இந்திய பொருளாதாரம்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
நாட்டிலேயே முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை அறிமுகம் செய்துள்ள முதல் மாநிலம் என்றப் பெருமையை உத்திரப் பிரதேசம் பெற்றுள்ளது.
அம்மாநில நிதியமைச்சர் : சுரேஷ் கன்னா
உத்திரப் பிரதேசம் மாநிலத்தைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில அசோக் கெலாட் தலைமையிலான அரசும் அம்மாநிலத்தின் முதல் காகிதமில்லா பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 01/02/2021 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையில் அவர் மேற்கோள் காட்டிய திருக்குறள்கள்:
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல அரசு” [அதிகாரம் : இறைமாட்சி; கு.எ : 385]
“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து” [அதிகாரம் : நாடு; கு.எ : 738]
ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
MITRA - Mega Investment Textile Parks.
2021 - 2022ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பானது 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
2021 - 2022ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பருத்தியின் மீதான இறக்குமதி வரியானது பூஜ்ஜிய சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
2021 - 2022ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியானது 12.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
2021 - 2022ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மதுபானம், பெட்ரோல், டீசல் (100%), பாமாயில் (17.5%), தங்கம் மற்றும் வெள்ளி (2.5%) மீது அக்ரி இன்பரா செஸ் என்ற புதிய விதியானது விதிக்கப்பட்டுள்ளது.
AIDC - Agriculture Infrastructure and Development Cess.
2021 - 2022ம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2021 - 22ம் ஆண்டில் 10.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2021 - 22ம் ஆண்டில் 10.5 சதவீதமாக இருக்கும் என ICRA கணித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2021 - 22ம் ஆண்டில் 11.2 சதவீதமாக இருக்கும் என HSBC கணித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2021 - 22ம் ஆண்டில் 13.7 சதவீத வளர்ச்சியை எட்டும் என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு எக்னாமிக்ஸ் அமைப்பு 2021ம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.2 சதவிகிதமாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளை சீரமைக்க N.S.விஸ்வநாதன் தலைமையிலான குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

0 Comments