விளையாட்டு
காமன்வெல்த் தொடரின் மகளிர் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் லால்ரினுங்கா ஜெரிமி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
காமன்வெல்த் தொடரின் மகளிர் பளுதூக்குதல் போட்டியின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விந்தியாராணி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் சங்கேத் சர்க்கர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 61 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் பி.குருராஜ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இராணுவம்:
இந்திய ராணுவம் மற்றும் ஓமான் ராணுவம் இடையேயான 'AL NAJAH-IV என்ற இந்தியா ஓமான் கூட்டு ராணுவப் பயிற்சியின் நான்காவது பதிப்பு ஆகஸ்ட் 1 முதல் 13 ஆம் தேதி வரை ராஜஸ்தானில் நடைபெற உள்ளது.
தரவரிசை:
ஆசியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சாவித்திரி ஜிண்டால் முதலிடம் பிடித்துள்ளார்.
வெளியிட்ட அமைப்பு: Bloomberg Billionaires Index

0 Comments