ஆகஸ்ட் 2021 விளையாட்டு நிகழ்வுகள் - டோக்கியோ ஒலிம்பிக் நிகழ்வுகள்

டோக்கியோ நிகழ்வுகள்

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC August 2021 Tokyo Olympic related current affairs in tamil


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நான்கு விளையாட்டுப் போட்டிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டுகள் : Karate | Skateboarding | Sport climbing | Surfing

திரும்ப கொண்டு வரப்பட்ட விளையாட்டுகள் : Baseball | Softball

ஒலிம்பிக் வரலாற்றிலேயே டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் முறையாக ஒலிம்பிக் தீபத்திற்கான எரிபொருளாக ஹைட்ரஜனும் பயன்படுத்தப்படுகிறது.

இதற்குமுன் ஒலிம்பிக் ஜோதி தொடர்ந்து எரிய புரோபேன், மக்னீசியம் வெடிமருந்து ஆகியவை பயன்படுத்தப்பட்டது.

இந்த ஒலிம்பிக் தீபத்துக்கான கலனை கனடா நாட்டைச் சேர்ந்த ஒகி சாடோ, மலர் ஒன்று மொட்டாக இருந்து அவிழ்வது போல் வடிவமைத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் துவக்க விழாவின் கருப்பொருள் : United by Emotion

டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழாவின் கருப்பொருள் : Worlds we Share

டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் தொடக்க மற்றும் நிறைவு விழாவின் நிலையான கருப்பொருள் : Moving Forward.

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கின பாசோ தனது முதல் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது.

Triple Jump போட்டியில் கலந்து கொண்ட Hugues Fabrice Zango வெண்கலம் வென்றார்.

நடப்பு ஒலிம்பிக்கில் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிருக்கான கராத்தே போட்டியின் KATA பிரிவு இறுதி போட்டியில் முதல் முறையாக ஸ்பெயின் வீராங்கனையான Sandra Sanchez தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

அதேபோன்று நடப்பு ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட செங்குத்தான சுவரில் ஏறும் Sport Climbing விளையாட்டிலும் ஸ்பெயின் வீரர் Alberto Gines Lopez முதல் முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சாதனையை நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த லாரல் ஹப்பார்ட் படைத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் மகளிர் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெனிசுலாவைச் சேர்ந்த வீராங்கனையான Yulimar Rojas, 15 புள்ளி 67 மீட்டர் தூரம் தாண்டி உலக சாதனை படைத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஸ்கேட்போர்டிங் மகளிர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த இளம் வீராங்கனையான மோமிஜி நிஷியா தங்கம் வென்றார்.

13 வயதில் தங்கம் வென்ற சாம்பியன் என்ற வரலாற்று சாதனைப் படைத்தார்.

ஸ்கேட்போர்டிங் ஆடவர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த யூடோ ஓரிகோம் இவ்விளையாட்டில் முதல் தங்கம் வென்ற நபர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம் | சீனா இரண்டாமிடம் | ஜப்பான் மூன்றாமிடம்.

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments