ஜூலை 2021 நடப்பு நிகழ்வுகள் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

அறிவியல் (ம) தொழில்நுட்பம்

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC July 2021 Science and Technology related Current Affairs in Tamil

Fengyun-3E என்ற பெயரில் சீனா உலகின் முதல் வானிலை ஆய்வு செயற்கைக்கோளை விடியல் – அந்தி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

விடியல் மற்றும் அந்தி நேரத்தின் முக்கியமான தகவல்களை சேகரித்து உலகிற்கு வழங்கும்.

Nauka என்ற பெயரில் விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் அனுப்பியுள்ளது.

2021ஆம் ஆண்டு ரஷ்யாவினால் அனுப்பப்பட்ட Piris .விண்வெளி ஆய்வு கூடத்திற்கு மாற்றாக அனுப்பப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் திறன்களை மேம்படுத்தும் ஆராய்ச்சி ஆய்வகம், சேமிப்பு அலகு மற்றும் ஏர்லாக் ஆகியவற்றுக்காக நவுகா தொகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது சொந்த விண்வெளி நிறுவனமான Blue Origin உருவாக்கிய New Shepard ராக்கெட் மூலம் முதல் முதலாக தனது சகோதரர் மார்க் பெசோஸ், அமெரிக்காவின் முதல் பெண் விமான பயிற்சியாளரான வாலி பங்க் (Wally Funk), மற்றும் இவர்களுடன் 18 வயதேயான ஆலிவ் டையமேன் (Oliver Daemen) ஆகியோருடன் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

விண்வெளி பயணம் மேற்கொண்ட இரண்டாவது தொழிலதிபர் : ஜெஃப் பெசோஸ்

விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இயவயது நபர் : ஆலிவ் டையமேன்

விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் வயதான நபர் : வாலி பங்க்.

விண்வெளிப்பயணம் மேற்கொண்ட மூன்றாவது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எனும் பெருமையை சிரிஷா பண்ட்லா பெற்றுள்ளார்.

கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் வரிசையில் தற்போது விண்வெளிக்குச் சென்று திரும்பிய இந்திய வம்சாவளி வீராங்கனையாக பண்ட்லா திகழ்கிறார்.

31 வயதான சிரிஷா பண்ட்லா இந்தியாவில் பிறந்த இரண்டாவது நபராகவும். தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராகவும் இருப்பார்.

விர்ஜின் கேலடிக் என்ற அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனத்தின் யூனிட்டி 22' விண்கலத்தின் மூலம் இவர் 11-7-2021 அன்று வெண்வெளிக்கு சென்றுள்ளார்..

75வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு விண்ணில் செலுத்தப்படவுள்ள 75 செயற்கைக்கோள்கள் திட்டத்தில் பெங்களூரு மல்லேஸ்வரம் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என துணை முதல்வர் அஸ்வத்நாராயணன் தெரிவித்துள்ளார்.

Zircon என்ற பெயரிடப்பட்ட ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடிய அதிநவீன ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

Helma - P என்ற பெயரில் லேசர் மூலம் இயங்கும் தானியங்கி விமானங்களுக்கு எதிரான வான் பாதுகாப்பு அமைப்பை பிரான்ஸ் நாடு வெற்றிகரமாக சோதித்துள்ளது.

Helma – P : High-energy Laser for Multiple Application – Power.

AMLEX என்ற பெயரில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து நோயாளி உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் போது, ஆக்சிஜன் ஓட்டத்தை கட்டுப்படுத்தி ஆக்சிஜன் வீணாவதை தடுப்பதற்கான Oxygen Rationing Device எனும் கருவியை IIT Ropar உருவாக்கியுள்ளது.

COVIHOME என்ற பெயரில் இந்தியாவின் முதல் விரைவான மின்னணு மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் COVID-19 துரித சோதனைக் கருவியைப் IIT ஹைதராபாத் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

Divya Nayan என்ற பெயரில் பார்வையற்றோருக்கான தனிப்பட்ட வாசிப்புக் கருவிகள் சண்டிகரில் உள்ள CSIR - மத்திய அறிவியல் கருவிகள் கழகம் (CSIO) உருவாகி உள்ளது. இந்தக் கருவியைப் பயன்படுத்தி எந்த அச்சிடப்பட்ட அல்லது டிஜிட்டல் ஆவணத்தையும் குரல் வழியாக அணுகலாம்.

CSIR : Council of Scientific & Industrial Research

CSIO : Central Scientific Instruments Organisation.

FASTER என்ற பெயரில் சிறை அதிகாரிகள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு ஜாமீன் மற்றும் பிற உத்தரவுகளை உடனடியாக, நேரடியாக, பாதுகாப்பாக மற்றும் மின்னணு முறையில் துரிதமாக பரிமாற்றம் செய்வதற்கான செயலியை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான N.V.ரமணா அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

FASTER : Fast and Secure Transmission of Electronic Records.

நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு, விவசாயம் மற்றும் வானிலை பற்றிய தகவல்களை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு சமீபத்தில் Atmanirbhar Krishiஎன்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

விவசாயிகள் விரும்பிய மொழியில் சரியான நேரத்தில் சரியான தகவல்களைப் பெற “Kisan Sarathi" எனும் டிஜிட்டல் வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த (NIOT) ரா.வெங்கடேசன் தலைமையில் தமிழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சுனாமியை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கும் நிகழ்நேர சுனாமி கண்காணிப்பு கருவிக்கு இந்திய காப்புரிமை கிடைத்துள்ளது.

கோழி இறைச்சி கழிவுகளிலிருந்து பயோ டீசலை தயாரித்த, கேரள மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஜான் ஆபிரகாமின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமையானது வழங்கப்பட்டுள்ளது.

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments