மார்ச் 2021 நடப்பு நிகழ்வுகள் – மறைந்த பிரபலங்கள்

மறைந்த பிரபலங்கள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC March 2021 Miscellaneous  Current Affairs in Tamil

தமிழக பசுமை இயக்கத் தலைவரும், மருத்துவருமான ஜீவா என்கிற வெ.ஜீவானந்தம் (02/03/2021) காலமானார்.

சிலப்பதிகாரத்தை பல்வேறு கோணங்களில் இருந்து ஆராய்ச்சி செய்த பெருமைக்குரியவரும், “சிலம்பு தென்றல்” எனப் போற்றப்படுபவருமான புலவர் நா.தியாகராசனார் காலமானார்.

தினமலர் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான இரா.கிருஷ்ணமூர்த்தி (04/03/2021) காலமானார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருந்த எஸ்.பி.ஜனநாதன் காலமானார். இவர் இயக்கிய முதல் படமான இயற்கை தேசிய விருது பெற்று அவருக்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் முதுபெரும் கதகளி நடனக் கலைஞரான சேமஞ்சேரி குஞ்ஞிராமன் காலமானார்.

கர்நாடகாவின் கலப்பின அரிசியின் தந்தை என அழைக்கப்படும் பிரபல விஞ்ஞானியான எம்.மகாதேவப்பா (06/03/2021) காலமானார். இவர் மத்திய அரசின் பத்ம பூஷண் விருது பெற்றவர் என்பது குறிபிடத்தக்கது..

 

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments