நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 600 ஆட்டங்களை விளையாடிய முதல் வீரர் என்கிற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பொலார்ட் நிகழ்த்தியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் தொடரின் மகளிர் பிரிவில் இந்தியா மகளிர் ஏ அணி வெண்கலம் வென்றது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் அணி பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.
செஸ் ஒலிம்பியாட் இறுதிச்சுற்றில் ஓபன் பிரிவில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இந்தியா பி அணி வெண்கலம் வென்றது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், அர்மேனியா வெள்ளிப் பதக்கமும், இந்தியா பி அணி வெண்கலப் பதக்கமும் வென்றது.
மகளிர் பிரிவில் உக்ரைன் தங்கப் பதக்கமும், ஜார்ஜியா வெள்ளிப் பதக்கமும், இந்தியா ஏ அணி வெண்கலப் பதக்கமும் வென்றன.

0 Comments