விருதுகள் (ம) கௌரவங்கள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
2021ம் ஆண்டிற்கான தமிழக அரசின் "தகைசால் தமிழர்" விருதுக்கு முதுபெரும் தலைவர் திரு என்.சங்கரய்யா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான ஐ.நா பூமத்திய ரேகை பரிசானது தமிழ்நாட்டின் நீலகிரியை சேர்ந்த ஆதி மலை பழங்குடியினர் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஸ்னேகாகுஞ்சா தொண்டு நிறுவனம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டிற்கான "NatWest Group Earth Heros Award" மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாத்பூரா புலிகள் காப்பகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது..
2021ம் ஆண்டுக்கான இங்கிலாந்து நாட்டின் “Commonwealth Points of Light Award” என்ற விருந்தானது ஹைதராபாத்தைச் சேர்ந்த சையது ஒஸ்மான் அஷார் மக்சுசி எனும் சமூக ஆர்வலருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Sani Welfare Foundation என்ற அமைப்பின் மூலம் பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்கும் சேவையை செய்து வருகிறார்.
இங்கிலாந்து நாட்டின் "Alexander Dalrymple" விருதானது இந்தியாவின் தலைமை நீர்நிலையியல் வல்லுநர் வினய் பத்வாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் வீர தீரச் செயல்களில் ஈடுபடும் போலீஸாருக்கு வழங்கப்படும், பிரதம மந்திரியின் உயிர்காக்கும் காவலர் விருதுக்காக தஞ்சாவூர் காவலர் எஸ்.ராஜ்கண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்கள் கல்வி கற்க உதவியதற்காக, மத்திய அரசின் தேசிய சமுதாய வானொலி விருதானது மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து செயல்படும் Radio Vishwas 90.8 வானொலிக்கு, வழங்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டிற்கான இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் "Norman Borlaug National Award" காஜல் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டிற்கான 'Outstanding Civil Engineering Achievement Award' ஆனது டெல்லி மெட்ரோ ரயிலுக்கான I,II மற்றும் III-ம் கட்டத் திட்டப் பணிகளுக்கு Japan Society of Civil Engineers சார்பில் வழங்கப்பட்டுள்ளது..

0 Comments