மராத்தியப் பேரரசு - பாகம் 1

பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

மராத்தியர்கள்

ü  முகலாயர்களின் வீழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்கள் யார்? மராத்தியர்கள்

ü  மராத்தியர்கள் எப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்? தக்காணம் (ம) மகாராஷ்டிரா மலைப்பகுதிகளில்

ü  மராத்தியர்கள் நன்கு அறிந்திருந்த போர் முறை எது? கொரில்லா போர் முறை

v  இது ஒரு முறைசாரா போர் முறையாகும்.

ü  மராத்தியர் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது? கொங்கணம்

ü  மராத்தியர்களை தங்கள் குதிரை படைகளில் பணியமர்த்திய சுல்தான்கள் யார்? பிஜப்பூர் (ம) அகமதுநகர் சுல்தான்கள்

மராத்தியர்களின் தனித்தன்மைகள்

ü  பாமினி சுல்தான்களின் கீழ் செயல்பட்டமராத்தியர், சிவாஜி காலத்தில் எழுச்சிப் பெற்றனர்.

ü  சிவாஜி மறைவுக்குப் பிறகு தக்காண  சுல்தான்களின் கீழ் செயல்பட்டனர்.

ü  வலிமைமிகுந்த காலாட்படையும், ஆபத்தான ஆயுதங்களையும் கொண்டிருந்த முகலாய இராணுவத்துடன் நேரடியாக மோதுவதை மராத்தியர்கள் தவிர்த்தனர்.

ü  இரவு நேரங்களில் திடீரென மின்னல் வேகத்தில் தாக்குதல்களைத் திட்டமிடுவதிலும் நடத்துவதிலும் திறமை கொண்டிருந்தனர்.

ü  மேலதிகாரியின் உத்தரவுக்குக் காத்திருக்காமல் போர்ச்சூழலைக் கருத்தில் கொண்டு வழிமுறைகளை மாற்றிச் செயல்படுத்தும் திறனையும் அவர்கள்  வெளிப்படுத்தினார்கள்.

சிவாஜி (1627 – 1680)

ü  சிவாஜி எங்கு பிறந்தார்? பூனாவிலுள்ள ஜின்னார் என்ற இடத்திற்கு அருகேயுள்ள சிவனேரிக் கோட்டை

ü  சிவாஜி எந்த ஆண்டு பிறந்தார்? 1627

ü  சிவாஜியின் பெற்றோர் யார்? ஷாஜி போன்ஸ்லே ஜீஜாபாய்

ü  ஷாஜி போன்ஸ்லே இரண்டாவதாக யாரை மணம் புரிந்தார்? துக்காபாய்

ü  ஷாஜி போன்ஸ்லே யாரிடம் அபீசீனிய அமைச்சராகப் பணியாற்றினார்? அகமதுநகர் அஹம்மது ஷா

v  மேலும் முன்னாள் அபீசீனிய அடிமையான மாலிக் ஆம்பரிடம் பணியாற்றினார்.

v  பின்னர், பிஜப்பூர் சுல்தானிடம் பணியாற்றினார்.

ü  சிவாஜியும் அவரது தாயும் யாருடைய பராமரிப்பில் விடப்பட்டனர்? தாதாஜி கொண்டதேவ் என்பவரின்

ü  ஜாகீர் என்பது என்ன? இராணுவ மற்றும் நிர்வாக சேவைகளுக்கான அங்கீகாரமாக வழங்கப்பட்ட நிலம் ஜாகீர் ஆகும்.

ü  சிவாஜி தனது தந்தையின் ஜாகீரான பூனாவை எந்த ஆண்டில் பெற்றார்? 1637

ü  இராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கூறி, சிவாஜிக்கு அவற்றின்மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார்? தாய் ஜீஜாபாய்

ü  சிவாஜியிடம் தாக்கத்தை ஏற்படுத்திய மதத் துறவிகள் யார் யார்? ராம்தாஸ், துக்காராம் (சிவாஜியின் வாழ்வின் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தினர்)

ü  சிவாஜியின் ஆன்மீக குருவாக யாரை ஏற்று மரியாதை செலுத்தினார்? துறவி ராம்தாஸ்

ü  குதிரையேற்றம், போர்க்கலை , அரசு நிர்வாகம் ஆகியவற்றில் சிவாஜிக்குப் பயிற்சியளித்தவர் யார்? சிவாஜியின் ஆசிரியரும் குருவுமான தாதாஜி கொண்டதேவ்.

