ஜனவரி 2021 நடப்பு நிகழ்வுகள் – குறியீடு மற்றும் தரநிலை

குறியீடு மற்றும் தரநிலை

 பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

TNPSC January 2021 Current Affairs Rank and Index

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதே நிலையில், மூன்றாவது இடத்தில் இருந்த சீன தொழிலதிபரான ஜாங் ஷான்ஷான் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்

உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.

பட்டியலில் முதலிடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் ரோட்ஸ்டெர் கார் கடந்த 2018 ம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி என்ற ராக்கெட்டில் ஸ்டார் மேன் என்ற பொம்மை டிரைவருடன் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது.

இப்பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம் - Bloomberg.

2020 – ம் ஆண்டில் போற்றப்படும் நபர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதலிடம் பிடித்துள்ளார். 12 ஆண்டுகளாக இந்தப் பட்டியலில் முதலிடத்திலிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரண்டாம் இடத்தையும், தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள ஜோ பைடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதைப்போல, பெண்களுக்கான பட்டியலில் மிச்செல் ஒபாமா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் செல்வாக்கு மிகுந்த (ம) சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி- க்கு முதலிடம்.  

வெளியிட்ட நிறுவனம் : Morning Consult

Digital Evolution in Scorecard 2020க்கான மூன்றாவது பதிப்பை Tufts University's Fletcher School ஆனது MasterCard உடன் இணைந்து வெளியிட்டுள்ளது. இதில் விரைவாக டிஜிட்டல் மயமாக்கலில் "Breakout Economics" கீழ் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது.

உலகளவில் மிக வேகமாக வளரும் தொழில்நுட்ப நகரங்கள் பட்டியலில் பெங்களூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. Dealroom.co வின் தரவுகளின் படி, London & Partners நிறுவனம் இதனை கணித்துள்ளது.

ஐ.நா சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையில் வெளிநாட்டில் வாழ்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம்.

இந்தியர்கள் மொத்தம் 1 கோடியே 80 இலட்சம் பேர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

உலகிலேயே அதிகபட்சமாக அமீரகத்தில் 35 இலட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அடுத்ததாக, அமெரிக்காவில் 27 இலட்சம் இந்தியர்களும் , சவூதி அரேபியாவில் 25 இலட்சம் இந்தியர்களும் வசித்து வருகின்றனர்.

2000 முதல் 2020 ஆண்டுகளில் ஒரு கோடி இந்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.

Global Firepower Nations Index 2021 - ம் ஆண்டிற்கான பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

உலக நாடுகளின் இராணுவ பலத்தின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் இப்பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்த நாடுகள்

1) அமெரிக்கா

2) ரஷ்யா

3) சீனா.

நிதி ஆயோக் India Innovation Index - 2020 பட்டியலின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டுள்ளது.

பெரிய மாநிலங்கள் பிரிவில், முதல் 3 இடங்களைப் பிடித்த மாநிலங்கள்

1) கர்நாடகா

2) மகாராஷ்டிரா

3) தமிழ்நாடு

வட கிழக்கு மற்றும் மலை மாநிலங்கள் பிரிவில், முதல் 3 இடங்களைப் பிடித்த மாநிலங்கள்

1) ஹிமாச்சல் பிரதேசம்

2) உத்தரகாண்ட்

3) மணிப்பூர்

யூனியன் பிரதேசங்கள் பிரிவில் டெல்லியும், சிறிய மாநிலங்கள் பிரிவில் சண்டிகரும் முதலிடம் பிடித்துள்ளன.

Asia-Pacific Personalised Health Index 2020 - க்கான குறியீட்டு பட்டியலில் 11 ஆசிய பசிபிக் நாடுகளில் இந்தியா 10வது  இடத்தினை பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தையும், தைவான் இரண்டாமிடத்தையும், ஜப்பான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

Corruption Perception Index 2020 பட்டியலில் இந்தியா 86வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஊழல் இல்லா நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து மற்றும் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.

ஊழல் நாடுகளின் பட்டியலில் சோமாலியா மற்றும் தெற்கு சூடான் முதலிடம் பிடித்துள்ளது.

வெளியிட்ட அமைப்பு : Transparency International

2018ம் ஆண்டின் தகவலின் படி, உலக அளவில் அறிவியல் மற்றும் பொறியியல் கட்டுரைகள் வெளியிடுவதில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது.

சீனா மற்றும் அமெரிக்கா முறையே முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

வெளியிட்ட நிறுவனம் : National Science Foundation

16வது Global Climate Risk Index 2021 பட்டியலில் 2019 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தின் அடிப்படையில் இந்தியா மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்: மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் பஹாமாஸ்.

கொரானா பரவலை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடம் பிடித்துள்ளது.

98 நாடுகளில் நடத்திய கணக்கெடுப்பின்படி இந்த பட்டியலில் இந்தியா 86வது இடத்தைப் பிடித்துள்ளது.

நமது அண்டை நாடான இலங்கை 10வது இடத்தைப் பிடித்துள்ளது.

வெளியிட்ட நிறுவனம் : Lowy Institute, Sydney.

டாடா அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட 2வது பதிப்பான India Justice Report 2020-ன் படி பொது மக்களுக்கு நீதி வழங்குவதில் சிறப்பாக செயல்படும் 18 பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில் முதல் 5 இடங்களைப் பிடித்த மாநிலங்கள் பின்வருமாறு :

1) மகாராஷ்டிரா

2) தமிழ்நாடு

3) தெலுங்கானா

4) பஞ்சாப்

5) கேரளா

சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்கள் பின்வருமாறு :

1) திரிபுரா

2) சிக்கிம்

3) கோவா

4) இமாச்சலப் பிரதேசம்

5) அருணாசலப் பிரதேசம்

 

Print Friendly and PDF

Post a Comment

0 Comments