மாநில நிகழ்வுகள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை பதவியேற்றார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவி ஏற்றுள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் கோடைக்காலத் தலைநகராக ஸ்ரீநகர் மற்றும் குளிர்காலத் தலைநகராக ஜம்மு என இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கும் தர்பார் முறையை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
ஹரியானா மாநில அரசானது கிராமப்புற சிறு தொழிற்சாலைகளை மேம்படுத்த “One Product – One Scheme” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் க்ரீன் இந்தியா சேலஞ்ச் அமைப்பு ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் மரக்கன்றுகள் ‘மியாவாகி’ முறையில் நடவு செய்து சாதனை படைத்துள்ளது.
தெலுங்கானா மாநில அரசு "Haritha Haram" எனும் பெயரில் 230 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
“ஆந்திராவின் கற்றல் மாற்றத்திற்கு ஆதரவளித்தல்” (SALT) என்ற திட்டத்தை உலக வங்கி உதவியுடன் ஆந்திர மாநில அரசானது தொடங்கியுள்ளது.
SALT : Supporting Andhra's Learning Transformation
இது அடிப்படை கல்வி கற்றல் மாற்றத்தை மாற்றுவதற்கான திட்டமாகும்
கர்ப்பிணிப் பெண்களுக்கு COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடுவதற்காக 'மாத்ரு கவசம்' பிரச்சாரத்தை கேரளா தொடங்கியுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் முதல் புத்தக கிராமம் என்ற அடைமொழியை கொல்லம் மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் என்ற கிராமம் பெற்றுள்ளது.
இந்திய ரயில்வே வரைபடத்தில் இடம்பெற்றது மணிப்பூர் மாநிலம்
மணிப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வைன்கைசுன்பாவோ ரயில் நிலையத்துக்கு பயணிகள் ரயில் சோதனை முறையில் இயக்கப்பட்டது.
Indian Institute of Heritage உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கௌதம புத்தா நகரில் அமைக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு மேல் கொண்ட பெற்றோர்களுக்கான சிறப்பு சலுகைகளை உத்தரப் பிரதேசம் மாநிலம் ரத்து செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கட்டப்பட்டுள்ள "ருத்ராக்ஷா" எனப் பெயர் சூட்டப்பட்ட சர்வதேச மாநாட்டு மையத்தை (International Convention Centre) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
Blockchain என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வி ஆவணங்களை வெளியிடும் முதல் இந்திய மாநிலம் என்ற பெருமையை மகாராஷ்டிரா பெற்றுள்ளது.
ஆசியாவின் மிக நீளமான அதிவேக சாலை மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டம் மத்திய பிரதேச மாநிலம், அமைக்கப்பட்டுள்ளது. ‘நாட்ராக்ஸ்’ என அழைக்கப்படும் 11.3 கிமீ தூரமுள்ள இந்த சாலையை ஒன்றிய அமைச்சர் ஜவடேகர் காணொலி மூலமாக திறந்து வைத்துள்ளார்.
சராசரி வேகம் : 250 கி.மீ | அதிகபட்ச வேகம் : 375கி.மீ
பயன்பாடு : பல்வேறு வகையான வாகனங்களின் அதிவேக செயல்திறனை சோதிப்பதற்காக.

0 Comments