டோக்கியோ ஒலிம்பிக் - இந்தியா
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 228 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்க இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு பாதுகாப்பு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளராக ஓய்வுபெற்ற IPS அதிகாரி பி.கே.சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கான ஆடவருக்கான ஆர்டிஸ்டிக் பிரிவில் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த தீபக் காப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பெருமையைப் பெற்றுள்ள முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான நடுவர் குழுவிற்கு இந்திய துப்பாக்கி சூடு கூட்டமைவின் துணைச் செயலாளர் பவன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவியை பெற்றுள்ள முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் மகிழ்ச்சி பாடல் (Cheer Song): "Cheer4India: Hindustani Way" | உருவாக்கியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான் & அனன்யா பிர்லா
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் தீம் பாடல் : ‘Lakshya Tera Samne Hai' | இசையமைத்து பாடியவர் : மோஹித் சௌகான்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் இந்திய தேசிய கொடியை மேரி கோம், மன்பிரீத் சிங் ஏந்தி சென்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக் இறுதி நிகழ்வில் தேசிய கொடியை ஏந்தி சென்றவர் பஜ்ரங் புனியா
ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி வீராங்கனை வந்தனா கட்டாரியா ஹாட்ரிக் கோல்கள் அடித்துப் புதிய சாதனை படைத்தார்.
ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பி.வி.சிந்து சாதனைப் படைத்துள்ளார்.
2016 : வெள்ளி, ரியோ டி ஜெனிரோ (சீனா) | 2021 : வெண்கலம், டோக்கியோ (ஜப்பான்).
ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்று இந்திய ஆடவர் ஹாக்கி அணியானது ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
ஒலிம்பிக் தடகள வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவிற்காக ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் (வெள்ளி) வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீரர் - மீரா பாய் சானு (49 கிலோ).
மகளிர் கோல்ஃப் தரவரிசைப் பட்டியலில் 200ஆம் இடத்திலுள்ள அதிதி அசோக், ஒலிம்பிக் கோல்ஃப் இறுதிப் போட்டியில் நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் விபரம் பின்வருமாறு:
1) பி.வி.சிந்து (பேட்மிண்டன்) - வெண்கலம்
2) மீரா பாய் சானு (பளு தூக்குதல்) - வெள்ளி
3) ரவிக்குமார் தாஹியா (மல்யுத்தம்) - வெள்ளி
4) பஜ்ரங் புனியா (மல்யுத்தம்) - வெண்கலம்.
5) லவ்லினா போர்கோஹெயின் (குத்து சண்டை) - வெண்கலம்
6) நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) – தங்கம்
7) இந்திய ஆடவர் ஹாக்கி அணி - வெண்கலம்.
டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா 48வது இடத்தை பிடித்துள்ளது. ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை (1 தங்கம்; 2 வெள்ளி; 4 வெண்கலம்) வெல்வது இந்தியாவுக்கு இதுவே முதல்முறை.



0 Comments