ü  புனேக்கு அருகேயிருந்த கோண்டுவானா கோட்டையை சிவாஜி எப்போது கைப்பற்றினார்? 1645

ü  சிவாஜி தோர்னா கோட்டையை பீஜப்பூர் சுல்தானிடமிருந்து எப்போது கைப்பற்றினார்? 1646

ü  சிவாஜி தோர்னாவில் இருந்து  எத்தனை மைல் தொலைவில் இருந்த ராய்கர் கோட்டையை கைப்பற்றி அதனை புனரமைத்தார்? ஐந்து மைல் தொலைவில் இருந்த

ü  சிவாஜியின் பாதுகாவலரான தாதாஜி கொண்டதேவ் எந்த ஆண்டு மறைந்தார்? 1647

ü  சிவாஜியின் தந்தையை சிறுமைப்படுத்திச் சிறையில் அடைத்த சுல்தான் யார்? பிஜப்பூர் சுல்தான்

ü  சிவாஜி தக்காணத்தின் முகலாய அரசப்பிரதிநிதியாக இருந்த யாருடன் பேச்சுவார்த்தை நடத்தி முகலாய சேவையில் சேர விருப்பம் தெரிவித்தார்? இளவரசர் மூராத்

ü  பீஜப்பூர் சுல்தான் ஷாஜியை விடுதலை செய்த ஆண்டு? 1649

ü  இராணுவச் செயல்பாடுகளில்  ஈடுபடுவதிலிருந்து சிவாஜி விலகியிருந்த காலம் எது? 1649 முதல் 1655 வரை

v  இந்தக் காலகட்டத்தில் அவர் தனது அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தினார்.

ü  சிவாஜி, தனது இராணுவச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கிய ஆண்டு? 1656

ü  1656-ல் இராணுவச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கிய சிவாஜி முதலில் கைப்பற்றியப் பகுதி எது? சதாரா மாவட்டத்திலுள்ள ஜாவ்லி

ü  சிவாஜி ஜாவ்லி-யை யாரிடம் இருந்து கைப்பற்றினார்? மராத்தியத் தலைவர் சந்திரராவ்மோர் என்பாரிடமிருந்து

ü  ஜாவ்லி என்ற இடத்திலிருந்து மேற்கே இரண்டு மைல் தொலைவில் கட்டப்பட்ட புதிய கோட்டை எது? பிரதாப்கர்

v  பிரதாப்கர் கோட்டை (ம) பவானிக் கோவிலைக் கட்டியவர் – சிவாஜி

ü  1656 நவம்பர் மாதம் பீஜப்பூரின் முகமது அடில்ஷா மரணமடைந்ததை அடுத்துப் பொறுப்பேற்றவர் யார்? இரண்டாம் அடில்ஷா (18-வயதில்)

ü  பீடார், கல்யாணி, பரிந்தர் ஆகியவற்றை ஔரங்கசீப் கைப்பற்றிய ஆண்டு? 1657

v  அந்த நேரத்தில் ஷாஜகான் நோய்வாய்ப்பட்டார்.

v  ஔரங்கசீப் ஆட்சியைக் கைப்பற்ற தில்லி வந்தார்.

v  இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சிவாஜி வடக்கு கொங்கணம் மீது போர் தொடுத்து கல்யாண், பிவாண்டி, மாகுலி கோட்டைகளைக் கைப்பற்றினார்.

ü  பீஜப்பூர் சுல்தான் சிவாஜி மீது தாக்குதல் நடத்த யாரை அனுப்பினார்? படைத்தளபதி அப்சல்கான்

ü  மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் எலியைசங்கிலியில் கட்டி இழுத்துக்கொண்டு வருவதாக  சூளுரைத்தவர் யார்? அப்சல்கான்

ü  அப்சல்கான் (ம) சிவாஜியின் சந்திப்பு எங்கு நடைப்பெற்றது? பிரதாப்கர்

ü  சிவாஜி எந்த ஆண்டு பீஜப்பூரின் குறிப்பிடத்தகுந்த தளபதியான அப்சல்கானைக் கொன்றார்? 1659

v  தெற்கு கொங்கணம் மற்றும் கோல்ஹாபூர் மாவட்டங்களைத் தாக்கிய மராத்தியப் படைகள் பன்ஹலா கோட்டையை கைப்பற்றின.

ü  ஔரங்கசீப் மாமன்னராக அரியணை ஏறிய ஆண்டு? 1658 ஜூலை

ü  சிவாஜியை அடக்குவதை முக்கிய  நோக்கமாகக் கொண்டு தக்காணத்தின் ஆளுநராக யாரை நியமித்தார்? செயிஷ்டகான்

ü  தக்காணத்தின் ஆளுநராக செயிஷ்டகான் நியமிக்கப்பட்ட ஆண்டு? 1660

v  பூனாவுக்கு 400 படை வீரர்களுடன் திருமணக் குழுவினர் போல் சென்ற சிவாஜி செயிஷ்டகானின் இல்லம் மீது தாக்குதல் நடத்தினார்.

v  செயிஷ்டகான் உயிர் தப்பினார்; கட்டை விரல் துண்டிக்கப்பட்டது.

v  1663-இல் ஔரங்கசீப்பின் மாமனாரும் முகலாயத் தளபதியுமான செயிஷ்டகானை சிவாஜி காயப்படுத்தித் துரத்தியடித்தார்.

ü  ஔரங்கசீப்  செயிஷ்டகானை தக்காணத்திலிருந்து திரும்ப அழைத்துக் கொண்ட ஆண்டு? 1663

ü  அரபிக்கடல் பகுதியில் முகாலாயரின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய சூரத் நகரைக் குறி வைத்து சிவாஜி தாக்குதல் நடத்திய ஆண்டு? 1664

ü  சிவாஜியை வீழ்த்துவதற்காகவும், பீஜப்பூரை இணைப்பதற்காகவும் யாருடைய தலைமையில் ஒரு இராணுவத்தை ஔரங்கசீப் அனுப்பினார்? ரஜபுத்திரத் தளபதி ராஜா ஜெய்சிங்

v  அப்பொழுது இளவரசர் மூவாசம் (பின்னர் முதலாம் பகதூர் ஷா என அழைக்கப்பட்டவர்,) தக்காணத்தின் ஆளுநராக பதவி வகித்தார்.

ü  புரந்தர் உடன்படிக்கை எப்போது கையெழுத்திடப்பட்டது? 1665 ஜூன் 11ஆம் தேதி

ü  புரந்தர் உடன்படிக்கை யார் யாருக்கிடையே கையெழுத்திடப்பட்டது? சிவாஜி / ராஜா ஜெய்சிங்

v  இவ்வுடன்படிக்கையின்படி,சிவாஜிக்கு அவர் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது.

v  மன்சப்தாராகச் செயல்பட்டு பீஜப்பூரைக் கைப்பற்ற முகலாயருக்கு உதவ ஒப்புக்கொண்டார்.

ü  சிவாஜியும், அவரது மகன் சாம்பாஜியும் ஔரங்கசீப்பை சந்திக்க ஆக்ரா சென்றடைந்த ஆண்டு? மே 1666

ü  எந்த ஆண்டு முதல் சிவாஜி தீவிர போர்க்கொள்கையைக் கடைபிடிக்கலானார்? 1666

ü  ஔரங்கசீப் சிவாஜியை எவ்வாறு அழைத்தார்? மலைஎலி (ம) தக்காண புற்றுநோய்

ü  சிவாஜியுடன் நட்பு பாராட்டியவர் யார்? ராஜா ஜஸ்வந்த் சிங்

ü  சிவாஜியின் மகனான சாம்பாஜிக்கு வழங்கப்பட்ட தகுதிநிலை என்ன? மன்சப் 5000

ü  சிவாஜி இரண்டாவது முறையாகச் சூரத் நகரைத் தாக்கிய ஆண்டு? 1670

ü  எந்த ஆண்டு சூரத்திலிருந்து சௌத் எனப்படும் வருமானத்தை வருடாந்திரக் கப்பமாக மராத்தியர் பெற்றனர்? 1672

v  சௌத் - மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு (1//4)

[இது அந்நியாய வரி, கொள்ளை வரி என்றெல்லாம் அழைக்கப்பட்ட வரி]

v  சர்தேஷ்முகிபத்தில் ஒரு பங்கு (1/10)

ü  சிவாஜி கைப்பற்றிய முகலாயப் பகுதிகள் மீது விதிக்கப்பட்ட வரி?  சௌத்

ü  பாதுகாப்புக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட வரி எது? சௌத்

ü  அரசருக்கான கட்டணமாக வசூலிக்கப்பட்ட வரி எது? சர்தேஷ்முகி

v  தேசாய்கள், தேஷ்முக்குகளின்  பிரதம தலைமையாக சர்தேஷ்முக் திகழ்ந்தார்.

v  மரபுவழியாகத் தனது நாட்டின் சர்தேஷ்முக் ஆக சிவாஜி விளங்கினார்.

