ஆகஸ்ட் 2021 நடப்பு நிகழ்வுகள் – இந்திய நிகழ்வுகள்

இந்திய நிகழ்வுகள்

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC August 2021 National Current Affairs in Tamil

இந்தியாவின் மிக உயரமான மூலிகை பூங்காவானது உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மானா கிராமத்தில் இந்திய – சீன எல்லை அருகே திறக்கப்பட்டுள்ளது.

உயரம் : 11,000 அடி | பரப்பளவு : 3 ஏக்கர்.

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் உற்பத்தி திட்டமானது (25 MW) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாத்ரி அனல் மின் நிலையத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தில் NTPC ஆல் நிறுவப்பட்டுள்ளது.

மத்திய மின்சக்தி துறையின் 'flexibilisation' திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் முதல் சூரிய திட்டம் இதுவாகும்.

தெலுங்கானாவில் உள்ள ராமகுண்டம் அனல் மின்நிலையத்தின் நீர்த்தேக்கத்தில் 100 MW திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் நிலையத்தையும் NTPC நிர்மாணித்து வருகிறது.

NTPC Chairman & MD : Shri Gurdeep Singh | Founded: 1975 | Headquarters: New Delhi.

இந்தியாவின் மிக சுத்தமான நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ள இந்தூர், தற்போது நாட்டின் முதலாவது உபரி நீர் நகரம் (Water Plus City) என்ற பெருமையும் பெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் சோலார் அடிப்படையிலான சார்ஜின் அமைப்பை ஏற்படுத்தியதன் மூலம் மின்சார வாகனங்களுக்கான நட்பு நெடுஞ்சாலையாக (EV Friendly Highway) டெல்லி – சண்டிகர் நெடுஞ்சாலை உருவெடுத்துள்ளது.

நிறுவனம் : BHEL.

இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் “URJA” எனும் உரையாடல் செயலியை (Chatbot) BPCL உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் முதல்ட்ரோன் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையம்கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது

இந்தியாவின் முதல் பூகம்ப மொபைல் செயலியை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதனை உத்தரகாண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து IIT ரூர்க்கி உருவாக்கியுள்ளது..

இந்தியாவின் முதலாவது இருதய செயலிழப்பு உயிரி வங்கியானது கேரளாவில் உள்ள ஸ்ரீ சித்ரா திருநல் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது பனிப்புகை கோபுரம் டெல்லியில் கான்னட் என்னுமிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவதும், உலகின் மிகப்பெரியதுமான கால்நடை மரபணு சிப்பான "IndiGau" மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் அவர்களால் வெளியிடப்பட்டது.

உருவாக்கிய நிறுவனம் : National Institute of Animal Biotechnology,Hyderabad.

இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் எலெக்ட்ரோலைசர் பிரிவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓமியம் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொடங்கியுள்ளது.

இந்தியாவிலேயே அரசு வேலைகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் எனும் பெருமையை கர்நாடக அரசு பெற்றுள்ளது.

இட ஒதுக்கீடு சதவீதம் : 1% | முதல்வர் : பசவராஜ் பொம்மை.

இந்தியாவிலேயே முதல் முதலாக புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் உத்தரவை கர்நாடக மாநிலம் பிறப்பித்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையை வரையறுக்கும் குழுவின் தலைவராக முன்னாள் இஸ்ரோ தலைவரான கே.கஸ்தூரி ரங்கன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே, கற்போம், எழுதுவோம் இயக்கம் (Padhna Likhna Abhiyan) திட்டத்தை மிகச் சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

100% கரோனா தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரம் எனும் பெருமையை ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வர் பெற்றுள்ளது.

செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பு வசதியினைப் பெற்ற முதல் இந்திய தேசியப் பூங்கா அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவாகும்.

சேவை வழங்கும் நிறுவனம் : BSNL.

இந்தியாவில் முதல் முறையாக வியட்நாமின் துணை தூதரகமானது பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் துணைத்தூதரகத்தின் கௌரவ துணைத் தூதராக என்.எஸ்.சீனிவாஸ் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகின் இரண்டாவது பெரிய புதுப்பிக்கப்பட்ட அதிநவீன தேசிய மரபணு வங்கியை (Refurbished state-of-the-art National Gene Bank) புது தில்லியில் உள்ள பூசாவில் உள்ள தேசிய தாவர மரபணு வள மையத்தில் (National Bureau of Plant Genetic Resources (NBPGR)) மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமர் திறந்து வைத்தார்.

நாட்டில் சமையல் எண்ணெய் 3ல் 2 பங்கு இறக்குமதியாகிறது. சமையல் எண்ணெயின் மொத்த இறக்குமதியில் பாமாயில் மட்டும் 55% ஆகும்.

சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு காண, 11000 கோடி மதிப்பிலான தேசிய சமையல் எண்ணெய் - பாமாயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

மத்திய சமூகநீதி அமைச்சகமானது PM-DAKSH போர்டல் மற்றும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் : டாக்டர் வீரேந்திர குமார்

PM-DAKSH : Pradhan Mantri Dakshta Aur Kushalta Sampann Hitgrahi.

75வது சுதந்திரத் தினத்தையொட்டி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக வீரேந்திரகுமார் #OperationBlueFreedom என்ற பெயரில் ஒரு உலக சாதனை பயணத்தை தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதிலும் இருந்து மாற்றுத்திறனாளிகள் கொண்ட குழுவானது ஒரு உலக சாதனை படைப்பதற்காக உலகின் உயர்ந்த போர்களத்தை (சியாச்சின் பனிமலை) நோக்கிய பயணமாகும்..

சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14 பிரிவினை பேரச்ச நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2047ஆம் ஆண்டிற்குள் ஆற்றல் சுதந்திர நாடாக இந்தியாவை உருவாக்கும் இலக்கை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிர்ணயித்துள்ளார்.

இதற்காக, எரிசக்தி உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைவதற்காக பெட்ரோலியத்தை மற்ற வடிவத்தில் மாற்றும் Mission Circular Econmy திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ஹைட்ரஜன் உருவாக்க இரண்டு வகையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

1) நீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரிப்பது

2) இயற்கை வாயுவில் இருந்து ஹைட்ரஜன் மற்றும் கார்பன் உடைப்பதன் மூலம்.

நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் Gatisakti National Master Plan என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.

புதுபிக்கத்தக்க ஆற்றல் திறனில் இந்தியா 100 ஜிகா வாட் என்ற திறனை எட்டியுள்ளது.

உலக அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவல்களில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

சூரிய சக்தி ஆற்றல் உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடத்திலும், காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளது.

இந்தியா வரும் 2030-ம் ஆண்டுக்குள் 450GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் மீட்டு வரும் பணிகளுக்கான நடவடிக்கைக்கு “ஆபரேஷன் தேவி சக்தி” என்று இந்திய வெளியுறவுத்துறை பெயர் சூட்டியுள்ளது.

நாட்டில் திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத கிராமங்களை அதிக அளவில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு SUJALAM என்ற பெயரில் 100 நாட்கள் பிரச்சாரத்தினை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியானது, அரசாங்க வணிகங்கள் தொடர்பான பரிவர்த்தனைகளை எளிதாக்க, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான IndusInd Bank-கிற்கு Agency Bank என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.

டிஜிட்டல் வங்கி மோசடிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவதற்காக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை பரப்புரை நல்லெண்ணத் தூதராக இந்திய ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.

e-RUPI எனப்படும் புதிய ரொக்கமில்லாத, நேரடி தொடர்பில்லா பண பரிவர்த்தனை முறையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.

தொடங்கப்பட்ட தினம் : 02 ஆகஸ்ட் 2022.

e-RUPI என்பது அடிப்படையில் ஒரு டிஜிட்டல் வவுச்சர் ஆகும்.

இதனை இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) உருவாக்கியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரம்பரிய கோபால்பூர் துறைமுகத்திற்கு சென்ற முதல் இந்திய போர்க்கப்பல் என்ற சிறப்பை ஐஎன்எஸ் கஞ்சர் பெற்றுள்ளது.

இந்திய கடற்படை துணைத் தளபதியாக எஸ்.என். கோர்மேட் பொறுப்பேற்றார்.

எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரலாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி பங்கஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தோ – திபெத் எல்லைக் காவல் படையின் புதிய தலைவராக சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார்

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக ரேகா ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்

இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக திருதி பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

100 ஆண்டுகளில் முதல் பெண் இயக்குனர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விலங்கியல் ஆய்வு மையம் உருவாக்கப்பட்ட ஆண்டு : 1916 | தலைமையிடம் : கொல்கத்தா

இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் ஊழியர் : மீரா மன்சுகானி

புதிய தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக தீபக் தாஸ் பொறுப்பேற்றுள்ளார்.

பொருளாதார வளர்ச்சிக் கழக நிறுவனத்தின் புதிய தலைவராக N.K.சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

காசநோய் தடுப்பு கூட்டுக் குழுவின் தலைவராக மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பொறுப்பேற்று கொண்டார்.

ஐ.நா காசநோய் ஒழிப்பு இலக்கு ஆண்டு : 2030.

இந்தியாவின் காசநோய் ஒழிப்பு இலக்கு ஆண்டு : 2025..

கடந்த இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக நட்பு நாடுகளுக்கிடையிலான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் INS தாப்பர் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் துறைமுகத்தைச் சென்றடைந்தது.

Print Friendly and PDF

Post a Comment

0 Comments