விருதுகள் (ம) கௌரவங்கள்
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவிலியன் விருதானது கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரும், லூலூ குழுமத்தின் தலைவருமான யூசுப் அலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் தாமு ஆற்றிய சேவைக்கு பாராட்டு தெரிவித்து தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருதான "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்ற விருதை அளித்துள்ளது.
அறிவியல் ஆராய்ச்சிக்கான G.D.Birla Award ஆனது IIT கராக்பூர் பேராசிரியரான சுமன் சக்கரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டிற்கான Wild Innovator Award எனப்படும் சுற்றுச்சூழல் விருதானது பெங்களூரைச் சேர்ந்த கீர்த்தி K காரந்த் என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெறும் முதல் ஆசிய மற்றும் இந்திய பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Interactive Forum on Indian Economy அமைப்பு சார்பாக 2020ம் ஆண்டுக்கான Champions of Change விருதானது தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருது வழங்கும் விழா நடைபெற்ற மாநிலம் : கோவா.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவர் : மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி.
Diplomatic Mission Global Peace வழங்கும் 2021ம் ஆண்டுக்கான நெல்சன் மண்டேலா உலக மனிதாபிமான விருது ஹைதராபாத்தைச் சேர்ந்த மென் பொறியாளரான Rumana Sinha Sehgal அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Catagory I ன் கீழ் உத்திரப் பிரதேசம் மாநிலமானது “E-Panchayat Puraskar 2021” விருதினை வென்று முதலிடம் பிடித்துள்ளது.
அசாம் மற்றும் சத்தீஸ்கர் இரண்டாமிடத்தையும், தமிழ்நாடு மற்றும் ஒடிசா மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
2021ம் ஆண்டுக்கான Kalinga Ratna Samman Award ஆந்திர மாநில ஆளுநர் பிஷ்வபூசன் ஹரிச்சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டுக்கான Devishankar Awasthi Award இந்திய உரைநடையாளர், பத்திரிகையாளர் மற்றும் விமர்சகரான அசுத்தோஷ் பரத்வாஜ்க்கு அவரது Pitra-Vadh என்ற படைப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டுக்கான கணினி அமைப்புகள் கூட்டமைப்பின் (ACM) சார்பில் வழங்கப்படும் கணினி நோபல் பரிசு என்றறியப்படும் A.M.Turing Award ஆல்பிரட் V ஆஹோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அவர் தன்னுடன் இணைத்து பணி புரியும் ஜெஃப்ரி உல்மேன் என்பவருடன் பகிர்ந்து கொண்டார்.
உலகளவில் அறிவிக்கப்பட்ட International Ranger Award பட்டியலில் ஆசியாவில் இருந்து மஹிந்தர் கிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா தேசிய பூங்காவில் பணிபுரியும் வனச் சரகர் சதீஷ்கும் இந்த விருதானது வழங்கப்பட்டது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 28 வயது பெண்ணான பிரியங்கா மோஹிதே உலகின் 10வது உயரமான மலைச் சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்துள்ளார்.
இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் அமைந்துள்ள அன்னபூர்ணா சிகரத்தின் உயரம் : 8091 மீட்டர்.
சாகச விளையாட்டிற்காக கடந்த 2017 – 18ல் மகாராஷ்டிரா அரசின் “சிவ சத்ரபதி” விருது பெற்றுள்ளார்.
இந்திய திரைப்படத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது (51வது) நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
93வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சீனாவை சேர்ந்த பெண் இயக்குனரான Chloé Zhao என்பவர் இயக்கியுள்ள Nomadland என்ற அமெரிக்க திரைப்படமானது சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகை (பிரான்சிஸ் மெக்டோர்மன்ட்) ஆகிய மூன்று பிரிவுகளில் விருதைத் தட்டிச் சென்றது.
அதேபோன்று, சர்வதேச அளவில் ஆஸ்காருக்கு அடுத்தப்படியாக கவுரவமிக்க விருதாக கருதப்படும் 74வது பிரிட்டீஷ் அகாதமி திரைப்பட விருதுகளில் (BAFTA) சிறந்த திரைப்படம், இயக்குனர் மற்றும் திரைகதையமைப்பிற்கான விருதை Nomadland திரைப்படம் பெற்றுள்ளது.
78வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான “Golden Lion Award” இத்தாலி நாட்டைச் சேர்ந்த நடிகர் ராபர்ட்டோ பென்னிக்னிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுப் பட்டியல்
சிறந்த இயக்குநர் - க்ளோயீ ஸாவோ
சிறந்த திரைப்படம் - நோமேட்லேண்ட்
சிறந்த நடிகை - ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட் (நோமேட்லேண்ட்)
சிறந்த நடிகர் - ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)
சிறந்த உறுதுணை நடிகர் - டேனியல் கலூயா (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா)
சிறந்த உறுதுணை நடிகை - யூ ஜங் யூன் (மினாரி)
சிறந்த சர்வதேசத் திரைப்படம் - அனதர் ரவுண்ட் (டென்மார்க்)
சிறந்த தழுவல் திரைக்கதை - தி ஃபாதர்
சிறந்த திரைக்கதை - ப்ராமிஸிங் யங் வுமன்
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஸோல்
சிறந்த பாடல் - ஃபைட் ஃபார் யூ (ஜூடாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்ஸைய்யா)
சிறந்த இசை - ஸோல்
சிறந்த படத்தொகுப்பு - சவுண்ட் ஆஃப் மெடல்
சிறந்த ஒளிப்பதிவு - மேங்க்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - மேங்க்
சிறந்த கிராஃபிக்ஸ் - டெனட்
சிறந்த ஆவணப் படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்
சிறந்த ஆவணக் குறும்படம் - கோலெட்
சிறந்த அனிமேஷன் குறும்படம் - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ
சிறந்த குறும்படம் - டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்
சிறந்த ஒலி - சவுண்ட் ஆஃப் மெடல்
சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம் - மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்
சிறந்த ஆடை வடிவமைப்பு - மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்.
காணொளியை காண கீழேயுள்ள Play பொத்தானை அழுத்தவும்.

0 Comments