ஜூலை 2021 நடப்பு நிகழ்வுகள் – இந்திய நிகழ்வுகள்

இந்திய நிகழ்வுகள்

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC July 2021 National Current Affairs in Tamil

இந்தியாவில் முதல் முறையாக குற்றத்துறை சாட்சி என்ற அலுவலர் (Scene of Crime Officers) பதவியை கர்நாடகா மாநிலம் உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் முதலாவது தானியங்கி இயந்திரம் மூலம் உணவு தானியங்களை வழங்கும் ATM - ஆனது (Grain ATM) ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஃபரூக்நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

இது கோதுமை, அரிசி மற்றும் தினை ஆகிய மூன்று வகையான தானியங்களை வழங்கும்..

இந்தியாவின் முதலாவது FASTag குறியீட்டு அடிப்படையிலான பணமற்ற வாகன நிறுத்த வசதியை டெல்லி மெட்ரோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது நகரும் வகையிலான நன்னீர் வாழ் உயிரின காட்சியகமானது பெங்களூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் ரயில் நிலையம் பெற்றுள்ளது

இந்தியாவில் முதல் முறையாக தமக்கென்று சொந்தமாக ஒரு இணையத்தள ஒளிபரப்பு சேவை வழங்கும் தளத்தினை (OTT) கேரள மாநிலம் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் 24 மணி நேரமும் குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் முதல் நகரம் எனும் பெருமையை ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரம் பெற்றுள்ளது.

திட்டத்தின் பெயர் : 'Sujal - Drink From Tap Mission'. | மாநில முதல்வர்  : நவீன் பட்நாயக்.

இந்தியாவின் முதலாவது சர்வதேச கடல்சார் நடுவண் மையமானது குஜராத் மாநிலத்தின் அமைந்துள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக நீதிமன்ற நடைமுறைகள், விசாரணைகளை குடிமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நேரலையில் ஒளிபரப்பும் வசதியை குஜராத் உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது தனியார் திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி மையமானது மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் திறக்கப்பட்டுள்ளது.

திறந்து வைத்தவர் : நிதின் கட்காரி.

இந்தியாவின் முதல் பசுமை சிறப்பு பொருளாதார மண்டலம் எனும் பெருமையை குஜராத் மாநிலத்தில் உள்ள காண்ட்லா சிறப்பு பொருளாதார மண்டலம் பெற்றுள்ளது.

இந்திய பசுமை கட்டட கவுன்சிலின் பிளாட்டினம் தர அந்தஸ்தை இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் முதலாவது கருப்பு கார்பன் வளாகமானது கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைக்கப்பட்டுள்ளது.

அமைத்த நிறுவனம் : Epsilon Carbon Private Limited

இந்தியாவின் முதலாவது பூவாத தாவரச் செடிகளின் தோட்டமானது  உத்தரக்காண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் அமைக்கப்பட்டுள்ளது.

திறந்து வைத்தவர் : சமூக ஆர்வலர் அனுப் நவ்தியால்

Cryptogami என்பதன் பொருள் மறைக்கப்பட்ட இனப்பெருக்கம்.

கூடுதல் தகவல் : இந்தியாவில் முதல் முறையாக மகரந்தச் சேர்க்கைக்கான (Pollinator Park) உயிரினங்களுக்கென பிரத்யேகப் பூங்கா உத்தரகாண்ட் மாநிலம் Haldwani-யில் அமைக்கப்பட்டுள்ளது..

இந்தியாவிலேயே முதன்முறையாக, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஐ.டி நிறுவனங்களில், தலைவராகப் பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை HCL நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரோஷினி நாடார் மல்கோத்ரா பெற்றுள்ளார்.

நாட்டின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவரான காமினி கங்குலியின் 160 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

ஆனந்தி ஜோஷி உடன் இணைந்து காதம்பினி கங்குலியும் பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் மருத்துவம் படித்த பெண்களாக அறியப்பட்டனர்.

