இந்தியா
நாட்டின் 14-வது துணைக் குடியரசுத் தலைவராக ஜகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம்
சிராவயலில் காந்தி-ஜீவா நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுகள்
2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் "தகைசால் விருது"-க்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு
உலக தடகள சாம்பியன்ஷிப் மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செல்வபிரபு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் ஆர்காடி வோர்க்கோவிச் தேர்வாகியுள்ளார்.
ருமேனியாவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், சென்னையை சேர்ந்த 16 வயது பிரணவ் வெங்கடேஷ் இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
இந்தியாவிலேயே அதிக கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் நடை போட்டியில் சந்தீப் குமார் வெண்கலம் வென்யுள்ளார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் 60 மீட்டர் பிரிவில் இந்தியாவின் அன்னு ராணி வெண்கலம் வென்றுள்ளார்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் எல்டோஸ் பால் தங்கப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரரான அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
நியமனங்கள்
கா்நாடகம் மற்றும் கோவா மண்டலத்தின் புதிய முதன்மை தலைமை ஆணையராக ஆா்.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்தியாவின் உயர்அறிவியல் தொழில் ஆராய்ச்சி ஆய்வு நிறுவனமான CSIR-இன் முதல் பெண் தலைமை இயக்குநராக தமிழ்நாட்டைச் சேந்த கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-02 மற்றும் சிறிய செயற்கைக்கோளான ஆசாதி-சாட் ஆகியவை SSLV-D1 ராக்கெட் மூலம் ஆந்திரப்பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

0 Comments