இராணுவம் (ம) பாதுகாப்பு
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
வங்காள விரிகுடாவில் “La Pérouse” என்ற குறியீட்டு பெயரில் ஒரு பிரெஞ்சு கடற்படை பயிற்சியில் QUAD அமைப்பைச் சேர்ந்த நான்கு நாடுகளின் போர்க்கப்பல்கள் முதன்முறையாக பங்குபெற்றன.
QUAD அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் : இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா
French Navy (FN), Royal Australian Navy (RAN), Japan Maritime Self Defence Force (JMSDF) and United States Navy (USN)
இந்தியா சார்பில் பங்கேற்ற போர்க்கப்பல்கள் : INS Satpura (with an integral helicopter embarked) மற்றும் INS Kiltan alongwith P8I Long Range Maritime Patrol Aircraft
19வது இந்திய-பிரெஞ்சு கடற்படை போர் பயிற்சியான வருணா போர் பயிற்சியானது அரபிக்கடல் பகுதியில் நடைபெற்றது.
இந்தியா சார்பில் பங்கேற்ற போர்க்கப்பல்கள் : INS Kolkata, INS Talwar & INS Deepak
SHANTIR ORGOSENA 2021 (அமைதிக்காக முன்னனி வகிப்போர்) என்ற பெயரில் பன்னாட்டு கூட்டு இராணுவ ஒத்திகை வங்கதேசத்தில் Bangabandhu Senanibas என்னுமிடத்தில் நடைபெற்றது.
பங்கேற்ற நாடுகள் : இந்தியா, இலங்கை, பூட்டான் மற்றும் வங்கதேசம்.
Theme : “Robust Peace Keeping Operations”.
Khanjer 2021 எனப்படும் இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் நாடுகள் பங்கேற்கும் 8வது கூட்டு இராணுவ ஒத்திகையானது கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்றது.
சமீபத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இந்தோனேசியாவின் நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் ஒத்துழைக்க இந்தியா தனது ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்புக் கப்பலை (DSRV) இந்திய கடற்படை அனுப்பி வைத்தது.
காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பெயர் : KRI Nanggala-402.
காணாமல் போன இடம் : பாலி தீவு
இந்திய மீட்பு கப்பல் DSRV : Deep-Submergence Rescue Vessel.
Hydrographic Survey எனப்படும் நீர்பரப்பு கணக்கெடுப்பை மேற்கொள்வதற்காக இந்திய கடற்படை கப்பலான INS Sarvekshak மொரீஷியஸ் கடற்படையுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்திய கடற்படை கப்பலான INS Ranvijay நல்லெண்ண அடிப்படையில் 3 நாள் பயணமாக கடந்த ஏப்ரல் 14 அன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
ஹெலிகாப்டர் என்ஜின் பயன்பாட்டிற்காக Single Crystal Blades-யை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) உருவாக்கியுள்ளது.
முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் வானில் இருந்து வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஐந்தாம் தலைமுறை ஏவுகணையான “பைத்தான் – 5” ஏவுகணையை ஏந்திச் செல்ல ஒப்புதலானது வழங்கப்பட்டுள்ளது..
இலக்கு தூரம் : 20 கிலோமீட்டர்
பைத்தான் – 5 ஏவுகணையை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த Rafael Advanced Defence Systems உருவாக்கியுள்ளது.
முன்னதாக, DRDO முதல் முறையாக இந்த ஏவுகணை சோதனையை கோவா கடற்கரைப்பகுதியில் வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் இணைக்கப்பட்ட இஸ்ரேலை சேர்ந்த டெர்பி ஏவுகணையானது பார்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்கையும் (50 Km) துல்லியமாக தாக்கியது.
கடற்படை கப்பல்களை எதிரிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை (Advanced Chaff Technology) DRDO உருவாக்கியுள்ளது.
ஜோத்பூரில் உள்ள பாதுகாப்பு ஆய்வகம் இதனை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
குறைந்த, நடுத்தர மற்றும் நீண்ட தூரம் என மூன்று ரகங்களில் தயாரான இந்தவகை தொழில்நுட்ப ராக்கெட்டுகளில் இருந்து வெளிப்படும் உலோகங்கள் எதிரிகளின் ஏவுகணைகளை திருப்பி அனுப்பி விடும்.
அரேபிய கடலில் இந்திய கடற்படை கப்பலில் இருந்து இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தினருக்கான இலகு ரக குண்டு துளைக்காத ஜாக்கெட்டை DRDO தயாரித்துள்ளது. இது கான்பூரில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் எடை : 9 கிலோ.
Ashok Leyland நிறுவனம் Lockheed Martin நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த குண்டு துளைக்காத இலகு ரக வாகனம் (LBPV) இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த வாகனம் லாக்கீட் மார்டின் CVNG வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
LBPV : Light Bullet Proof Vehicles.
காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழேயுள்ள Start the Quiz பொத்தானை அழுத்தவும்.