மார்ச் 2021 நடப்பு நிகழ்வுகள் – தமிழக நிகழ்வுகள்

தமிழக நிகழ்வுகள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC March 2021 Tamilnadu Current Affairs in Tamil

சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்பட்ட ஒரு வகை பாக்டீரியாவுக்கு தமிழக விஞ்ஞானி சையது அஜ்மல் கானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு வகை பாக்டீரியாவை தமிழகத்தின் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியராக இருக்கும் சையத் அஜ்மல் கான் பெயரில் மெத்திலோ பாக்டீரியம் அஜ்மலி என்று அழைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலையில் சின்னவட்டானூா் கிராமத்தில் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா் கால எழுத்துடை நடுகற்கள், கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

2025-ம் ஆண்டிற்குள் காற்று மாசுப்பாட்டை 70 சதவீதம் குறைக்க "சுத்தமான காற்று திட்டம்" ரூ.451 கோடியில் நிறைவேற்ற மதுரை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஆசியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 4 “Mitraclipமருத்துவச் சிகிச்சையை செய்து சென்னை அப்பெல்லோ மருத்துவமனை இதயநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் சாதனை படைத்துள்ளார்.

நாட்டிலேயே கல்விக்கடன் அதிகம் பெற்ற மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

மார்ச் 07 அன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 9வது இடத்தைப் பிடித்துள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதில் தமிழகம் 15வது இடத்திலுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வில் சேதமடைந்த நிலையில் சுடுமண் மூடி குமிழ் கண்டறியப்பட்டுள்ளது.

கோவையில் பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வரும் பேருந்து நடத்துனரான மாரிமுத்து யோகநாதனை மன்கிபாத் நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

தமிழக காவல்துறையில் இருந்து முதல் முறையாக அகில இந்திய ஆணழகன் போட்டிக்கு புருஷோத்தமன் தேர்வாகியுள்ளார்.

தமிழக அளவிலான, 46-வது துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நடிகர் அஜித் குமார் தங்கம் வென்றுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் குமார் மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார்.

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments