தமிழக நிகழ்வுகள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த தகவல்கள் ;
அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதி : சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு
அதிக வாக்காளர்கள் உள்ள மாவட்டம் : சென்னை
குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதி : துறைமுகம், சென்னை
குறைவான வாக்காளர்கள் உள்ள மாவட்டம் : அரியலூர்
அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டத் தொகுதி : கரூர் (77 பேர்)
குறைவான வேட்பாளர்கள் போட்டியிட்டத் தொகுதி : பவானிசாகர், வால்பாறை (6 பேர்)
16வது சட்டசபைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் சதவீதம் : 72.78%
அதிக வாக்குகள் பதிவாகியுள்ள தொகுதி : 87.33%, பாலக்கோடு (தருமபுரி).
குறைவான வாக்குகள் பதிவாகியுள்ள தொகுதி : 55.52%, வில்லிவாக்கம் (சென்னை).
அதிக வாக்குகள் பதிவாகியுள்ள மாவட்டம் : கரூர் (83.92%).
குறைவான வாக்குகள் பதிவாகியுள்ள மாவட்டம் : சென்னை (59.06%).
கோவை, கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்த மாரப்ப கவுண்டர் சுதந்திர இந்தியாவின் அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் (1952 முதல் 2021வரை) வாக்களித்து புதிய சாதனைப் படைத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, சென்னை சுங்க இலக்காவானது வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம், மதுபானங்கள், போதைப்பொருள்கள், தங்கம் போன்றவை கடத்தப்படுவதை தடுக்க Operation Blue Eagle என்ற பெயரில் விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்டவற்றில் திடீர் சோதனையை நடத்தியது.
சாலைகளில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர்கள், பெண்கள், சிறுவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையில் காவல் கரங்கள் என்ற திட்டத்தை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியுள்ளது.
சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் அதிகளவில் பணத்தை சேமித்து வைத்துள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேற்கு வங்கம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
கரோனா தடுப்பூசிகளை அதிகளவில் வீணாக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் முதல் முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட வீட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை IITயில் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் முதல் முறையாக சூரிய ஒளியில் இயங்கும் சோலார் கோழி குஞ்சு போரிப்பான் இயந்திரத்தை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் தயாரித்துள்ளது
இந்தியாவின் 68வது செஸ் கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த அர்ஜுன் கல்யாண் உருவாகியுள்ளார்.
இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்
பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் (PESB) தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த மல்லிகா ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக என்.எஸ்.சந்தோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் S.மாதேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜராவதற்கு உதவி சொலிசிட்டர் ஜெனரலாக ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக புதுச்சேரி தலைமை நீதிபதி பி.தனபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்ட தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்க மறுத்ததையடுத்து, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கே.சத்திய கோபால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக ரவி வல்லூரி பொறுப்பேற்றுள்ளார்.
உலகின் முதல் 100 சிறந்த பெண் கண் மருத்துவர்களை உள்ளடக்கிய “Power List 2021” பட்டியலில் சென்னையைச் சேர்ந்த டாக்டர் அகர்வால் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவரான சூசன் ஜேக்கப் இடம் பெற்றுள்ளார்.
The Ophthalmologist என்ற இதழ் சர்வதேச அளவில் கண் மருத்துவ சிகிச்சையில் அளப்பரிய பங்களித்துவரும் ஆற்றல்மிக்க 100 கண் மருத்துவர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
தமிழக அரசின் சார்பின் 4 முறை சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை பெற்ற நடிகர் விவேக் காலமானார்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற ஆண்டு : 2009
காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழேயுள்ள Start the Quiz பொத்தானை அழுத்தவும்.