விருதுகள் மற்றும் கௌரவங்கள்
பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
2019ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருதுகள்
பாரதி விருது – சீனி விஸ்வநாதன்.
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது – எஸ்.ராஜேஸ்வரி.
பாலசரஸ்வதி விருது – அலர்மேல் வள்ளி
2020ம் ஆண்டிற்கான தமிழக அரசின் விருதுகள்
பாரதி விருது – சுகி சிவம்.
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது – வாணி ஜெயராம்.
பாலசரஸ்வதி விருது – சந்திரா தண்டாயுதபாணி
2019ம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் ஜெ.ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது:
திரைத்துறை – பழம்பெரும் நடிகை சரோஜாதேவி
இசைத்துறை – பி. சுசிலா
நாட்டியத்துறை – அம்பிகா காமேஷ்வர்
2020ம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் ஜெ.ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது:
திரைத்துறை – சௌகார் ஜானகி
இசைத்துறை – ஜமுனா ராணி
நாட்டியத்துறை – பார்வதி ரவி கண்டசாலா
பிராணிகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றுக்காக அரும்பணியாற்றிய தனிநபர்கள், அமைப்புகளுக்கு 2021ம் ஆண்டிற்கான 14 பிராணி மித்ரா விருதுகளையும், ஜீவ்தயா விருதுகளையும் மத்திய கால்நடை, மீன், பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வழங்கினார். விருது பெற்றவர்கள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
பிராணி மித்ரா விருது (தனி நபர் பிரிவில்): யோகேந்தர் குமார்.
பிராணி மித்ரா சௌரியா விருது: மறைந்த கல்பனா வாசுதேவன் (கோவை), அணில் கந்தாஸ் (டெல்லி).
வாழ்நாள் சாதனையாளர் பிராணி மித்ரா விருது: சென்னையை சேர்ந்த புளூகிராஸ் நிறுவனர் மருத்துவர் சின்னி கிருஷ்ணாவுக்கும், கேப்டன் எஸ்.ஆர்.சுந்தரம் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.
ஜீவ்தயா விருது : டெல்லி தியான் பவுண்டேசன்.
ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் 12 பேருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஊழல் தடுப்பு சாம்பியன் விருது அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரதமரின் விவசாயிகள் தேசிய விருதுக்கு (PM Kisan National Award 2021) ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபுரமு மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Skoch Chief Minister Of The Year Award என்ற விருதானது ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச எரிசக்தி சுற்றுச்சூழல் தலைமை விருதானது பிரதமர் நரேந்திரமோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Sanctuary Lifetime Service Award, 2020 என்ற சர்வதேச சுற்றுச்சூழல் விருதானது தமிழகத்தைச் சேர்ந்த S.தியோடர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. Sanctuary Nature Foundation இந்த விருதை வழங்கியது.
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியத்தின் இயக்குநராக பதவி வகிக்கும் கௌசிக் பரூவாவிற்கு கம்போடிய அரசின் தேசிய விருதானது வழங்கப்பட்டுள்ளது.
‘வின்ட் ஹார்ஸ்’ என்ற தனது முதல் நாவலுக்காக சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருதை பரூவா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Miss India 2020 என்ற பட்டத்தை தெலுங்கானாவைச் சேர்ந்த மானசா வாரணாசி (23 வயது) வென்றுள்ளார்.
2021ம் ஆண்டிற்கான “வனவிலங்கு புகைப்படக்கலைஞர் விருது” ராபர்ட் இர்வின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ எனப் பெயரிடப்பட்ட இவரது புகைப்படத்திற்கு விருதானது வழங்கப்பட்டுள்ளது. (2020 ஆஸ்திரேலியாவில்)

0 Comments