மாநில நிகழ்வுகள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
"Mission Niryatak Bano" என்ற பிரச்சாரத்தை ராஜஸ்தான் மாநிலம் முன்னெடுத்துள்ளது.
நோக்கம்: ஆர்வமுள்ள உள்நாட்டு வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காகவும்.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கணவனை இழந்த பெண்களுக்கு உதவுவதற்காக "Mission Vatsalya" என்ற திட்டத்தை மகாராஷ்டிரா அரசு தொடங்கியுள்ளது.
சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு உத்திரப்பிரதேச அரசு செயல்படுத்தி வரும் "Mission Sakthi" என்ற திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லக்னோவில் தொடங்கி வைத்தார்.
சுதந்திரப் போராட்டத்தின் போது நடைபெற்ற காகோரி இரயில் சதி நிகழ்வின் பெயரை “காகோரி ரயில் நடவடிக்கை” என உத்திரப் பிரதேச மாநிலம் மாற்றி அறிவித்துள்ளது.
நகர்புறத்தில் சமூக வன வள உரிமையை (Community Forest Resource Rights) அங்கீகரித்த முதல் மாநிலம் என்ற சிறப்பை சத்தீஸ்கர் பெற்றுள்ளது.
மணிப்பூர் மாநில 17வது ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் தூதராக ஹாக்கி வீராங்கனையான வந்தனா கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
“ஒரு நாள் கைதி” என்ற புதிய திட்டத்தை கர்நாடக மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்திற்கான கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பதற்கான வலையமைப்பில் ஹரியானா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.
அரியானா மாநிலத்தில் உள்ள Hissar விமான நிலையத்தின் பெயரை Maharaja Agrasen International Airport என மாற்றப்படுவதாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் காட்டார் அறிவித்துள்ளார்.
2020ம் ஆண்டுக்கான தேசிய கல்விக்கொள்கையினை அமல்படுத்திய இரண்டாவது இந்திய மாநிலமாக மத்திய பிரதேசம் மாறியுள்ளது.
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்திய முதல் மாநிலம் : கர்நாடகா.
நாட்டிலேயே ஒன்றிற்கு மேற்பட்ட உபரி நீர் நகரங்களைக் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையினை ஆந்திரப்பிரதேசம் பெற்றுள்ளது..
1) விசாகப்பட்டினம் | 2) விஜயவாடா | 3) திருப்பதி
நாட்டின் முதல் உபரி நீர் நகரம் : இந்தூர், மத்தியப்பிரதேசம்.

0 Comments