பொருளாதாரம் (ம) வங்கியியல்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் வரும் 2025ம் ஆண்டுக்குள் டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றம் 71.7 சதவீதமாக அதிகரிக்கும் என ACI Worldwide நிறுவனம் தெரிவித்துள்ளது..
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-22ம் நிதியாண்டில் 12.5 சதவீதமாக இருக்கும் என IMF கணித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-22ம் நிதியாண்டில் 7.5 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் மறைமுக வரி வசூல் 12.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் நாட்டில் தங்கம் இறக்குமதி 22.58 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேன் மற்றும் தேனீ சார்ந்த பிற பொருள்களை இணையதளம் மூலமாக பெறுவதற்காக தேசிய தேனீ வாரியத்துடன் இந்தியன் வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘Citi Bank’ இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் நுகர்வோர் வங்கிச் சேவையிலிருந்து வெளியேறயுள்ளதாக அறிவித்துள்ளது.
நோயற்ற சமுதாயத்தை ஏற்படுத்தும் வகையில் “Immune India, Deposit India” என்ற புதிய திட்டத்தை Central Bank of India அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் படி, தடுப்பூசி போட்டுக்கொண்ட வாடிக்கையாளர்கள் 1,111 நாட்களுக்கு குறிப்பிட்ட தொகையை வைப்புத்தொகையாக செலுத்தினால் வட்டி வீதம் 0.25% கூடுதலாக வழங்கப்படும்.
நிதி அமைப்புகளை பசுமை மயமாக்குவதற்கான மத்திய வங்கிகளின் நெட்வொர்க்கில் (NGFS) இந்திய ரிசர்வ் வங்கி உறுப்பினராக (23/04/2021) இணைந்துள்ளது.
NGFS : Central Banks and Supervisor’s Network for Greening the Financial System.
இந்திய வங்கி சீர்த்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படும் M.நரசிம்மம் காலமானார்.
UPI மூலமாக ஒரு மில்லியன் பணப்பரிமாற்றங்கள் எனும் இலக்கை எட்டிய முதல் நிறுவனம் எனும் பெருமையை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட PhonePe நிறுவனம் பெற்றுள்ளது.
காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழேயுள்ள Start the Quiz பொத்தானை அழுத்தவும்.