ஜூலை 2021 நடப்பு நிகழ்வுகள் – விளையாட்டு நிகழ்வுகள்

விளையாட்டு நிகழ்வுகள்

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC July 2021 Sports Current Affairs in Tamil

ஆப்கானிஸ்தான் T20 அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ICCயின் T20 தரவரிசையில் ரஷித் கான் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் நிகழ்த்தியுள்ளார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் வரிசையில் இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்டி எட்வர்ட்ஸை முந்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கிரிக்கெட்டின் 3 விதமான போட்டிகளிலும் அதிகமான ரன்கள் குவித்த வீராங்கனை எனும் பெருமையை மிதாலி ராஜ் பெற்றுள்ளார்.

National women online chess title - யை புதுடெல்லியைச் சேர்ந்த வந்திகா அகர்வால் வென்றுள்ளார்.

NC World Masters of Sparkassen Chess Trophy போட்டியில் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை தோற்கடித்து இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

ஜூலை 20 : International Chess Day.

உலகின் இளவயது “கிராண்ட்மாஸ்டர்” எனும் பெருமையை அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவனான அபிமன்யு மிஸ்ரா பெற்றுள்ளார்.

ஹெங்கேரி தலைநகர் புத்தபிஸ்ட் நகரில்  உலக கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

இந்திய வம்சாவளி சிறுவனான அபிமன்யு மிஸ்ரா இந்தியாவின் 67வது சதுரங்க கிராண்ட் மாஸ்டரான லியோன் மெண்டோன்காவை வீழ்த்தி உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் 12 வயது 7 மாதங்களில் கிராண்ட்  மாஸ்டர் பட்டம் வென்றதே கடந்த  19 ஆண்டுகளாக சாதனையாக இருந்துவந்த நிலையில், அபிமன்யு மிஸ்ரா 12 வயது 4 மாதங்கள் 25 நாட்களில்  கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று இந்த சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற “ஸ்பெல்லிங் பீ” போட்டியில் முதல் முறையாக ஆப்பிரிக்கா வம்சாவளியை சேர்ந்த ஷைலா அவந்த் கார்டே என்கிற 14 வயது சிறுமி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஒலிம்பிக் ஹாக்கியில் இருமுறை தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த வீரர் கேசவ் தத் வயது மூப்பு காரணமாக காலமானார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது தனது முழக்கத்தை மாற்றுவதற்கான ஒப்புதலை சமீபத்தில் வழங்கியுள்ளது.

New Olympic Motto : Faster, Higher, Stronger.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைமையிடம் : லாசேன், சுவிட்சர்லாந்து.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நான்கு விளையாட்டுப் போட்டிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டுகள் : Karate | Skateboarding | Sport climbing | Surfing

திரும்ப கொண்டு வரப்பட்ட விளையாட்டுகள் : Baseball | Softball

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 228 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்க இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு பாதுகாப்பு மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளராக ஓய்வுபெற்ற IPS அதிகாரி பி.கே.சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் 2021  நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் முதல் இந்திய பெண் மற்றும் மூன்றாவது நீச்சல் வீரர் என்ற சரித்திர சாதனையை குஜராத்தைச் சேர்ந்த மானா பட்டேல் (Backstroke பிரிவில்) படைத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்கான ஆடவருக்கான ஆர்டிஸ்டிக் பிரிவில் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த தீபக் காப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெருமையைப் பெற்றுள்ள முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான நடுவர் குழுவிற்கு இந்திய துப்பாக்கி சூடு கூட்டமைவின் துணைச் செயலாளர் பவன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த பதவியை பெற்றுள்ள முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே  ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் சஜன் பிரகாஷ் நீச்சல் வீரர்கள் தேர்வு பெற்று உள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் Canoe Slalom எனப்படும் துடுப்பு போட்டியில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட மகளிர் பிரிவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெஸிக்காஃபாக்ஸ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக 1956-ம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவில் கடைசியாக 2000-ம் ஆண்டு சிட்னி நகரில் நடத்தப்பட்டது.

2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது பாரீஸிலும் (பிரான்ஸ்), 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் (USA) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2026-ம் ஆண்டு உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்தும் என உலக பாட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது.

2009ம் ஆண்டு ஹைதராபாத்தில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியதையடுத்து இரண்டாவது முறையாக இந்தியா நடத்தவுள்ளது.

பேட்மிண்டனில் சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியரான நந்து நடேகர் காலமானார்..

யூரோ கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில்  இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

பிரேசிலில் நடைபெற்ற 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசிலை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

கோபா அமெரிக்கா கோப்பையை ஆர்ஜென்டீனா வெல்வது இது 15-வது முறையாகும்.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அதிக முறை வென்ற அணி என்ற உருகுவேவின் சாதனையை அர்ஜென்டினா சமன் செய்தது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பால் வழங்கப்படும் 2020-21ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீராங்கணையாக இந்திய மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனையான கான்காய் பாலாதேவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய கால்பந்து கூட்டமைப்பால் வழங்கப்படும் 2020-21ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீராங்கணையாக இந்திய கால்பந்து அணியின் மூத்த இந்திய தடுப்பாட்ட வீரரான சந்தேஷ் ஜிங்கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மூத்த தடுப்பாட்ட வீரர் AIFF அமைப்பின் ஆண்டின் சிறந்தக் கால்பந்தாட்ட வீரர் பட்டத்தினைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டதால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து பரிசோதனையில் தேர்ச்சி பெறாததால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அன்சுலா ராவ் என்பவருக்கு  நான்கு ஆண்டுகள் தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து பரிசோதனையில் தேர்ச்சி பெறாத முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை இவர்.

1877ல் இருந்து நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில், வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு குரோஷியாவைச் சேர்ந்த மரிஜா சிகாக் என்ற பெண் கள நடுவராக பணியாற்றினார்.

அவர் ஒரு gold badge chair நடுவர் என்பதும் 2012 முதல் WTA எலைட் அணியின் உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், உலகின் முதல் நிலை வீரரும் செர்பியாவைச் சேர்ந்தவருமான நோவாக் ஜோகோவிச் 7-ஆம் நிலை வீரரும் இத்தாலியை சேர்ந்தவருமான பெர்ரெட்னியை வீழ்த்தி 6வது முறையாக விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றி உள்ளார்.

ஒட்டுமொத்தமாக 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதன்மூலம் பெடரர், நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.

நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் தொடர்ந்து விம்பிள்டனிலும் ஜோகோவிச் வாகை சூடியுள்ளார்..

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஷ்லி பார்ட்டி வெல்லும் 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

கடந்த 2019-ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments