ஆகஸ்ட் 2021 நடப்பு நிகழ்வுகள் – தமிழக நிகழ்வுகள்

தமிழக நிகழ்வுகள்

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC August 2021 Tamilnadu Current Affairs in Tamil

கிரெடாய் ரியல் எஸ்டேட் புதிய இணையதளங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இந்தியாவின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கான அமைப்பின் ஓர் அங்கமான இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டுக் கூட்டமைப்பு (கிரெடாய்), சார்பில் 2 இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே முதல் முறையாக வாட்ஸ் அப் செயலியோடு நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வகை இணையதளம் ஆகும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பினைப் போன்று, தொழிற்கல்வி படிப்புகளிலும் 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தொழிற்கல்வி படிப்புகளில் 7.5%  இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது.

மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான ஆணையம் கடந்த மார்ச் 2020ல் அமைக்கப்பட்டது..

இலங்கை தமிழகளுக்கு குடியுரிமை வழங்க தமிழக அரசின் சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் தலைமையில் ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

முப்படைகளிலும் பயன்படுத்தும் வகையிலான புதிய ரக துப்பாக்கியை திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் (OFT) தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளனர். திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் புதிய ரக துப்பாக்கி டிரிகா அறிமுகம்: சப்தம் குறைவு, இலக்கு தூரம் அதிகம்

இந்த புதிய ரக டிரிகா துப்பாக்கி 3.1 கிலோ எடை கொண்டது. 7.62X39 மில்லி மீட்டர் சிறிய ரக துப்பாக்கியாகும்.

புதிய ரக துப்பாக்கியை தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் "அன்னை தமிழில் அர்ச்சனை" திட்டத்தை சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தார்.

தொடங்கப்பட்ட தினம் : 5/08/2021.

தமிழகத்தில் முதல் முறையாகஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்எனும் திட்டம் சென்னையில் அன்று தொடங்கப்பட்டது.

தொடங்கப்பட்ட தினம் : 14/08/2021.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியவர்  : கலைஞர் கருணாநிதி | ஆண்டு : 02/10/1970.

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு பெண் ஓதுவாராக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுஹாஞ்சனா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் முதல் பெண் ஓதுவார் என்ற பெருமையை கடந்த 2006ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியின் போது திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோயிலில் நியமிக்கப்பட்ட அங்கயற்கண்ணி பெற்றுள்ளார்.

ஓதுதல் பொருள் : வாசித்தல் (அ) படித்தல் | தேவாரம், திருவாசகம், திருப்புகழ்.

நடப்பு ஆண்டு முதல் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த தினமான ஆடி திருவாதிரை விழாவினை சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலம் : 1014 முதல் 1044 வரை

கட்டிய கோவில் : கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம்.

பட்டப்பெயர்கள் : முடி கொண்ட சோழன், பண்டித சோழன், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான்.

நாட்டிலேயே முதியவர்கள் அதிகமாக வாழும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் முதலாக புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் உத்தரவை கர்நாடக மாநிலம் பிறப்பித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையை வரையறுக்கும் குழுவின் தலைவராக முன்னாள் இஸ்ரோ தலைவரான கே.கஸ்தூரி ரங்கன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே, கற்போம், எழுதுவோம் இயக்கம் (Padhna Likhna Abhiyan) திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

தமிழகத்தில் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவை கற்றுத்தரும் நோக்கில், தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் கற்போம் எழுதுவோம் என்ற புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் 2020-21-ம் ஆண்டு தொடங்கப்பட்டது..

இந்தியாவிலேயே முதன்முறையாக, நோயாளிகளுக்கு, வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவையான மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் வழங்க,  'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது.

இத்திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சாமனப்பள்ளி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் மரக் கைப்பிடியுடன் இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் கீழடி அடுத்துள்ள அகரம் அகழாய்வு தளத்தில் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய அளவில் கட்டமைப்பு வசதிகளில் முதலிடம் பெற்ற கோவை ரெயில் நிலையத்துக்கு IGBC யின் பிளாட்டினம் விருது வழங்கப்பட்டுள்ளது.

'1’ அந்தஸ்து பெற்ற இந்த ரயில் நிலையம் ஐ.எஸ்.ஓ., தர மேலாண்மை சான்றிதழ், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் ஆகிய மூன்றையும் ஏற்கனவே பெற்றுள்ளது.

தெற்கு ரெயில்வேயில் முதல் முறையாக, பார்வையற்றோருக்கு பிரெய்லி போர்டு நிறுவப்பட்டது.

