ஜனவரி 2021 நடப்பு நிகழ்வுகள் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

அறிவியல் (ம) தொழில்நுட்பம்

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC January 2021 Current Affairs Science and Technology

இந்தியாவில் முதல் முறையாக 9mm Machine Pistal ASMI - யை இந்திய ராணுவம் DRDO வுடன் இணைந்து Make in India திட்டத்தின் கீழ் உருவாக்கியுள்ளது.

ASMI என்பதன் பொருள் : “Pride”, “Self-Respect” and “Hard Work

இந்தியாவின் DRDO மற்றும் இஸ்ரேலின் IAI இணைந்து Medium-Range Surface-to-Air Missile (MRSAM) எனப்படும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

IAI - Israel Aerospace Industries

DRDO - Defence Research and Development Organisation

DRDO அமைப்பின் ஆராய்ச்சி மையமான Imarat (RCI) வடிவமைத்துள்ள விமான எதிர்ப்பு ஆயுதம் (SAAW) முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு முக்கிய ஆயுதமாகும். இது ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

SAAW : Smart Anti-Airfield Weapon.

தயாரித்துள்ள நிறுவனம் : HAL.

பரிசோதனைக்கு பயன்படுத்திய போர் விமானம் : Hawk-i Mk132.

பயிர் நோய் கண்டறிதலில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் Crop Darpan என்ற செயலியை IIT ஹைதராபாத் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தோ-ஜப்பான் கூட்டு ஆராய்ச்சி ஆய்வக திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது.

Tiantong-1-03, என்ற Mobile Communication Satellite - யை சீனா Long March 3B/E என்ற ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ரஷ்யாவில் மீத்தேனில் இயங்கும் மறுபயன்பாட்டு ராக்கெட் எஞ்சினை தயாரித்துள்ளது. Amur-SPG medium-class carrier rocket என்ற இந்த ராக்கெட் ஆனது 50 முறை மீண்டும் பயன்படுத்த கூடிய வகையில் இருக்கும் என ரஷ்ய விண்வெளி நிறுவன வலைத்தளமான Roscosmos - ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசிசிப்பியில் உள்ள ஸ்டென்னிஸ் விண்வெளி மையத்தில், உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டின் நான்கு RS - 25 வகை எஞ்சின்கள் 8 நிமிடங்கள் இயக்கி நாசா சோதனையை மேற்கொண்டது. எட்டாவது முறையாக நடைபெற்ற இச்சோதனை மூலம் கடந்த ஓராண்டாக நடைபெற்ற Green Run சோதனை நிறைவுபெற்றது.

2024ம் ஆண்டு நிலவுக்கு ஆட்களை அனுப்பும் திட்டத்தை முன்னிட்டு இச்சோதனை முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இத்திட்டத்தில் நிச்சயம் ஒரு பெண் இடம்பெறுவார் என நாசா தெரிவித்துள்ளது.  

2024 நிலவு திட்டம் ஆணுக்கு ஒரு அடுத்தப்படியாக அமையுமென்றும், பெண்ணுக்கு மாபெரும் பாய்ச்சலாக இருக்குமென்றும் நாசா குறிப்பிட்டுள்ளது..

துருக்கி நாட்டின் Turksat 5A  என்ற செயற்கைக் கோளை SpaceX நிறுவனம் தனது Falcon 9 ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

அமெரிக்காவின் SpaceX நிறுவனமானது தனது Falcon 9 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 143 சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி புதிய உலக சாதனைப் படைத்துள்ளது.

SmallSat Rideshare Program கீழ் இந்த சாதனையானது நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

முன்னதாக,கடந்த 2017ம் ஆண்டு PSLV C-37 இராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி ISRO சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் இராணுவமானது Fatah – 1 என்ற ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

Shaheen III ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது.

இதுவே, அந்நாடு உருவாகியுள்ள ஏவுகணைகளில் மிக அதிக தொலைவுக்கு (2,750 கி.மீ) செல்லக்கூடியதாகும்.

கோவை ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ரூ 2.5 கோடி மதிப்பில் 'ஸ்ரீ சக்தி சாட்' என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர். இதனை PSLV C-51 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தவுள்ளனர்.

இந்தியா - வங்கதேசம் இடையிலான 50 ஆண்டுகால நல்லுறவு மற்றும் 2021 மார்ச் 26-ம் தேதி கொண்டாட உள்ள வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் கூட்டு முயற்சியில் செயற்கைக் கோள் தயாரித்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு 'வங்கம் - பாரத் மாணவர் செயற்கைக் கோள் எனப் பெயரிடப்பட உள்ளது.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் குளோபல் லா திங்க்கர் சொசைட்டி நிறுவனம் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் நடந்த இந்திய குடியரசு தின விழாவின்போது கையெழுத்தானது.

ரத்த குழாய்களிலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் போக்கை முறைப்படுத்தும் ஸ்டென்ட், இதயத்தின் அடைப்பை குணப்படுத்தும் கருவி முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

9 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள ID 2299 என்று  பெயரிடப்பட்ட கேலக்ஸி விரைவில் மடியவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments