மார்ச் 2021 நடப்பு நிகழ்வுகள் – வங்கி மற்றும் பொருளாதார நிகழ்வுகள்

வங்கி மற்றும் பொருளாதார நிகழ்வுகள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

tnpsc march 2021 banking and economics current affairs in tamil

பெண் தொழில் முனைவோருக்கு உதவுவதற்காக Startup Unnattiஎன்ற திட்டத்தை HDFC வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

Asiamoney Best Bank Awards 2021-ல் சிறு, குறு நிறுவனங்களுக்கான இந்தியாவின் சிறந்த வங்கியாக (India’s Best Bank for SMEs) HDFC வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ESAF சிறு நிதி வங்கிக்கு Great Place to Workஎன்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Wear ‘N’ Pay எனப்படும் தொடர்பு இல்லாமல் பணம் செலுத்தும் கைக்கடிகாரத்தை Axis Bank அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முதல் தொடர்பு இல்லாமல் பணம் செலுத்தும் கைக்கடிகாரத்தை (Contactless Payment Watch) SBI வங்கியானது Titan நிறுவனத்துடன் இணைந்து Titan Pay என்ற பெயரில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வங்கிகளின் செயலிகளை ஆய்வு செய்ய ஐந்து நபர்கள் அடங்கிய வெளி ஆலோசனை நிலைக்குழுவை (Standing External Advisory Committee (SEAC))  முன்னாள் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஷியாமளா கோபிநாத் தலைமையில் ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பில் ரஷ்யாவினை பின்னுக்குத் தள்ளி இந்தியா நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சீனா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.5 சதவீதமாகவே வைத்திருக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.

 

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments