பிப்ரவரி 2021 நடப்பு நிகழ்வுகள் – ஐ.நா நிகழ்வுகள்

ஐ.நா நிகழ்வுகள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC February 2021 Current Affairs United Nations News in Tamil

ஐ.நா மூலதன மேம்பாட்டு நிதி ஆணையத்தின் நிர்வாக செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.நாவின் அடுத்த பொது செயலாளர் பதவிக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகாங்க்‌ஷா போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் நியூயார்க் பிரிவு தலைவராகவும், அந்த அமைப்பின் துணை பொதுச் செயலாளராகவும் இந்திய பொருளாதார நிபுணர் லிகியா நோரோன்ஹாவை ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் நியமித்துள்ளார்.

ஐ.நா அமைப்புக்கான புதிய அமெரிக்க தூதராக லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பானது 2020 ஆம் ஆண்டை சுற்றுலா துறையின் மிக மோசமான ஆண்டாக அறிவித்துள்ளது.

சீனா 2030க்குள் வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என ஐ.நா நிர்ணயித்த காலக்கெடுவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வறுமையை ஒழித்து விட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஐக்கிய நாடுகளவையின் ஒருங்கிணைப்பாளராக இந்தியாவை சேர்ந்த சித்தார்த் சட்டர்ஜி பொறுப்பேற்றுள்ளார்.

ஐ.நா சர்வதேச பார்வையாளர்களிடம் அணுசக்தி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை இனி தரப்போவதில்லை என ஈரான் அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் : ரஃபேல் குரேஸி.

 

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments