தினசரி நடப்பு நிகழ்வுகள் 30/07/2022

30th July 2022 TNPSC Daily Important Current Affairs GK Notes in Tamil

இந்தியா : 
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் சர்வதேச புல்லியன் எக்ஸ்சேஞ்சை குஜராத்தில் உள்ள GIFT சிட்டியில் தொடங்கி வைத்தார்.

முதலாவது அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்கள் கூட்டமானது தில்லியில் நடைபெற்றது.

"ஆபரேஷன் விஜய்"யில் பங்கேற்ற வீரர்களின் உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கார்கில் செக்டாரில் உள்ள டிராஸில் உள்ள 5140வது முனைக்கு , "துப்பாக்கி மலை" என்று பெயரிடப்பட்டுள்ளது.

நியமனங்கள்:
இந்திய கிரிக்கெட் அணியின் மனநலப் பயிற்சியாளராக பேடி உப்டன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்திற்கான புதிய இந்திய ஆணையராக பிரனய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்:
ஜூலை 30: மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம்

கருப்பொருள்: “Use and abuse of technology”



Print Friendly and PDF

Post a Comment

0 Comments