ü  சிவாஜி சத்ரபதி என்னும் பட்டத்துடன் மணிமுடி சூடிக்கொண்ட ஆண்டு? 1674 ஜூன் 6

v  சத்ர குடை; பதி - தலைவன் (அ) பிரபு எனும் சமஸ்கிருதச்சொல் அரசன் (அ) பேரரசன் என்பதற்கு இணையானது.

ü  சிவாசியின் முடிசூட்டுவிழா எந்த கோட்டையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது? ரெய்கார்

ü  தெற்குப் பகுதியில் சிவாஜி தனது வெற்றியை எந்த ஆண்டுத் துவக்கினார்? 1676

v  கோல்கொண்டா சுல்தானுடன் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

v  செஞ்சி, வேலூர் ஆகியவற்றைக் கைப்பற்றினார்.

ü  சிவாஜி தஞ்சையை நிர்வகிக்குமாறு யாரை பணித்தார்? வெங்கோஜி (அ) இகோஜி

ü  சிவாஜி எப்பகுதியைச் சேர்ந்த நாயக்கர்களுக்குப் பெரும் தொகையைக் கப்பமாக தர உறுதியளித்தார்? மதுரை

ü  சிவாஜி எந்த ஆண்டு மரணமடைந்தார்? தனது 53வது வயதில் 1680

ü  சிவாஜியின் மூத்த மகன் யார்? சாம்பாஜி

ü  சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம்  செலுத்திய அவருடைய குரு யார்? கவிகலாஷ்

v  சாம்பாஜியின் குடும்ப அர்ச்சகர்

v  வாரணாசியில் சாம்பாஜியின் பாதுகாவலராக இருந்தார்.

v  மேலும் இவர் புகழ்பெற்ற அறிஞரும் கவிஞரும் ஆவார்.

ü  ஔரங்கசீப்பால் சிறைப்பிடிக்கப்பட்ட சாம்பாஜி எங்கு அனுப்பப்பட்டார்? பன்ஹாலாக் கோட்டை

ü  சாம்பாஜி யாருக்கு பாதுகாப்புக் கொடுத்ததற்காக ஔரங்கசீப்பால் கொல்லப்பட்டார்? ஔரங்கசீப்பின் மகனான இரண்டாம் அக்பர்

ü  ஔரங்கசீப்பால் சாம்பாஜி எந்த ஆண்டு கொல்லப்பட்டார்? 1689 இல்

ü  சிவாஜியின் இளைய மகன் யார்? ராஜாராம்

ü  சாம்பாஜியின் மறைவுக்குப் பின் ராஜாராம் எங்கிருந்து சண்டையைத் தொடங்கினார்? செஞ்சிக் கோட்டையிலிருந்து

v  1700-ம் ஆண்டு ராஜாராமின் மறைவிற்குப் பின் மனைவியான தாராபாய் தனது சிறுவயது மகனான இரண்டாம் சிவாஜியை மன்னராக்கி தானே நிர்வாகத்தை மேற்கொண்டார்.

v  கோல்ஹாபூரைத் தலைநகராகக் கொண்டு தாராபாய் ஒரு மாற்று அரசாங்கத்தை நடத்தினார்.

v  ராஜாராமின் இரண்டாவது மனைவி ராஜாபாய், அவரது மகன் இரண்டாம் சாம்பாஜி, தாராபாய் (ம) அவரது மகன் ஆகியோரை 1714ஆம் ஆண்டு சிறைப்பிடித்தனர்.

v  இரண்டாம் சாம்பாஜி கோல்ஹாபூரில் அரியணை ஏறினார்.

ü  சிவாஜியின் பேரன் யார்? சாம்பாஜியின் மகனான ஷாகு

ü  ஷாகு என்பதன் பொருள் என்ன? நேர்மையானவர்

v  சிவாஜியிடமிருந்து இவரின் குணநலன்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இப்பெயர் ஔரங்கசீப்பால் வைக்கப்பட்டது

ü  சிறையில் இருந்த ஷாகுவை விடுதலை செய்தவர் யார்? முதலாம் பகதூர்ஷா

ü  ஷாகு மராத்திய பேரரசராகப் பொறுப்பேற்ற ஆண்டு? 1708

ü  ஷாகு 1749-ல் மறைந்த பிறகு அரியணை ஏறியவர்? ராம ராஜா

ü  ஷாகுவின் ஆட்சிகாலம்? 1708 - 1749

Print Friendly and PDF

Post a Comment

3 Comments