குறியீடு மற்றும் தரநிலை
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
Economic Freedom Index 2021 பட்டியலில் இந்தியா 184 நாடுகளில் 121வது இடத்தை பிடித்துள்ளது.
முதலிடம் - சிங்கப்பூர்
இரண்டாமிடம் - நியூசிலாந்து
மூன்றாமிடம் - ஆஸ்திரேலியா
வெளியிட்ட அமைப்பு : Heritage Foundation, America.
Food Waste Index Report 2021 - ன் படி உலகளாவிய அளவில் கடந்த 2019ம் ஆண்டில் 9.31 கோடி டன் உணவுகள் வீணடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஆய்வறிக்கையானது, இந்தியாவில் தனிநபர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை விரயம் செய்வதாக குறிப்பிட்டுள்ளது.
வெளியிட்ட அமைப்பு : UNEP மற்றும் WRAP
World Happiness Report 2021-ன் படி, உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 149 நாடுகளில் 139வது இடத்தை பிடித்துள்ளது.
ஐ.நா சபையின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக ஃபின்லாந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் டென்மார்க்கும் மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்தும் உள்ளன.
நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
ஐரோப்பிய கண்டத்தில் இல்லாமல் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ள ஒரே ஒரு நாடாக நியூசிலாந்து உள்ளது.
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தில் ஆஃப்கானிஸ்தான் உள்ளது.
International Intellectual Property Index 2021 - ன் படி சர்வதேச அறிவுசார் சொத்துரிமை குறியீட்டு பட்டியலில் இந்தியா 40வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
World Air Quality Report 2020 - ன் படி உலகிலேயே மிகவும் காற்று மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
உலகிலேயே மிகவும் காற்று மாசடைந்த தலைநகரங்கள் பட்டியல் பின்வருமாறு :
முதலிடம் - டெல்லி (இந்தியா)
இரண்டாமிடம் - டாக்கா (வங்கதேசம்)
மூன்றாமிடம் - உலான்பாதர் (மங்கோலியா)
உலகிலேயே மிகவும் காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியல் பின்வருமாறு :
முதலிடம் - கோடன் (சீனா)
இரண்டாமிடம் - காசியாபாத் (உத்திரப்பிரதேசம்)
மூன்றாமிடம் - புலந்தர்ஷா (உத்திரப்பிரதேசம்)
வெளியிட்ட அமைப்பு : IQAir, Swiss Organisation.
2020 ஆம் ஆண்டு காற்றாலைத் தொழிலுக்கு வரலாற்றில் மிகச் சிறந்த ஆண்டாக இருந்தது GWEC என்ற அமைப்பு அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் 93 ஜிகாவாட் சாதனையை காற்றாலை பதிவு செய்துள்ளது. இருப்பினும், GWEC இன் அறிக்கை 2050 க்குள் கார்பன் நடுநிலைமையை அடைய தற்போதைய நிறுவப்பட்ட காற்றாலை வீதம் போதுமானதாக இருக்காது என்பதைக் காட்டுகிறது.
உலக வெப்பமயமாதல் தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைக்க ஒவ்வொரு ஆண்டும் உலகம் குறைந்தபட்சம் 180 ஜிகாவாட் புதிய காற்றாலை ஆற்றலை நிறுவ வேண்டும்.
இதேபோல், 2050 க்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய இது ஆண்டுதோறும் 280GW ஆக திறனை அதிகரிக்க வேண்டும்.
Global Home Price Index எனப்படும் உலகளாவிய வீட்டு விலைக் குறியீட்டு பட்டியலில் இந்தியா 56வது இடத்தில் உள்ளது. துருக்கி இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
வெளியிட்ட அமைப்பு : Knight Frank
உலகளவிலான மிக வலுவான இராணுவப் பட்டியலில் சீனா 81 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 74 புள்ளிகளுடன் அமெரிக்கா இரண்டாமிடத்திலும், 69 புள்ளிகளுடன் ரஷ்யா மூன்றாமிடத்திலும் உள்ளன. இந்தியா இப்பட்டியலில் 61 புள்ளிகளுடன் உலகின் வலிமையான நான்காவது ராணுவமாக இடம்பெற்றுள்ளது.
வெளியிட்ட அமைப்பு : Military Direct
உலகிலேயே இராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2-வது இடத்தில் உள்ளது.
சீனா தனது இராணுவ பட்ஜெட்டை ரூ.15 இலட்சம் கோடியாக உயர்த்தி உள்ளது.
இந்த பட்ஜெட்டானது அமெரிக்க ராணுவ பட்ஜெட்டில் 4ல் ஒரு பங்குக்கு நிகராகும்.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகமாகும்.
வளர்ச்சி மிகு நாடுகளின் பட்டியலில் இந்தியா 8% வளர்ச்சியுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்கா, சீனா, ஜெர்மனி முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
வெளியிட்ட அமைப்பு : PwC survey (PricewaterhouseCoopers)
ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்ட ஐ.நா வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய மின் வணிக குறியீடு 2020 (UNCTAD B2C E-Commerce Index 2020) பட்டியலில் இந்தியா 71வது இடத்தைப் பிடித்துள்ளது. இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு சுவிட்சர்லாந்து.
