மார்ச் 2021 நடப்பு நிகழ்வுகள் – முக்கிய நியமனங்கள்

முக்கிய நியமனங்கள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC March 2021 Important Appointments List in Tamil

இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவராக சஞ்சீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையத்தின் (UIDAI) செயல் அலுவலராக சவுரப் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய உணவு கழகத்தின் மேலாண் இயக்குநராக அதிஷ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக ஜெய்தீப் பட்நகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தலைமை புள்ளியியலாளராக G.P.சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக பதவி வகிக்கும் கே.விஜயராகவன் அவர்களின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கான பி.எஸ்.ராஜூ பொறுப்பேற்கவுள்ளார்.

தேசிய பாதுகாப்பு படையின் (NDA) துணை கமாண்டண்ட் மற்றும் தலைமை பயிற்றுநராக சஞ்சய் வத்சயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

National Security Guard ன் இயக்குநர் ஜெனரலாக M.A.கணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநர் ஜெனரலாக குல்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அமைப்பான காசநோய் தடுப்பு கூட்டு வாரியத்தின் (STOP TB Partnership Board) தலைவராக ஹர்ஷ்வர்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலக முதன்மை ஆலோசகராகப் பணியாற்றி வந்த பி.கே.சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் அலுவலக கூடுதல் செயலராக அமுதா IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

SAIL நிறுவனத்தின் முதல் பெண் தலைவரான சோமா மண்டல் தற்போது SCOPE நிறுவனத்தின் புதிய தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

SAIL - Steel Authority of India Limited

SCOPE - Standing Conference of Public Enterprises

ஆசியா - பசுபிக் ஊரக வேளாண்மை கடன் சங்கத்தின் தலைவராக இந்தியாவின் நபார்டு அமைப்பின் தலைவரான G.R.சிந்தாலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில விவசாயத் துறையின் தூதராக நடிகர் தர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு உருது அகாடமியின் துணைத்தலைவராக டாக்டர் முகமது நயீமுர் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகள் நல விழிப்புணர்வு தூதராக எம்.எஸ்.ரித்திகா மற்றும் கே.எஸ்.வைணவி இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய அரசின் பிரதிநிதியாக சென்னை IIT இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல் இயக்குநராக மங்கு ஹனுமந்த் ராவை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ள வி.எம்.கடோச், மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துமனையின் தலைவராக நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு தமிழ் சங்கத் தலைவராக கோ.தாமோதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச சூரிய கூட்டமைப்பின் (ISA) புதிய இயக்குனர் ஜெனரலாக அஜய் மாத்தூர் பொறுப்பேற்றுள்ளார்.

ISA – International Solar Alliance.

ISA தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 2015.

ISA தோற்றுவிக்கப்பட்ட இடம் – பாரிஸ், இத்தாலி

ISA தலைமையகம் அமைந்துள்ள இடம் – குருகிராம், ஹரியானா.

ISA உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை – 121

2015 முதல் இதுவரை இயக்குனர் ஜெனரலாக பணியாற்றியவர் – உபேந்திரா திரிபாதி.

 

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments