தினசரி நடப்பு நிகழ்வுகள் 29/07/2022

29th July 2022 TNPSC Daily Current Affairs for all competitive exams

தமிழகம்
தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விளையாட்டு:
44வது செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி மேற்கோள் காட்டிய திருக்குறள்

‘இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு’

4 முறை ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜெர்மனியைச் சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல் நடப்பு 2022 சீசன் நிறைவடைந்ததும் ஃபார்முலா 1-இல் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

2010, 2011, 2012 மற்றும் 2013 என தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

தரவரிசை:
தமிழக ஏற்றுமதி வர்த்தகத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள மாவட்டங்கள் :

1.காஞ்சிபுரம் | 2.சென்னை | 3.திருப்பூர்

நாட்டின் ஒட்டுமொத்த பொருட்கள் ஏற்றுமதி தரவரிசை பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்கள்:

1.குஜராத் | 2.மஹாராஷ்டிரா | 3.தமிழகம்

முக்கிய தினங்கள்:
ஜூலை 29 : சர்வதேச புலிகள் தினம் 
Print Friendly and PDF

Post a Comment

0 Comments