இந்தியாவின் 39வது  யுனெஸ்கோ பாரம்பரிய இடமாக தெலுங்கானா மாநிலம் வாராங்கல் அருகேயுள்ள பாலம்பேட்டில் உள்ள ககாதியா ருத்ரேஸ்வரா கோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

13ஆம் நூற்றாண்டில் இதனை உருவாக்கிய சிற்பியின் பெயரால் ராமப்பா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

காகத்திய மன்னன் கணபதி தேவன் என்பவரின் படைத்தளபதியான ரெச்சல ருத்ரா என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டது.

இந்தியாவின் 40 ஆவது உலகப் பாரம்பரிய இடமாக குஜராத் மாநிலத்தில் உள்ள  ஹரப்பா நாகரிகத்தின் நகரான தோலவிராவை யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 44 வது அமர்வானது சீனாவின் புஜோவில் நடைபெற்றது.

இந்தியாவின் பழமை வாய்ந்த "மும்பை சமாச்சார்" செய்தித்தாள் ஜூலை 1 அன்று தனது 200வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

1822-ல் ஜூலை 1 அன்று மும்பையில் ஃபர்தூன்ஜீ மர்ஸபான் என்ற பார்சி இனத்தவரால் தொடங்கப்பட்டதுதான் பாம்பே சமாச்சார் (பின்னாளில் மும்பை சமாச்சார்) இதழ்.

ஆசியாவிலேயே நீண்ட காலமாக அச்சில் இருக்கும் பத்திரிகை : மும்பை சமாச்சார்.

ஆசியாவின் முதல் செய்தித்தாளான ஹிக்கிஸ் பெங்கால் கெஸட், 1780-ல் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் மூடப்பட்டது.

சமாச்சார் தர்ப்பன் என்ற இதழ்தான் ஆங்கிலம் அல்லாத, இந்திய மொழிகளின் முதல் இதழ். இது 1818-ல் தொடங்கப்பட்டது.

எல்ஐசி தலைவரின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வாரணாசியில் உள்ள மாண்டுவாடி ரயில் நிலையமானது “பனாரஸ் ரயில் நிலையம்” என வடகிழக்கு இரயில்வேயினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகப் பல்கலைக் கழகங்களின் உச்சி மாநாட்டை ஹரியானாவில் உள்ள O.P. ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகம் நடத்தியது.

Theme : Universities of the Future: Building Institutional Resilience, Social Responsibility and Community Impact.

விளிம்புநிலை நபர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் தொழில்களுக்கான உதவி செய்வதற்காக மத்திய சமூகநீதி அமைச்சரவையானது SMILE என்ற பெயரிலான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

SMILE : Support for Marginalized Individuals for Livelihood and Enterprise

ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் பசுமையை ஏற்படுத்தும் முதல் முயற்சியாக காதி கிராம தொழில் ஆணையம் (KVIC) மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருடன் (BSF)  இணைந்து “BOLD” திட்டத்தை தொடங்கியுள்ளது.

BOLD : Bamboo Oasis on Lands in Drought | KVIC : Khadi & Village Industries Commission

ஜெய்சல்மரின் தனோத் கிராமத்தில் 100 மூங்கில் மரங்கள் நடப்பட்டன.

தேசிய கல்வி கொள்கை 2020 அமல்படுத்தப்பட்ட தன் ஓராண்டு நிறைவு தினம் 29 ஜூலை 2021 அன்று கொண்டாடப்பட்டது.

Digital India திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த்துள்ளது.

தொடங்கப்பட்ட தினம் : 1 ஜூலை 2014.

mygov.in இணையதளம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தொடங்கப்பட்ட தினம் : 27 ஜூலை 2014.

இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்க நடவடிக்கை தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்த்துள்ளது.

பொருளாதார தாராளமயமாக்க நடவடிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு : 24 ஜூலை 1991.

அப்போதைய பிரதமர் : நரசிம்மராவ் | அப்போதைய நிதியமைச்சர் : மன்மோகன்சிங்.

