அறிவியல் (ம) தொழில்நுட்பம்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த CIBA இந்தியாவின் முதல் உள்நாட்டு மீன் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தடுப்பூசியின் பெயர் : நோவாடாக்-ஆர்
CIBA : Central Institute of Brackishwater Aquaculture
உலகிலேயே முதல் முறையாக ரஷியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் பெயர் : கார்னிவாக்-கோவ்
மிகவும் உயரமான பனிப்பிரதேச இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்காக SPO2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) சார்ந்து தானியங்கி துணை ஆக்ஸிஜன் விநியோக அமைப்பு முறையை DRDO உருவாக்கியுள்ளது. கரோனா நோயாளிகளுக்கும் உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
COVIDRAP என்ற பெயரில் கரோனா நோயை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை IIT கோராக்பூர் கண்டறிந்துள்ளது.
Prana-Vayu என்ற பெயரில் குறைந்த விலை வெண்டிலேட்டரை IIT ரூர்கி உருவாக்கியுள்ளது.
பார்வையற்றோருக்கான தொடு உணர்வுடைய கடிகாரத்தை IIT கான்பூர் உருவாக்கியுள்ளது.
இதனை பேராசிரியர்கள் சித்தார்த்தா பாண்டா மற்றும் விஷ்வராஜ் ஸ்ரீவத்சவா இணைந்து உருவாக்கியுள்ளனர்.
Nanosniffer என்ற பெயரில் வெடிக்கக்கூடிய அபாயமுள்ள பொருள்களை 10 நொடிகளுக்குள் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் கருவியை IIT மும்பையின் உதவிபெற்ற தொழில்முனைவு நிறுவனமான Nanosniff Technologies உருவாக்கியுள்ளது.
மின்கலத்தில் இயங்கக்கூடிய பறக்கும் E-Taxi யை IIT சென்னை வடிவமைத்துள்ளது. இதற்காக கடந்த ஆண்டு “The E Plane Company” என்ற புதிய நிறுவனத்தை நிறுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் (ARIES) காமா கதிர்களை வெளியேற்றும் புதிய பால்வெளித் திரளைக் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியில் இருந்து 31 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
விண்மீன் திரளின் பெயர் : Narrow-Line Seyfert 1 Galaxy (NSL1).
ARIES : Aryabhatta Research Institute of Observational Sciences.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்சின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான Blue Orgon தயாரித்த New Shepard ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளிக்கு விஞ்ஞானிகள், தொழில்முறை விண்வெளி வீரர்கள் மற்றும் பயணிகளை அழைத்து செல்லுவதற்காக இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டுள்ளது..
சமீபத்தில் நாசாவானது SHIELDS Mission என்ற புதிய விண்வெளித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
NROL-82 என்ற பெயரிலான உளவு செயற்கைக்கோளை சமீபத்தில் அமெரிக்க விண்ணில் செலுத்தியுள்ளது.
எடுத்து சென்ற கனரக ராக்கெட்டின் பெயர் : Delta IV.
ஐக்கிய அரபு அமீரகத்தின் காற்று மாசுபாட்டை கண்டுபிடிக்க உதவும் DMSat - 1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இது அரபு அமீரகத்தின் முதல் சுற்றுச்சூழல் செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் விண்வெளி வீராங்கனையாக Nora Al-Matrooshi என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் விண்வெளி வீரராக Hazzaa Al-Mansoori என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Rashid என்ற பெயரில் நிலவுக்கு வரும் 2022ல் ஓர் ஆய்வு வாகனத்தை (Rover) அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 2021ல் லூனா 25 என்ற பெயரில் நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்தை ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் அறிவித்துள்ளது.
2025ம் ஆண்டிற்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
2022ம் ஆண்டிற்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது.
சீனா அமைக்கவுள்ள விண்வெளி ஆய்வு மையத்தின் பெயர் : Tiangong (Heavenly Palace).
சமீபத்தில் சீனா அனுப்பிய விண்வெளி ஆய்வு கலத்தின் பெயர் : Tianhe என்பது "Harmony of the Heavens" (சொர்க்கங்களின் இணக்கம்) என்பதாகும்.
Tianhe ஆய்வு விண்கலத்தை எடுத்து சென்ற ராக்கெட்டின் பெயர் : Longmarch 5B Y2.
செவ்வாய் கிரக ஆய்விற்காக சீனா தியான்வென்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது.
அந்த விண்கலத்தில் இடம்பெற்றுள்ள சீனாவின் முதலாவது செவ்வாய் கிரகத்திற்கான ரோவருக்கு அந்நாட்டின் பாரம்பரிய நெருப்பு கடவுளின் பெயரில் Zhurong எனப்பெயரிடப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் விண்கலம் சாதனைப் படைத்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் செவ்வாய் கிரகத்தில் இன்ஜினிட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டுள்ளது.
மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி பூமியைத் தாண்டி வேற்று கிரகத்தில் பறந்தது என்ற வரலாற்று சாதனையை நாசா படைத்துள்ளது.
இன்ஜினிட்டி ஹெலிகாப்டர் (Ingenuity) எடை : 1.80 கிராம்.
செவ்வாய் கிரக ஆய்விற்காக உலக நாடுகள் அனுப்பிய விண்கலங்கள்
Tiwanwen 1 - சீனா
Hope - ஐக்கிய அரபு அமீரகம்
Persivarance – அமெரிக்கா
Mangalyaan – இந்தியா.
ஸ்மார்ட் போன் தயாரிப்பு சந்தையில் இருந்து வெளியேறுவதாக LG நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழேயுள்ள Start the Quiz பொத்தானை அழுத்தவும்.