குறியீடு மற்றும் தரநிலை
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
Democracy Index 2020 பட்டியலில் இந்தியா 53–வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள நாடுகள் முறையே நார்வே, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் பெற்றுள்ளன.
வெளியிட்ட அமைப்பு : Economist Intelligence Unit.
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அதிக பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசியை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
இணைய குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது
நகர்புறங்களில், திறந்தவெளி மலம் கழிக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.
கிராம புறங்களில், திறந்தவெளி மலம் கழிக்கும் மாநிலங்களில் இந்திய அளவில் தமிழகம் 8வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து 4வது ஆண்டாக, ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சையில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதலிடத்தைப் பிடித்துள்ளது..

0 Comments