முக்கிய நியமனங்கள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக சிறுபான்மையினர் நலத்துறை ஆணையராக எஸ்.பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வனத்துறை தலைவராக அசோக் உப்ரேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், கல்வியியல் கழகத்தின் தலைவராக (Tamilnadu Textbook and Educational Services Corporation) திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக குறிஞ்சி என்.சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவராக பொன்.குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு : 1994
தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக தலைவராக நீதிபதி என்.கிருபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி வருமானவரித்துறை முதன்மை தலைமை ஆணையராக சுபஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார்..
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.சுப்பையா பொறுப்பேற்றுள்ளார்.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக பேராசிரியர் இராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செயல்படுவார்.
உறுப்பினர் செயலராக முனைவர் கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழக துணைவேந்தராக முத்துகலிங்கன் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக R.ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Amazon நிறுவனத்தின் CEO பொறுப்பில் இருந்து ஜெஃப் பெசோஸ் விலகியதைத் தொடர்ந்து புதிய CEOவாக ஆண்டி ஜாஸே நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாநிலங்களவை தலைவராக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் துணை தலைவராக முக்தார் அப்பாஸ் நவ்வி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த
இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் கார்செட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புதிய தலைவராக ஸ்வீடன் நாட்டு தூதரான அன்னா ஜார்ஜ் ஃபெல்ட் மெல்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Twitter நிறுவனத்தின் இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஃபெடரல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஷியாம் சீனிவாசன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Comments