விவசாயிகளின் சத்தியாகிரகங்கள் - பாகம் 1 (சம்பரான் சத்தியாகிரகம்)

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

சம்பரான் இயக்கம் - 1917

ü  பீகாரில் உள்ள சம்பரானில்தீன் காதியா’ முறை பின்பற்றப்பட்டது.

ü  இந்த சுரண்டல் முறையில் இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தின் 3/20 பங்கு பகுதியில் அவுரி (இண்டிகோ) பயிரிட வேண்டும் என்று ஐரோப்பியப் பண்ணையாளர்கள் அவர்களைக் கட்டாயப்படுத்தினர்.

ü  பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் ஜெர்மானிய செயற்கை சாயங்களால், இண்டிகோ எனப்படும் நீலச்சாயம் சந்தையில் விற்கப்படுவது குறைந்தது. 

ü  சம்பரானில் இண்டிகோ பயிரிட்ட ஐரோப்பியப் பண்ணையாளர்கள் நீலச்சாயம் பயிரிடும் கடமையிலிருந்து விவசாயிகளை விடுவிக்கும் தேவையை உணர்ந்து அந்த நிலைமையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார்கள்.

ü  இந்தக் கடமையிலிருந்து விவசாயிகளை விடுவிக்கும்பொருட்டு சட்டத்துக்கு புறம்பான நிலுவைத்தொகைகளை வசூலித்ததோடு வாடகையையும் அதிகரித்தார்கள்.எதிர்ப்பு  வெடித்தது.

ü  இந்த வகையில் சிரமங்களைச் சந்தித்த சம்பரானைச் சேர்ந்த விவசாயியான ராஜ்குமார் சுக்லா, சம்பரானுக்கு வருகை புரியுமாறு காந்தியடிகளைக் கேட்டுக்கொண்டார்.

ü  சம்பரானில் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியைக் காந்தியடிகள் மேற்கொண்டார்.

ü  அவர் போராட்டத்தைத் துவங்குமுன், நிலைமை குறித்து விரிவாக ஆராய்ந்தார்.

ü  பீகாரின் சம்பரான் மாவட்டத்தில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகள் ஐரோப்பிய வர்த்தகர்களால் பெரிதும் ஏமாற்றப்பட்டனர். 

ü  ராஜேந்திர பிரசாத், மஜாருல் ஹக், ஆச்சார்ய கிருபாளினி, மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்களுடன் காந்தியடிகள் விரிவான விசாரணை மேற்கொண்டார்.

ü  உடனடியாக அந்த மாவட்டத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் காந்தியடிகளுக்கு உத்தரவிட்டனர்.

ü  ஆனால் வெளியேற மறுத்த காந்தியடிகள், இந்த உத்தரவு நியாயமற்றது என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உத்தரவை மீறுவதன் மூலம் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க போவதாகவும் கூறினார்.

ü  இந்தச் செய்தி காட்டுத்தீ போன்று பரவியதை அடுத்து ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தில் காந்தியடிகளுக்கு ஆதரவாகக் கூடினர். 

ü  உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்தது குறித்து காந்தியடிகள் மன்னிப்புக் கோரியதை அடுத்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

ü   ‘நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக’ காந்தியடிகள் தெரிவித்தார். 

ü  இந்தியாவின் முதலாவது குடியரசுத்தலைவராக பின்னாளில் பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத்தும் வழக்குரைஞராக தொழில் செய்த பிரஜ்கிஷோர் பிரசாத்தும் காந்தியடிகளுக்குத் துணையாக செயல்பட்டனர்.

ü  அதன்பிறகு துணைநிலை ஆளுநர் ஒரு குழுவை உருவாக்கினார்.

ü  காந்தியடிகள் அக்குழுவில் ஒரு உறுப்பினர் ஆனார்.

ü  ஏழை விவசாயிகளின் சிரமங்கள் குறித்து குழுவிடம் எடுத்துரைத்துப் புரியவைப்பதில் காந்தியடிகளுக்குச் சிரமம் ஏற்படவில்லை.

ü  இண்டிகோ பண்ணையாளர்கள் விவசாயிகள் மீது நடத்திய அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவரும்  வகையில் ‘தீன் காதியா’ முறையை ரத்து செய்ய அந்தக் குழு பரிந்துரைத்தது. 

ü  இறுதியில் மே 1918-ல், "சம்பரான் விவசாய சட்டம்" நிறைவேற்றப்பட்டது.

ü  அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டதில் ஐரோப்பிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கருநீலச்சாய விவசாயிகள் மீட்கப்பட்டனர். 

ü  ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்படியாக சம்பரானை விட்டே வெளியேறிவிட்டனர்.

Print Friendly and PDF

Post a Comment

1 Comments