்லாலத்தேவன் தன் நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமிய படையெடுப்புகளில் இருந்து காப்பதற்கு தன் மகன் வீரவிஜயவல்லாலனின் பெயரில் விஜயநகரத்தை அமைத்தார் எனவும்,இந்நகரமே பிற்காலத்தில் விருபாட்சபுரம், ஹோசப்பட்டிணம், வித்யாநகரம், விஜயநகரம் என அழைக்கப்படுகிறது.
ü விஜயநகரப் பேரரசை உருவாக்கியவர்கள்? சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிகரர், புக்கர்
ü ஹரிகரர், புக்கர் யாரிடம் பணியாற்றினார்கள்? ஹெய்சாள அரசரிடம்
ü யாருடைய ஆட்சியின் போது தமிழகத்தின் தொண்டை மண்டலப் பகுதியின் மீது கவனம் திரும்பியது? முதலாம் புக்கரின்
ü தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதியை ஆண்டு வந்தவர்கள் யார்? சம்புவராயர்
ü தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சியைத் தொடங்கியவர்? முதலாம் புக்கரின் மகனான குமாரகம்பன்னா
ü குமார கம்பணா மதுரை சுல்தானியத்திற்கு எப்போது முற்றுப்புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவினார்? 1370-இல்
ü குமார கம்பணாவின் மனைவி கங்காதேவியால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பெற்ற எந்தநூல் விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்டதைத் தெளிவாக விளக்குகிறது.? மதுரா விஜயம்
ü குமார கம்பண்ணாவின் நம்பிக்கைக்குரிய தளபதி யார்? மாரையா நாயக்கர்
ü புக்கர் இயற்கை எய்திய போது பரந்த ஒரு நிலப்பரப்பைத் தம் மகன் இரண்டாம் ஹரிஹரர் ஆள்வதற்காக விட்டுச்சென்றார்.
v பாமினி அரசிடமிருந்து பெல்காம், கோவா ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியதே இவருடைய போற்றத்தகுந்த சாதனையாகும்.
ü இரண்டாம் ஹரிஹரனுடைய மகன் யார்? முதலாம் தேவராயர்
v ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர்களைத் தோற்கடித்தார்.
ü நீர் பற்றாக்குறை போக்குவதற்கு துங்கபத்திரா ஆற்றின் குறுக்கே அணைக் கட்டியவர் - முதலாம் தேவராயர்
ü முதலாம் தேவராயர் ஆட்சியின் போது வந்த வெளிநாட்டு பயணி - நிக்கலோ கோண்டி
ü இவருக்கு முதலாம் தேவராயருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்றவர் யார்? இரண்டாம் தேவராயர்.
ü சங்கம வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்? இரண்டாம் தேவராயர்
ü இரண்டாம் தேவராயர் ஆட்சிக்காலத்தில் போது, கொச்சி சாமுத்திரி அரசவைக்கும் விஜயநகரத்திற்கும் வருகை தந்தவர் யார்? அப்துல் ரசாக்
ü கஜபெட்டகாரா (யானைகள் வேட்டையாடுபவர்) எனும் பெயர் கொண்டவர் யார்? இரண்டாம் தேவராயர்
ü இரண்டாம் தேவராயர் எந்த நாட்டின் அரசனிடமிருந்தும் கப்பம் பெற்றார்? இலங்கை
ü இஸ்லாமிய வீரர்களை தமது படையில் பணியமர்த்தும் முறையை தொடங்கி வைத்தவர் யார்? இரண்டாம் தேவராயர்
ü சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்? இரண்டாம் விருபக்க்ஷிராயர்
ü சங்கம வம்சத்தினர் பின்பற்றிய சமயம்? சைவம்
ü சங்கம வம்சத்தின் ஆட்சிக்காலம்? 1336-1485
ü சங்கம வம்சத்தின் குலத்தெய்வம்? விருபாக்ஷர்
ü இரண்டாம் விருபக்க்ஷிராயரைக் கொலை செய்துவிட்டு, 1485 இல் தம்மையே பேரரசராக அறிவித்துக் கொண்டவர் யார்? சாளுவ நரசிம்மர் (சாளுவ வம்சத்தைத் தோற்றுவித்தவர்;இவருடன் இவ்வம்சமும் முடிவுக்கு வந்தது)
ü சாளுவ வம்சத்தின் ஆட்சிக்காலம்? 1485-1505
ü சாளுவ நரசிம்மரின் திறமைமிக்க படைத்தளபதி யார்? நரச நாயக்கர்
ü துளுவ வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்? நரச நாயக்கரின் மூத்த மகன் வீர நரசிம்மர்
ü வீர நரசிம்மரைத் தொடர்ந்து அரியணை ஏறியவர் யார்? தம்பி கிருஷ்ணதேவராயர்.
ü துளுவ வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்? கிருஷ்ணதேவராயர்
ü கிருஷ்ணதேவராயர் எத்தனை ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தார்? 20 ஆண்டுகள் (1509-1529)
ü கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் விஜயநகரப் பேரரசிற்கு வருகைத் தந்த வெளிநாட்டுப் பயணிகள்? போர்த்துகல் நாட்டு வணிகர் டோமிங்கோபயஸ்/ இத்தாலி பயணி நூனிஸ்
ü டோமிங்கோபயஸ் கிருஷ்ணதேவராயரை எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்? முழு நிறைவான அரசர்
ü கிருஷ்ணதேவராயர், எந்த பாமினி சுல்தானை அவருடைய அமைச்சரால் பதவி பறிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்தப் போது விடுவித்து மீண்டும் அரியணையில் அமர வைத்தார்? பாமினி சுல்தான் முகமதுஷா
ü ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசரான யாரோடு கிருஷ்ணதேவராயர் போரை மேற்கொண்டார்? பிரதாபருத்திரன்
ü போர்ச்சுகீசியரான அல்புகர்க் தனது தூதரகங்களை யாருடைய அவைக்கு அனுப்பி வைத்தார்? கிருஷ்ணதேவராயர்
ü போர்த்துகீசியர் விஜயநகருக்கு இராணுவ உதவிகளைச் செய்து எந்த இடத்தில் கோட்டைகட்டிக்கொள்ளும் உரிமையைப் பெற்றனர்? பத்கல்
ü கிருஷ்ணதேவராயர் தனது வெற்றித் தூணை எங்கு நிறுவினார்? சிம்மாச்சலத்தில்
ü கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்தவர்கள்? அஷ்டதிக்கஜங்கள்
v அவர்களுள் மகத்தானவர் அல்லசானி பெத்தண்ணா ஆவார்.
v மற்றொரு குறிப்பிடத்தகுந்த ஆளுமை தெனாலி ராமகிருஷ்ணன் (தெனாலிராமன்)
ü ஆந்திரக் கவி பி்தாமகன் என்றழைக்கப்படுபவர் யார்? அல்லசானி பெத்தண்ணா
ü அல்லசானி பெத்தண்ணா எழுதிய நூல் எது? மனுசரி்தம்
ü தெனாலிராமன் எழுதிய நூல் எது? பாண்டுரங்கமகாத்தியம்
ü கிருஷ்ணதேவராயர் எழுதிய நூல்கள் எவை? ஆமுக்தமால்யதா (ஆண்டாளின் கதை) – தெலுங்கு உஷா பரிணயம், ஜாம்பவதி கல்யாணம் – சமஸ்கிருதம்
ü கிருஷ்ணதேவராயருக்குப் பின் அரியணை ஏறியவர் யார்? அவருடைய சகோதரர் அச்சுததேவராயர்
ü கிருஷ்ணதேவராயரின் மருமகன் யார்? ராமராயர்
ü அச்சுதராயருக்கு யாருடைய ஆதரவு இருந்தது? செல்லப்பா (சாளுவநாயக் என்றும் அறியப்படுபவர்)
ü ராக்சசதங்கடி(தலைக்கோட்டைப் போர்) என்றறியப்பட்ட போர் நடைப்பெற்ற ஆண்டு? 1565
ü தலைக்கோட்டைப் போரின் போது தோற்கடிக்கப்பட்டவர் யார்? ராமராயர் (பகர ஆளுநர்)
ü பாமினி சுல்தான்களை ஒருவரோடு ஒருவரை மோதச் செய்யும் திறமை பெற்றிருந்தவர் யார்? ராமராயர்
ü தலைக்கோட்டைப் போரின் போது விஜயநகரப் பேரரசின் அரசர் யார்? சதாசிவராயர்
ü ராமராயரின் சகோதரர் யார்? திருமலைதேவராயர்
ü சகோதரர் திருமலைதேவராயர்,விலை மதிக்கமுடியா செல்வங்களோடு சென்றடைந்த இடம் எது? சந்திரகிரி
ü தலைக்கோட்டைப் போருக்குப் பின் அரசர் சதாசிவராயர் மற்றும் அவருடைய வீரர்களும் எங்கு தப்பிச் சென்றனர்? பெனுகொண்டாவுக்கு
ü துளுவ வம்சத்தின் ஆட்சிக்காலம்? 1505-1570
ü நான்காவது அரசமரபான ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் யார்? திருமலைதேவராயர்
ü ஆரவீடு வம்சத்தினரால் உருவாக்கப்பட்ட புதிய தலைநகரம் எது? பெனுகொண்டா
ü 1601இல் அரசு விசுவாசிகள் பெரும்பேடு என்னும் ஊரைச் சேர்ந்த யச்சமநாயக்கர் தலைமையிலும் எதிர் தரப்பினர் வேலூர் நாயக் (வேலூர்) தலைமையிலும் உத்திரமேரூரில் கடுமையான போரில் ஈடுபட்டனர்.
ü இப்போரில் சுதந்திர அரசுகளாக மாறிவிட்ட தஞ்சாவூர், மதுரை, செஞ்சி நாயக்க அரசுகள் வேலூர் நாயக்கை ஆதரித்தனர்.
ü விஜயநகர அரசு இறுதியாக வீழ்ச்சியுற்ற ஆண்டு? 1646
ü சந்திரகிரி தலைநகராகக் கொண்ட விஜயநகரப் பேரரசின் கடைசி பேரரசர் - முதலாம் ஸ்ரீரங்கர்
ü விஜயநகரப் பேரரசின் கடைசி அரசர் - மூன்றாம் ஸ்ரீரங்கர்
ü கிருஷ்ணதேவராயர் அவையில் இருந்த அஷ்டதிக்கஜங்கள்:
1. அல்லசானி பெத்தண்ணா (ஆந்திரக் கவி பி்தாமகன்) - மனுசரி்தம்,ஹரிகதாசாரம்
2. நந்தி திம்மண்ணா - பாரி ஜா்த்ப கரணமு
3. துர்ஜாதி - காளத்தி மகாத்மியம்
4. பிங்காலி சூரனனா – பிரபாவதி பிரத்யும்
5. தெனாலிராமகிருஷ்ணர் - விகட கவி ,பாண்டுரங்க மகாத்தியம்
6. மதகிரி மல்லார்ணா - இராஜசேகர சரித்திரமு
7. ஹயலாராஜீ்பத்ரடூ - ராமபுத்யாமு
8. இராமராஜபூஷணர் - வசுசரித்திரம்

0 Comments