UNCTAD - United Nations Conference on Trade and Development
உலகின் மிகவும் அபாயகரமான சாலைகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியா இந்தப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகின் மிகவும் பாதுகாப்பான சாலைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது.
குடிநீர் விலை அதிகமாகக் காணப்படும் நகரங்களின் பட்டியலில் நார்வேயின் ஓஸ்லோ முதலிடத்தில் உள்ளது.
மலிவான விலையில் குடிநீர் கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் லெபனானின் பெய்ரூட் முதலிடத்தில் உள்ளது.
கர்நாடக தலைநகரான பெங்களூர் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவிற்கு அதிகளவில் எண்ணெய் வழங்குவதில் ஈராக் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாமிடத்தில் இருந்த சவூதி அரேபியாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா இரண்டாமிடம் பிடித்துள்ளது.
இந்தியாவிலேயே சூரிய மின் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்கள் குறித்த தகவல்கள் பின்வருமாறு :
முதலிடம் - கர்நாடகா (7346 மெகாவாட்)
இரண்டாமிடம் - தமிழ்நாடு (4403 மெகாவாட்)
மூன்றாமிடம் - குஜராத் (4068 மெகாவாட்)
நாட்டிலேயே கல்விக்கடன் அதிகம் பெற்ற மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்திற்கு அடுத்து கல்வியில் அதிக அளவில் கடன் பெற்ற மாநிலமாக கேரளா உள்ளது.
நாட்டிலேயே கல்விக்கடன் குறைவாக பெற்ற பீகார் மாநிலமானது வாராக் கடன் விகிதத்தில் நாட்டிலேயே முதல் மாநிலமாக உள்ளது.
மார்ச் 07 அன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ராஜஸ்தான் முதலிடத்தையும், குஜராத் இரண்டாமிடத்தையும், மகாராஷ்டிரா மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது.
தமிழகம் இந்தப் பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தி ஊராக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதில் சத்தீஸ்கர் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகம் இந்தப் பட்டியலில் 15வது இடத்திலுள்ளது.
15 ஆண்டுகளுக்கு மேல் பழைய வாகனங்கள் அதிகம் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
வெளியிட்ட அமைப்பு : மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம்..
இந்திய நகரங்கள் தொடர்பான வாழ்க்கை வசதிக் குறியீடு (Ease of Living Index), நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீடு (Municipal Performance Index) ஆகியவற்றை இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நிர்வாக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வாழ்க்கை வசதிக் குறியீட்டின் அடிப்படையில் நகரங்கள் அடிப்படையில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியல் :
பெங்களூரு (66.7 மதிப்பெண்) முதலிடத்தையும்,
புனே (66.27) இரண்டாவது இடத்தையும்,
சென்னை (62.61) நான்காவது இடத்தையும்,
மதுரை (55.78) 22-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
வாழ்க்கை வசதிக் குறியீட்டின் அடிப்படையில் நகரங்கள் அடிப்படையில் 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியல்:
சிம்லா (60.90 மதிப்பெண்) முதலிடத்தையும்,
புவனேஸ்வர் (59.85) இரண்டாமிடத்தையும்,
சேலம் (56.40) ஐந்தாவது இடத்தையும்,
வேலூர் (56.38) ஆறாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீடு அடிப்படையில், 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நகராட்சிகளில்
இந்தூர் (66.08 மதிப்பெண்) முதலிடத்தையும்,
சூரத் (60.82) இரண்டாவது இடத்தையும்,
கிரேட்டர் மும்பை (54.36) எட்டாவது இடத்தையும்,
கோவை (50.52) 12-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
இப்பட்டியலில் சென்னை 18-வது இடத்தையும், மதுரை 22-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீடு பட்டியலில் 10 லட்சத்துக்குக் குறைவான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளில்,
புது டெல்லி (52.92 மதிப்பெண்) முதலிடத்தையும்
திருப்பதி (51.69) இரண்டாவது இடத்தையும்,
சேலம் (49.04) ஐந்தாவது இடத்தையும்,
திருப்பூர் (48.92) ஆறாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
2021ம் ஆண்டில் உலகளவில் அதிக செல்வம் ஈட்டிய நபர்களில் ஜெப் பெசோஸ் உள்ளிட்டோரை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் முதல் தலைமுறை தொழிலதிபரான கவுதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
Hurun India Wealth Report 2021 – ன் படி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்கள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
1) Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்,
2) Amazon நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ்
3) LVMH தலைவர் (ம) தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட்
4) முன்னாள் Microsoft நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பில்கேட்ஸ்
5) Facebook தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க்.
2020ம் ஆண்டு உலக செல்வந்தர்கள் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான செல்வந்தர்களை கொண்டு முன்னிலை வகிக்கும் நாடு சீனா.
இந்தியாவில் அதிக அளவில் பணக்காரர்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா (56,000பேர்) முதலிடம் வகிக்கிறது. தொடர்ந்து உத்திரப்பிரதேசம் (36,000 பேர்) இரண்டாமிடத்தையும், தமிழ்நாடு (35,000 பேர்) மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
வெளியிட்ட அமைப்பு : Hurun India Wealth Report 2020

0 Comments