இந்தியாவில் பிளாட்டினம் சான்றிதழ் பெற்ற 6-வது ரெயில் நிலையமாகவும், தெற்கு ரெயில்வேயில் முதல் ரெயில் நிலையம் என்ற பெருமையையும் கோவை ரெயில் நிலையம் பெற்றுள்ளது.

கோவை தவிர, செகந்திராபாத், புதுடெல்லி, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம், ஆசன்சோல் ஆகிய 5 ரயில் நிலையங்களுக்கு இதுவரை இந்தச் சான்று கிடைத்துள்ளது

இந்தியாவில் பிளாட்டினம் சான்றிதழ் பெற்ற முதலாவது ரெயில் நிலையம் : செகந்திராபாத் ரயில் நிலையம்.

IGBC : Indian Green Building Council

தமிழகத்தின் சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மாநகராட்சி : தஞ்சாவூர்

சிறந்த நகராட்சி : உதகை | திருச்சங்கோடு | சின்னமானுர்

சிறந்த பேரூராட்சி : கல்லக்குடி (திருச்சி) | மேல்பாட்டம்பாக்கம் (கடலூர்) | கோட்டையூர் (சிவகங்கை)

தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த 3-வது மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.

முதல் மாநிலம் : கர்நாடகா | இரண்டாவது மாநிலம் : ஆந்திரப்பிரதேசம்.

தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் M.R.K பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

சங்க இலக்கியங்களில் வேளாண்மை என்ற சொல், உதவி என்ற பொருளில் கையாளப்படுகிறது.

நிகர சாகுபடி பரப்பை 60 சதவிகிதத்தில் இருந்து 75 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்

தென்னை, கரும்பு, பருத்தி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம் பெற வழி வகை செய்யப்படும்

ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்

சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும்

தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் “மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம்” அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் மஞ்சள் உற்பத்தியில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது.

கோவை வேளாண் பல்கலைக் கழக வளாகத்தில் நம்மாழ்வார் இயற்கை ஆராய்ச்சி விவசாய மையம் அமைக்கப்படும்.

தெரியுமா?

இந்தியாவிலேயே முதல் முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை தாக்கல் செய்த மாநிலம் எது? கர்நாடகா.

உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் "தமிழ்நாடு ஊடக மன்றம்" ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 6 உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அவை :

1) தாம்பரம், 2) காஞ்சிபுரம், 3) கடலூர், 4) கரூர், 5) கும்பகோணம், 6) சிவகாசி

இதன் மூலம் தமிழகத்தில்  மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 24 அன்று சட்டப்பேரவையில் நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்த திட்டங்கள் (ம) அதன் மதிப்பீடு விவரங்கள் பின்வருமாறு

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்: 1000 கோடி

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்: 100 கோடி

பாதாள சாக்கடை திட்டம்

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.17,000த்தில் இருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார்.

மேலும், சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் 8 ஆயிரம் ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கும் ரூ. 3 லட்சம் வரையிலான கடன்களுக்கான வட்டி வீதத்தை 12%-லிருந்து 7%ஆகக் குறைக்கப்படும் என்று பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள நிதித்துறை கட்டிடத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படுவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.

நரிக்குறவர் இன மக்கள் பேசும் வாக்ரிபோலி மொழி உள்பட பத்து மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்ப்புகள் வெளியிடப்படவுள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம் உலகின் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படவுள்ளதாகவும் முதல் கட்டமாக தாய்லாந்தின் தாய், சீன மொழி, ஜப்பானிய, கொரிய, பர்மிய, வியட்நாம், மலாய், சிங்களம், கம்போடியம், இந்தோனேஷியம், மங்கோலியம் உள்பட 18 மொழிகளில் மொழிப்பெயர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் தலை சிறந்த நூல்களை தமிழ் மொழியில் கொண்டு வருவதற்காக ரூ 2 கோடியில் முத்தமிழறிஞர் மொழிப்பெயர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ 25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்ககப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

தமிழ் மொழிக்கு அளப்பரிய பங்காற்றிய எழுத்தாளர்கள் மற்றும் தமிழறிஞர்களை போற்றும் வகையிலும், அவர்களை இளையத் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ40 லட்சம் மதிப்பீட்டில் செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்ட சபையை நடத்த மாற்றுத் தலைவர்களாக அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், டி.ஆர்.பி.ராஜா ஆகிய 4 பேர் செயல்படுவார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் மின் ஆளுகைத் துறைக்குட்பட்ட டிஜிட்டல் மற்றும் நிர்வாக நடைமுறை எளிமையாக்கல் நடவடிக்கைகளுக்கான ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

“தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம்" 2007 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர், கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

1991 - கலைமாமணி விருது | 2003 - தேசிய விருது

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments