தமிழ்நாடு
அரசு பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
திட்டத்தின் பெயர் : முதலமைச்சரின் காலை உணவு திட்டம்.
தரவரிசை
இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் HCL நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.
மொபைல் போன் உற்பத்தியில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சூரிய மின்சக்தி விநியோகத்தில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
விளையாட்டு
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் கோலாகலமாக இன்று தொடக்கம். பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.
உலகளவில் 72 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியானது இங்கிலாந்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் சார்பில் தேசியக் கொடியை ஏந்திச் சென்றவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
கடைசி காமன்வெல்த் விளையாட்டு போட்டியானது ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடைபெற்றது.
2025ம் ஆண்டிற்கான மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்தவுள்ளது.
2022ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விருதுகள்:
மத்திய அரசின் பத்ம விருதுகள் உட்பட அனைத்து விருதுகளுக்கும் பரிந்துரைகள் வழங்க awards.gov.in என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசால் வழங்கப்படும் 2021-ம் ஆண்டுக்கான புத்தொழில் சூழமைவுக்கான லீடர் விருதானது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்
முக்கிய தினங்கள்:
ஜூலை 27 : மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை துவக்க தினம் (1939ம் ஆண்டு தொடங்கப்பட்டது)

0 Comments