சர்வதேச நிகழ்வுகள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க தொழிலாளர் நலத்துறை சட்ட அதிகாரியாக சீமா நந்தா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்துக்கான புதிய அமெரிக்கத் தூதராக பீட்டர் ஹாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள ஃபெடரல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சாலினா என்கிற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க பெடரல் நீதிமன்ற நீதிபதியாக தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
எஸ்டோனியா நாட்டில் முதன் முறையாக ஓட்டுநர் இல்லாமல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் மினி பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகின் முதல் முறையாக 3டி முறையில் உருவாக்கப்பட்டுள்ள எஃகு நடைப்பாலமானது நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிவேக ரயிலை சீனாவின் ரயில்வே ரோல்லிங் ஸ்டாக் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ரயிலின் பெயர் : Maglev | வேகம் : 600 Km/hr அல்லது 373 mph
உலகின் மூன்றாவது (ம) இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமானது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 290 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது.
தற்போது உலகின் மூன்றாவதும், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் உள்ளது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் : நரேந்திர மோடி மைதானம், ஆமதாபாத்.
உலகின் 2வது பெரிய கிரிக்கெட் மைதானம் : மெல்போர்ன் மைதானம்,ஆஸ்திரேலியா.
உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பானது (Star Sapphire Cluster) இலங்கையில் உள்ள இரத்தினபுரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எடை : 510 கிலோ (அ) 25 இலட்சம் காரட் எடை | மதிப்பு : 745 கோடி.
உலகின் முன்னணி இதழ்களில் ஒன்றான ‘தி கார்டியன்’ தனது இருநூற்றாண்டு நிறைவை சமீபத்தில் கொண்டாடியது.
‘தி கார்டியன்’ தொடங்கப்பட்டபோது அதன் பெயர் ‘தி மான்செஸ்டர் கார்டியன்’.
மே 5, 1821-ல் பருத்தி வணிகர் ஜான் எட்வர்டு டெய்லரால் பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் தொடங்கப்பட்ட வார இதழ் அது.
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் குழுவின் 44 வது அமர்வானது சீனாவின் புஜோவில் நடைபெற்றது.
தேசிய கார்பன் சந்தை என்ற பெயரில் உலகின் மிகப் பெரிய கார்பன் உமிழ்வு வர்த்தக அமைப்பை சீனா உருவாக்கியுள்ளது.
சர்வதேச சோலார் கூட்டமைப்பில் (ISA) சுவீடன் உறுப்பினாராக இணைந்துள்ளது.
இந்தியாவின் UPIயை QR Code ஸ்கேனிங்களுக்காக தரநிலைகளை ஏற்றுக்கொண்ட முதல் நாடு என்ற பெருமையை பூட்டான் பெற்றுள்ளது.
NPCI : National Payments Corporation of India | BHIM : Bharat Interface for Money
UPI : Unified Payment Interface | QR Code : Quick Response Code
கரிபீயன் தீவில் அமைந்துள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜொவினெல் மொய்சே கூலிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஹைதி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்றி பொறுப்பேற்றுள்ளார்.
ஹைதி நாட்டின் இடைக்கால அதிபராக, இடைக்கால பிரதமர் பதவி வகித்த கிளாடி ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பா நியமனம் செய்யுமாறு அதிபர் வித்யாதேவி பண்டாரிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரும்பான்மையை நிரூபிக்க 136 வாக்குகள் தேவை என்ற நிலையில், பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதன்மூலம் 5-வது முறையாக பிரதமரானவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அமெரிக்க தொழிலாளா் நலத்துறை தலைமை சட்ட அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா நந்தாவை நியமனம் செய்ய செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
பீட்டா கரோட்டின் நிறைந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட “தங்க அரிசியினை” வணிக ரீதியில் விவசாயம் செய்வதற்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.
காரணம் : விட்டமின் A குறைபாட்டை சரி செய்வதற்காக.



0 Comments