மார்ச் 2021 நடப்பு நிகழ்வுகள் – இந்திய நிகழ்வுகள்

இந்திய நிகழ்வுகள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC March 2021 National Current Affairs in Tamil

இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் தேசிய டால்ஃபின் ஆராய்ச்சி மையம் பீகாரின் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் கங்கை நதிக்கரையில் அமைக்கப்படவுள்ளது.

அறிவியல் பெயர் : பிளாட்டனிஸ்டா கஞ்செட்டிகா

இந்தியாவின் முதல் காடுகளின் மூலம் சுகமாக்கும் மையம் உத்தரகண்ட் மாநிலம் ராணிக்கேட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் Transgender Community Desk தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி காவல் நிலையத்தில் சைபராபாத் காவல்துறையினர் இதனை அமைத்துள்ளனர்.

கல்லூரி தேசிய மாணவர் படையில் சேர கேரள உயர் நீதிமன்ற அனுமதி பெற்ற திருநங்கையின் பெயர் – ஹனீபா (தற்போது ஹீனா)

திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் தீர்பளித்த ஆண்டு - 2014

தமிழ்நாட்டில் திருநங்கை என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர் - நர்த்தகி நடராஜன் ‌

ஏப்ரல் 15 : சர்வதேச திருநங்கைகள் தினம்

இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு சார்பில் நகைக்கடைகளை திறக்க கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் முதல் முறையாகப் பொம்மை உற்பத்திக்கெனப் பிரத்தியேக பொம்மை தயாரிப்பு மண்டலம் கர்நாடக மாநில கொப்பல் மாவட்டத்தில் உள்ள பனாபூர் கிராமத்தில் தொடங்கப்படவுள்ளது.

இந்தியாவின் முதல் உலகத்தரம் வாய்ந்த ரோபோ உற்பத்தி பிரிவு (Bot Valley) உத்திரப் பிரதேசம் நொய்டாவில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பாலின நிதிநிலை அறிக்கையை அறிமுகப்படுத்திய மாநிலம் ஆந்திரப் பிரதேசம்.

இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த இயந்திர கருவிகள் பூங்கா கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகில் உள்ள வசந்த்நரசபுராவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது "மைய குளிரூட்டு முறைமையை" கொண்ட ரயில் நிலையம் எனும் பெருமையை பெங்களூருவில் உள்ள M.விஸ்வேஸ்வராயா இரயில் நிலையம் பெற்றுள்ளது.

இந்தியாவின் முதலாவது "உலக திறன் மையம்" 1342.2 கோடி ரூபாய் செலவில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மான்செஸ்வர் என்னும் இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது மிகப்பெரிய நதிநீர் இணைப்பு திட்டமான “கென் – பெட்வா” திட்டத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் செயல்படுத்தவுள்ளது.

மத்திய பிரதேசம் – கென் ஆறு.

உத்திரப்பிரதேசம் – பெட்வா ஆறு.

இந்தியாவின் முதலாவது Indo - Korean Friendship Park டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் நெட்வொர்கை ஆந்திரப் பிரதேச மாநிலமானது உருவாக்கியுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக எத்தனால் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு கொள்கை 2021-யை பீகார் மாநில அரசு அமல்படுத்தவுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக இரண்டு பசுமை திறன் நகரங்களைக் (ராஜ்கிர் மற்றும் போத்கயா) கொண்டுள்ள மாநிலம் எனும் பெருமையை பீகார் பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்ற மாநிலங்களில் உத்திரப் பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.

அம்மாநிலத்தின் சித்தார்த்தா நகர் மற்றும் ஃபிரோஷாபாத் மாவட்டங்களை "டிஜிட்டல் மாவட்டங்கள்" என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிய இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம் என்ற பெருமையை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பெற்றுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மிதவை சூரிய மின் நிலையம் 100 மெகாவாட் மின்சார உற்பத்தி திறனுடன் தெலுங்கானாவின் பெடாப்பள்ளி மாவட்டத்தில் உள்ள  ராமகுண்டம் என்னும் இடத்தில் கட்டப்பட்டு வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய (3.6மீட்டர்) தரைநிலை ஆப்டிகல் தொலைநோக்கியானது உத்தரகண்ட் மாநில நைனிடால் பகுதியில் உள்ள தேவஸ்தல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசானது கிராம் உஜாலா திட்டத்தின் மூலம் கிராமப்புற பகுதிகளில் வெறும் ரூ.10க்கு உலகின் விலை மலிவான LED பல்புகளை வழங்குகிறது.

நாட்டிலுள்ள துறைமுகங்களில் மேம்பாட்டிற்காக வரும் 2035ம் ஆண்டிற்குள் சுமார் 6 இலட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளின் கீழ் பெண்ணின் கருவை கலைக்க அனுமதிக்கும் உச்ச வரம்பை 20 லிருந்து 24 வாரங்களாக உயர்ந்த அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சுவாமி சித்பவானந்தா வர்ணணையில் எழுதப்பட்ட பகவத் கீதையின் தமிழ் நூலின் மின்னணு பதிப்பை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இந்திய ரயில்வேயின் அனைத்து புகார்களுக்கும் ஒரே தொலைபேசி எண் 139 அறிவித்துள்ளது.

சுமார் 12 மொழிகளில் இந்த சேவையானது வழங்கப்படவுள்ளது ‌

இந்த ஒருங்கிணைந்த தொலைபேசி உதவி எண்ணை பிரபலப்படுத்த, 'ஒரே ரயில், ஒரே தொலைபேசி உதவி எண் 139' என்ற சமூக ஊடக பிரசாரத்தையும் ரயில்வே அமைச்சகம் துவக்கியுள்ளது.

ரயிலில் தீ விபத்தை தடுக்கும் விதமாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பயணிகள் மொபைல் சார்ஜ் செய்ய அனுமதி இல்லை என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் தொலைக்காட்சி சேனல்களான லோக்சபா TV மற்றும் ராஜ்யசபா TV ஆகிய இரண்டையும் இணைத்து Sansad TV தொடங்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டில் இந்த இரண்டு தொலைக்காட்சிகளையும் இணைத்து ஒரே தொலைக்காட்சியாக மாற்றுவதற்கு பரிந்துரைத்தக் குழு - சூரிய பிரகாஷ்

Sansad TV-யின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் - ரவி கபூர்

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனமான IIM ஜம்முவில், ஆனந்தம்  மகிழ்ச்சிக்கான மையத்தை மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் ‘மகாரத்னா’ தகுதி பெற்ற பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் மின்னணு முறையிலான ஒப்பந்தப்புள்ளிக் கோரும் “PRANIT” என்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில், பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் சிறப்பு மையம் IIT மும்பையில் அமையவுள்ளது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், “போஷன் பக்வாடா” என்ற விழிப்புணர்வு பேரணியானது மார்ச் 16 முதல் மார்ச் 20 வரை கடைப்பிடிக்கப்பட்டது.

“போஷன் அபியான்” என்ற திட்டமானது பிரதமர் மோடி அவர்களால் கடந்த மார்ச் 08, 2018 அன்று தொடங்கப்பட்டது.

ஷியாம் பிரசாத் முகர்ஜி மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் IIT காரக்பூரில் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தண்டி யாத்திரையின் 91வது ஆண்டு தினத்தின் போது 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி 75 வாரங்களுக்கு நடத்தப்படும் விடுதலைப் பெருவிழா-வை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆஸ்ரமத்தில் 21 நாட்கள் நீண்ட "தண்டி யாத்திரை"-யை தொடங்கி வைத்தார்.

காந்தியின் தண்டி யாத்திரை : மார்ச் 12, 1930

பெற்றோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் #WheelsOfLove திட்டத்தை Tata Motors நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக பொருளாதார மன்றம் (WEF) தொகுத்த இளம் உலக தலைவர்களுக்கான பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே இணைந்துள்ளார்.

ஸ்டார்ட் அப் இந்தியா நிதி திரட்டுதல் திட்டத்தினை கண்காணிக்க மற்றும் அமல்படுத்த H.K.மிட்டல் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி திறனை வளர்ப்பதற்காக யோகாவை ஒரு கருவியாகப் பயன்படுத்துதலைக் குறித்து ஆராய்வதற்காக பல்துறை சார்ந்த வல்லுநர் குழுவை H.R.நாகேந்திரா என்பவரின் தலைமையில் மத்திய ஆயுஸ் அமைச்சகம் அமைத்துள்ளது.

உயர்தொழில்நுட்ப பகுதியில் உற்பத்தி மேற்கொள்வதற்கான அரசாங்க குழுவின் தலைவராக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் (API) 76வது ஆண்டு மாநாட்டில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாடினார்.

Theme : Engaging Minds : Empowering Medicine.

API Association of Physicians of India.

2-வது Global Bio – India 2021 நிகழ்ச்சியானது இணைய வழியில் நடைபெற்றது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார்.

Theme : Transforming Lives.

2-வது கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பிரதமர் குறிப்பிட்டவற்றில் முக்கிய அம்சங்கள் மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விபரம் பின்வருமாறு:

2030-ம் ஆண்டிற்குள் இந்தியா 23 நீர் வழிகளை செயல்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

2035-ம் ஆண்டிற்குள் துறைமுகங்கள் மேம்பாட்டுக்காக சுமார் 6 இலட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா தனது கடலோரப் பகுதியில் 189 கலங்கரை விளக்கங்களைக் கொண்டுள்ளது எனவும், 78 கலங்கரை விளக்கங்களுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்: டென்மார்க் போக்குவரத்து துறை அமைச்சர் திரு பென்னி எங்லேபிரெக்ட், குஜராத் மற்றும் ஆந்திர முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், திரு மன்சுக் மாண்டவியா.

 

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments