ஏப்ரல் 2021 நடப்பு நிகழ்வுகள் – முக்கிய நியமனங்கள்

முக்கிய நியமனங்கள்

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC April 2021 Important Appointments List in Tamil

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் (DEA) புதிய செயலராக அஜய் சேத் பொறுப்பேற்று கொண்டார்.

DEA – Department of Economic Affairs.

மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை செயலராக தருண் பஜாஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய நிதித்துறை செயலராக தமிழகத்தைச் சேர்ந்த IAS அதிகாரி டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறைச் செயலராக கியானேஷ் குமார்  நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பழங்குடியின விவகாரத் துறைச் செயலராக அனில் குமார் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறைச் செயலராக அஞ்சலிபாவ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்லையோர சாலை அமைப்பின் (BRO) முதல் பெண் கமாண்டராக வைசாலி ஹிவாசே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

BRO : Border Roads Organisation.

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 1960.

உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் 24-வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் : சுகுமார் சென்.

இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் : ரமாதேவி.

மிக நீண்ட காலம் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றியவர் : KVK சுந்தரம்.

இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் (SIDBI) தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

SIDBI – Small Industries Development Bank of India.

தேசியப் பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மன்றத்தின் (NCAER) முதல் பெண் பொது இயக்குனராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

NCAER – National Council of Applied Economic Research.

பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் (PESB) தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த மல்லிகா ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனியார் துறையைச் (TAFE) சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இந்த வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

TAFE – Tractors and Farm Equipments Limited.

PESB – Public Enterprises Selection Board.

PESB வாரிய உறுப்பினராக IAS அதிகாரியான சைலேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடல் கண்டுபிடிப்பு திட்டத்திற்கான (AIM) திட்ட இயக்குனராக Dr.சிந்தன் வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

AIM – Atal Innovation Mission.

இத்திட்டத்தை தொடங்கிய அமைப்பு : நிதி ஆயோக்.

திட்டம் தொடங்கிய ஆண்டு : 2016

திட்டத்தின் நோக்கம் : இந்தியாவில் புதுமை மற்றும் தொழில்முனைவு கலாச்சாரத்தை மேம்படுத்துவது

முதல் திட்ட இயக்குநர் ; ராமநாதன் ரமணன்.

சர்வதேச இரசாயன ஆயுதங்கள் பரவல் தடை அமைப்பின் (OPCW) வெளியுறவு கணக்காளராக இந்திய தலைமை கணக்காளரான G.C.முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.

OPCWOrganisation for the Prohibition of Chemical Weapons.

இதன் தலைமையிடம் – ஹேக், நெதர்லாந்து.

பதவிக்காலம் – 3 ஆண்டுகள்.

தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் (NADA) இயக்குனர் ஜெனரலாக Siddharth Singh Longjam நியமிக்கப்பட்டுள்ளார்.

NADA – National Anti Doping Agency.

தலைமையிடம் : புதுடெல்லி.

தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு : 24 நவம்பர் 2005.

தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் கூட்டமைவின் (NASSCOM) முதல் பெண் தலைவராக Accenture India நிறுவனத்தின் தலைவரான ரேகா M மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

NASSCOM – National Association of Software and Services Companies.

அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தின் பொது இயக்குனராக முக்மீத் ந பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Twitter India நிறுவனமானது Apurva Dalal என்பவரை பொறியியல் இயக்குநராக (Director of Engineering) நியமித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் கரோனா தடுப்பூசி திட்டத்தின் விழிப்புணர்வு தூதராக பாலிவுட் நடிகர் சோனு சூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜராவதற்கு உதவி சொலிசிட்டர் ஜெனரலாக ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக புதுச்சேரி தலைமை நீதிபதி பி.தனபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்ட தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்க மறுத்ததையடுத்து, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கே.சத்திய கோபால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக ரவி வல்லூரி பொறுப்பேற்றுள்ளார்.

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக என்.எஸ்.சந்தோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் S.மாதேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.

மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழேயுள்ள Start the Quiz பொத்தானை அழுத்தவும்.

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments