அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் குப்பை குறித்து புகார் அளிக்க மற்றும் குப்பைகளை அகற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி - CITIZEN
சென்னை மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க, குடிநீர் முன்பதிவிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி - TANKME
Whatsapp செயலிக்கு மாற்றாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள செயலி - Sandes
Sandes என்ற இந்தி சொல்லின் பொருள் Message
இந்தியாவில் இந்தியர்களால் Twitter செயலிக்கு மாற்றாக அறிமுகப்படுத்தியுள்ள செயலி - Koo
பாம்பை பற்றி அறிந்து கொள்ள, பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிப்பது பற்றி தெரிந்து கொள்ள கேரள மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் செயலி - Snakepedia.
நாட்டிலேயே முதல் முறையாக தனிநபரின் கார்பன் வெளியேற்ற தடத்தை கண்காணிப்பதற்காக சண்டிகர் அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் செயலி - Corban Watch
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்துள்ள செயலி - cVIGIL.
வங்கிகளில் பணியாற்ற வாடிக்கையாளர்கள் முக பாவனைகளை கண்டறிந்து சேவை செய்யும் வகையில், MAYA என்ற ரோபோவை கர்நாடக மாநிலத்தில் ஹிப்பாளியில் உள்ள பொறியியல் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இந்திய கடற்படைக்காக உருவாக்கிய THE VERTICAL Launch – Short Range Surface to Air Missile (VL-SRSAM) ஒடிசா சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் தனியார் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் - அக்னிபான்
உயிரி எரிபொருளால் இயக்கப்படும் உலகின் முதல் வணிகரீதியான ராக்கெட்டை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான bluShift Aerospace உருவாக்கியுள்ளது.
ஏவப்பட்ட ராக்கெட்டின் பெயர் – Stardust 1.0.
SpaceX நிறுவனமானது Inspiration 4 என்ற பெயரில், உலகின் முதல் முறையாக பொது மக்களுக்கான விண்வெளி பயணத் திட்டத்தை அறிவித்துள்ளது.
நாசா தனது SPHEREx Mission திட்டத்திற்காக விண்வெளி விமான நிறுவனமான SpaceX நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது.
நாசா' வின் முதல் கறுப்பின பெண் கணித நிபுணரான, கேத்தரின் ஜான்சனை கவுரவிக்கும் வகையில்,சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ள Cygnus NG-15 cargo என்ற விண்கலத்திற்கு S.S.கேத்தரின் ஜான்சன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியைச் சுற்றியுள்ள அமெரிக்காவின் முதல் சுற்றுப்பாதையின் 59 வது ஆண்டு நிறைவுடன் ஒத்துப்போனது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance rover) விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை வழிநடத்தும் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரக ஆய்விற்காக உலக நாடுகள் அனுப்பிய விண்கலங்கள்
Tiwanwen 1 - சீனா
Hope - ஐக்கிய அரபு அமீரகம்
Persivarance – அமெரிக்கா
Mangalyaan – இந்தியா.
சென்னை IIT மாணவர்கள் பைமோ (PiMO E - Bike) எனும் மின்சார பைக்கை உருவாக்கியுள்ளனர்.
AIDS நோயை குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்து சென்னை IIT உயிரி தொழில்நுட்பத்துறை விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
TIGER - X1 என்ற Ultimate Mobility Vehicle-யை Hyundai நிறுவனம் உருவாக்கியுள்ளது.
TIGER - Transforming Intelligent Ground Excursion Robot

0 Comments