விளையாட்டு நிகழ்வுகள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய சீனியர் மகளிர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக தாமஸ் டென்னர்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
சுடோக்கு விளையாட்டை உருவாக்கிய ஜப்பானைச் சேர்ந்த மகி காசி காலமானார்.
பார்சிலோனா ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் எஸ்.பி.சேதுராமன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மகாராஷ்டிராவின் புனேயைச் சேர்ந்த 20 வயதான செஸ் வீரர் ஹர்ஷித் ராஜா சதுரங்கத்தில் இந்தியாவின் 69வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
ஜூலை மாதத்துக்கான ICC-யின் சிறந்த வீரராக ஷாகிப் அல்-ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதின் பெயர் மேஜர் தயான் சந்த் கேல்ரத்னா என மாற்றப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
1928, 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று தங்கப்பதக்கம் வெல்லக் காரணமாக இருந்தவர் மேஜர் தயான்சந்த்.
தயான்சந்த் அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“ஹாக்கி மந்திரவாதி” என்றழைக்கப்பட்ட இவருக்கு மத்திய அரசின் பத்ம பூஷண் விருது 1956 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

0 Comments