மார்ச் 2021 நடப்பு நிகழ்வுகள் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC March 2021 Science and Technology Affairs in Tamil

"ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு" முறையை எளிதாக்கும் வகையில் அருகிலுள்ள நியாய விலைக் கடையை அடையாளம் காண்பதற்காக இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள செயலி - Mera Ration

மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக தாவர்சிங் கெலாட் அறிமுகப்படுத்தியுள்ள செயலி – Sugmya Bharat

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கியுள்ள இந்தியாவிற்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்படத் செயலி சந்தை – Mobile Seva Appstore

கடலில் இருந்து பெறப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு உலகின் முதல் கணினியை HP நிறுவனம் உருவாக்கியுள்ளது.

உலகின் மிக சக்தி வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஃபுகாகு (Fugaku) ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அதிவேக செயல்திறனின் காரணமாக இதன் இலச்சினையாக ஜப்பானில் உள்ள பியூஜி எரிமலை தேர்வு செய்யப்பட்டது.

பியூஜி எரிமலையின் மற்றொரு பெயர்தான் ஃபுகாகு.

இதனை உருவாக்கிய நிறுவனம் - RIKEN. .

இதன் மைக்ரோபிராசசர் – Fujitsu A64FX

இதனை உருவாக்கும் பணியானது 2014ல் தொடங்கப்பட்டு 2020ல் இயங்க வைக்கப்பட்டது.

பிரபஞ்சத்தின் தொலைதூரத்திலிருந்து வரும் ஒளியின் மூலத்தைப் பதிவு செய்வதற்காக குறைந்த செலவில் “ஸ்பெக்ட்ரோகிராப்” கருவியை இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

ஆர்டிக் கண்டத்தில் நிகழும் சுற்றுச்சூழல் மாற்றத்தை கண்காணிக்க ரஷ்ய விண்வெளித் துறை ஆர்க்டிகா - எம் என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது.

கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் ஏவுதளத்தில் இருந்து, சோயூஸ் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது.

ரஷ்ய விண்வெளி நிறுவனம் - ரோஸ்கோஸ்மோஸ்

நிலவிற்கு மனிதர்களை அழைத்து செல்வதற்காக மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு SpaceX நிறுவனத்தின் StarshipX 10 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து 2023 –ம் ஆண்டு மனிதர்களை நிலவிற்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு எலன் மஸ்க் அழைப்பு விடுத்துள்ளார்.

நிலவின் தென் துருவத்தினை ஆய்வு செய்வதற்காக கடந்த 2019 – ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திராயன் 2 செயற்கைக்கோள் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் வரை செயல்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திராயன் 2 படம் பிடித்து அனுப்பிய பள்ளத்திற்கு “சாராபாய் பள்ளம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

உயர் வளிமண்டல பரப்பில் நிலவும் காற்று மற்றும் பிளாஸ்மா அயனிகள் தொடர்பான ஆய்வுக்காக இஸ்ரோ சார்பில் “சவுண்டிங் ராக்கெட்” (RH-560) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இது உட்பட இஸ்ரோவிடம் RH-200,  RH-300 என மூன்று விதமான சவுண்டிங் ராக்கெட்டுகள் உள்ளன.

AsterX என்ற பெயரில் விண்வெளியில் தனது முதலாவது ராணுவ ஒத்திகையை பிரான்ஸ் நடத்தியுள்ளது.

"ஷாகீன் 1 ” என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இலக்கு தூரம் : 900 கி.மீ.

நிஷார் என்ற பெயரிலான புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (SAR) தயாரிக்கும் பணியில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து ஆய்வை மேற்கொள்கின்றன.

NISAR : NASA – ISRO SAR.

NASA : National Aeronautics & Space Administration.

ISRO : Indian Space Research Organisation.

SAR : Synthetic Aperture Radar.

Energy Swaraj Yatra Bus என்ற பெயரில் சூரிய சக்தியில் இயங்கும் பேருந்தை மும்பை ஐ.ஐ.டி பேராசிரியர் சேதன் சிங் சோலாங்கி உருவாக்கியுள்ளார்.

5 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் முதல் தலைமுறை லித்தியம் அயன் பேட்டரியை இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டோர்டாட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதன் நிறுவனர் : டோரன் மயர்ஸ்டார்ஃப்.

இந்திய பெருங்கடலில் போர்க்கப்பல், சரக்கு கப்பல் ஆகியவற்றின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணித்து தகவல் தெரிவிக்கவும், இந்திய பெருங்கடல் எல்லையை கண்காணிக்கவும்  இளம் DRDO விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ‘சிந்த் நேத்ரா’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

இஸ்ரோ PSLV - C51 ராக்கெட் மூலம் 19 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

 

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments