தமிழக நிகழ்வுகள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதன்முறையாக, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ‘ரோபோட்’ மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தை, டாக்டர் ரேலா மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தமிழகத்திலேயே முதல் முறையாக உதகை அருகே பாலாடாவில் அமைந்துள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் அருகில் பழங்குடி பெண்களால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், தோடர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர், பணியர் ஆகிய 6 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
தமிழகத்தில் முதல் முதலாக தமிழியக்கத்தின் சார்பில் தமிழர் பொருளாதார மேம்பாட்டுப் பேரவை என்னும் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
வாசனைப் பொருட்கள் மேம்பாட்டிற்காக திட்டங்களை செயல்படுத்திய கோவை வேளாண் பல்கலைக்கு தேசிய அளவில் சிறந்த செயல்பாட்டுக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது.
2030க்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே குறிக்கோள் என “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்வி கற்காமல் இடைநிற்கும் மலைவாழ் பகுதியிலுள்ள மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு “Mobile System” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் N.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
காமராசர் பிறந்தநாளான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு அறிமுகப்படுத்திய ஆண்டு : 2006
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேரா. முத்துகலிங்கன் கிருஷ்ணன் அவர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ந.சுந்தரதேவன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையம் தனது அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்பித்தது.
திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ 5 இலட்சம் அறிவித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக தடகள போட்டியாளர்கள் விவரம் பின்வருமாறு:
தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்களான ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இருவரும் 4x400 மீ தொடர் ஓட்டத்துக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்..
தமிழினம் மற்றும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருது உருவாக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
பரிசுத்தொகை : ரூ.10 இலட்சம் காசோலை/ பாராட்டு சான்றிதழ்.
ஜெர்மனியில் அமைந்துள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தொடர்ந்து, தொய்வின்றி இயங்க 1 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மூத்த தமிழறிஞர் தமிழ்திரு இரா. இளங்குமரனார் காலமானார்.
தமிழ் தென்றல் திரு.வி.க போலவே இமைகளை மூடி எழுதும் திறன் பெற்றவர்.
4,865 தமிழ்முறைத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் அல்லூரில் பாவணார் நூலகம் மற்றும் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர்.
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர்.
நூல் : திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு | வெளியிட்டவர் : ஜவஹர்லால் நேரு (1963)
நூல் : சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு | வெளியிட்டவர் : அப்துல்கலாம் (2003).
இதர நூல்கள் :
தமிழின் தனிப்பெருஞ் சிறப்பு, தமிழக ஒழுகு தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், எங்கும் பொழியும் இன்பத்தமிழ், இலக்கண வரலாறு, பாவணார் வரலாறு, தேவநேயம், குண்டலகேசி உடை, யாப்பெருங்கலம் உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கை பாடினிய உரை, புறத்திரட்டு உரை
உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையத்தை கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் அமைக்க உள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ‘பயோனிச்சியூரஸ்’ என்ற குடும்பத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியை உதகை அரசுக் கல்லூரியின் வன விலங்கு உயிரியல் துறை மாணவி முஹ்சினா துன்னிசா கண்டுபிடித்துள்ளார்.
இதற்கு ‘பயோனிச்சியூரஸ் தமிழியன்ஸிஸ்’ எனவும் மாணவி பெயரிட்டுள்ளார்.
‘ஸ்பிரிங்டெயில்ஸ்’ என பொதுவாக அழைக்கப்படும் இந்த மண் நுண்ணுயிரி 1 மி.மீ நீளம் கொண்டது.
இந்த வகை நுண்ணுயிரிகள் மண்ணில் உள்ள கழிவுப் பொருட்களை மக்கச்செய்து, மண்ணுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன.
இந்திய அளவில் முதன்முதலாக நடமாட முடியாத நிலையில் முடங்கிய கிடக்கும் நோயாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று சிகிச்சை அளிக்கும் “நடமாடும் மருத்துவ வாகன திட்டத்தை” தமிழகத்தில் திருவள்ளூரில் பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடக்கி வைத்தார்.

0 Comments