பிப்ரவரி 2021 நடப்பு நிகழ்வுகள் – முக்கிய நியமனங்கள்

முக்கிய நியமனங்கள்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC_February_2021_Current Affairs Important Appointments in Tamil

தமிழகத்திற்கான தேர்தல் செலவீன பார்வையாளர்களாக மதுமகாஜன், பால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கான தலைமை தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளராக அலோக் வரதன் நியமனம்; காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக இரண்டு இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக டி.ஆனந்த் IAS, அஜய் யாதவ் IAS ஆகியோரை நியமித்து தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மாநில தகவல் ஆணையர்களாக பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் மாநில தகவல் உரிமை ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 2005.

மாநில தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை 2-ல் இருந்து 6-ஆக உயர்த்தப்பட்ட ஆண்டு - 2008.

தற்போதைய மாநில தலைமை தகவல் ஆணையர் – ஆர்.ராஜகோபால்.

தகவல் ஆணையர்கள் : எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப் குமார், எஸ்.முத்துராஜ்.

தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல் இயக்குநராக மங்கு ஹனுமந்த் ராவை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ள வி.எம்.கடோச், மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துமனையின் தலைவராக நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பெட்ரோலியம் கார்பரேசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ராஜீவ் அயிலவாடி பொறுப்பேற்றுள்ளார்.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக R.K.செல்வமணி மூன்றாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ம.வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

6வது தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவராக திரு. விஜய் சம்ப்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ராணுவ துணைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சண்டி பிரசாத் மொஹந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக S.N.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழுவின் உறுப்பினராக Zoho நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – அஜித் தோவல்.

BEML-ன் புதிய நிர்வாக இயக்குநராக சுரங்கம் மற்றும் கட்டிட பணி இயக்குநராக பணியாற்றும் M.V. ராஜசேகருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய ரிஷி குமார் சுக்லா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இடைக்கால இயக்குநராக பிரவீன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றத்தின் நீதிபதியான திரு. புலிகோரு வெங்கட சஞ்சய் குமாரை, மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.

இந்தியாவிற்கான Google Cloud – ன் நிர்வாக இயக்குநராக பிக்ரம் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த மாதம் ஆசிய பசுபிக் கிளவுட் பிரிவின் தலைவராக உயர்த்தப்பட்ட கரண் பாஜ்வாவிடமிருந்து இந்த பதவியை இவர் பெற உள்ளார்.

கூகுள் கிளவுட் அமைப்பின் தலைமையகம் : கலிபோர்னியா, அமெரிக்கா.

ரஷ்ய சூப்பர்மாடல் 'சூப்பர்நோவா' நடாலியா வோடியனோவா .நாவின் புதிய நல்லெண்ண தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் பணியாளர் குழு செயல் தலைவராக இந்திய அமெரிக்க விஞ்ஞானியான பாவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் "மலேரியா ஒருங்கிணைப்பு குழு"வின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் பஞ்சாபியை நியமித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தொழிலாளர் விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரணீதா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நுகர்வோர் நிதி பாதுகாப்பு வாரிய தலைவராக இந்திய அமெரிக்கரான ரோஹித் சோப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் (ம) முதல் ஆப்பிரிக்க தலைவராக நைஜீரியாவைச் சேர்ந்த கோஸி ஒகேஞ்சோ இவியாலா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

காணொளியை காண கீழே உள்ள Play பொத்தானை அழுத்தவும்.
மாதிரி வினாக்களை எழுதிப் பார்க்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
Print Friendly and PDF

Post a Comment

0 Comments