பொது நிறுவனங்கள் துறையை நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 6வது துறையாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் மீது வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் அன்னிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

2021ம் ஆண்டுக்கான NEET தேர்வு மையங்கள் முதல் முறையாக துபாய் மற்றும் குவைத் நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய விளையாட்டு அமைச்சகத்தின் 17வது அமைச்சராக அனுராக் தாக்கூர் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த ஜூன் 16ம் தேதி முதல் தங்க நகைகளின் தரத்தை நிர்ணயிக்கும் வகையில் ஹால்மார்க் முத்திரையிடுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஏப்ரல் 2000 முதல் தங்க நகைகளுக்கு "ஹால்மார்க்" முத்திரை வழங்கி வருகிறது.

இந்தியாகாம்பியா நாடுகளுக்கிடையேயான பணியாளர்கள் நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மீதான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா - பிரிட்டன் கடற்படைகள் பங்கேற்கும் "கொங்கன்" கூட்டுப் பயிற்சியானது இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெற்றது.

இதில் பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலான HMS Queen Elizabeth பங்கேற்றது.

"Exercise SHIELD" என்ற பெயரில் இந்தியா - இலங்கை - மாலத்தீவு இடையே போதை பொருள் கடத்தல், தடுத்தல் மற்றும் மீட்புப் படை குறித்த கடற்படை பயிற்சியானது நடத்தப்பட்டது.

மித்ரா சக்தி : இந்தியா/இலங்கை | SILINEX : இந்தியா/இலங்கை

EKUVERIN : இந்தியா/மாலத்தீவு

12வது இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியான "இந்திரா 2021" ரஷ்யாவின் வோல்காகிராடில் (Volgograd) நடைபெற்றது.

கடற்படை பயிற்சியானது பால்டிக் கடல் பகுதியில் நடைபெற்றது. இதில் இந்திய கடற்படை சார்பாக INS Dabar பங்கேற்றது.

36வது இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையிலான கூட்டு கடற்படைப் பயிற்சியான "CORPAT" பயிற்சியானது இந்திய பெருங்கடல் பகுதியில் நடைபெற்றது.

பங்கேற்ற போர்க்கப்பல் : INS சர்யு, KRI பங்தோமா.

Cutlass Express 2021 என்ற பெயரில் பன்னாட்டு கடல்சார் பயிற்சியானது கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரை பகுதியான கென்யாவின் மாம்பாசாவில் நடைபெற்றது.

பங்கேற்ற இந்திய போர்க்கப்பல் : INS தல்வார்.

ரஷ்யாவின் ஜுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவுள்ள மாக்ஸ் சர்வதேச விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் சாரங் ஹெலிகாப்டர் குழு முதல் முறையாக கலந்துகொள்ள உள்ளது.

இந்த குழுவில் மேப்பட்ட இலகுரக ஹெலிகாப்டரான துருவ் உள்ளது.

கடந்த 2003-ஆம் ஆண்டு பெங்களூருவில் உருவாக்கப்பட்ட சாரங் குழு, சர்வதேச அளவில் முதன்முறையாக 2004-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய விமானக் கண்காட்சியில் கலந்து கொண்டது.

எல்லைக் கோட்டுப் பகுதியில் 1999 ஆம் ஆண்டு ஆபரேஷன் பிர்சா முண்டாவில் காலமான கேப்டன் குர்ஜிந்தர் சிங் சூரிக்கு போர் நினைவிடம் இந்திய ராணுவத்தால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1999 பாகிஸ்தான் போரில் நவம்பர் மாதத்தில் பிர்சா முண்டா ஆபரேஷன் நடத்தப்பட்டது.

இரண்டாம் உலக போரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடத்தை இத்தாலியின் கசீனோ என்னுமிடத்தில் இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.நரவானே திறந்து வைத்தார்.

ராணுவத்தில் சாகச செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், இமயமலைப் பகுதிகளில் "ARMEX-21" நடத்தப்பட்டது.

2021 மார்ச் 10 அன்று லடாக்கில் உள்ள கரகோரம் பாசில் தொடங்கிய இந்த நிகழ்வு, 2021 ஜூலை 6 அன்று உத்தரகாண்டில் உள்ள மலாரியில் நிறைவுற்றது.

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments