சென்னையின் 2 வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது.
கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
போக்குவரத்து விதிமீறல் குறித்து மாணவர்கள் கண்காணிக்கும் வகையில் யங் இந்தியன் (சென்னை) அமைப் புடன் சென்னை காவல் துறை இணைந்து முன்னெடுக்கும் ‘சூப்பர் குட்டி போலீஸ்' திட்டத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
விளையாட்டு
பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் மகளிருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் ஹர்ஜிந்தர் கௌர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
நடப்பு காமன்வெல்த் தொடரில், ஆடவருக்கான 96 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல், சத்யன் ஞானசேகரன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மித் தேசாய், சரத்கமல், சத்யன் ஞானசேகரன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜி சத்ரியன் மற்றும் ஹர்மீத் தேசாய் இணை வெற்றி பெற்றுள்ளது.
பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பவினா படேல் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த்தில் லான் பவுல்ஸ் விளையாட்டில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய மகளிர் அணி.
இந்தியா இந்த விளையாட்டு பிரிவில் வெல்லும் முதல் தங்கம் இதுவாகும்.
ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 Comments